பள்ளிகளை மூடி
கடைகளை அடைத்து
வீட்டில் காய்கறி, பால் ரொட்டி குவித்து
சினிமா, பாடல்கள் தேர்ந்தெடுத்து வைத்து
பஜ்ஜி, பலகாரம் செய்து
பனி வரும் என்ற ஆவலும் பயமும் கலந்த எதிர்பார்ப்பில்...
ஒரு வழியாக 50 வது பதிவை பதிவிட காலம் துணை செய்திருக்கிறது.
புதுவருடத்தில் பலரும் பலப் பல உறுதிமொழி எடுக்கும் இத்தருணத்தில் நம்முடைய வளைப்பூ இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தால், ஆச்சர்யமாக சிலர் இன்னமும் இந்த வளைப்பூவில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை சற்று நெருடலாக இருக்கிறது. அதிலும் Sheung Wan லிருந்து (இந்த இடம் ஹாங்காங்கிலிருப்பதாக தெரிய வருகிறது) ஒருவர் இந்த வளைப்பூவில் உலாவியிருக்கிறார். அவரது துரதிஷ்டத்திற்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு, அடுத்த வேலைக்கு செல்லலாம். சென்னை மற்றும் கடலூரில் வெள்ளம் நாஞ்சில் சம்பத்தின் பேட்டி பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும். பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……