நிறைய நேரம் மூளையை கசக்கி பிழிஞ்சு யோசிச்ச பிறகும் கூட 'stereotype' கான தமிழ் வார்த்தை என்னனு தெரியல. அதனால இந்த பதிவோட புரிதலுக்காக ‘stereotype' னே எழுதறேன். உலகத்துல எத்தனையோ விஷயத்துக்கு இது இப்படி தான் இருக்கணம் அப்படிங்கற முத்திரை இருக்கு. ஒன்னு அதுலேருந்து மாறுப்பட்டாலும் அத பத்தி முழுசா தெரியாத மக்கள் அந்த விஷயத்துக்கு அந்த முத்திரையை குத்த தான் போறாங்க. உதாரனத்துக்கு என்னுடைய தாழ்மையான கருத்தை பொருத்தவரை 80 சதவிகிதத்துக்கும் மேலான ரிச்மன்ட்'ல ஓடற car'களோட நம்பர் ப்லேட்'ல எதாவது விசித்திரமான customized text இருந்தா அது இந்தியர்களோட
car தான்.
எதுக்காக இப்படி வேலை எல்லாம் விட்டுட்டு ரூம் போட்டு உக்காந்து யோசிச்சு car'க்கு பேர் வைக்கணம்? உடன் வேலை பாக்கற ஒருத்தர் வேறு ஒரு அமெரிக்க மாகானத்திலேருந்து ரிச்மண்ட்'கு வந்துருக்கார். அவர் சொல்றார், எல்லா ஊர்கள காட்டிலும் ரிச்மண்டில் customized car name plate போடறதுக்கான செலவு குறைச்சல். இப்படி சிறமப்பட்டு ஒரு பேர வச்சு, பல பேர் ரோட்ல car ஓட்டும் போது இது என்னவா இருக்கும்'னு cerebrum'அ சுருக்கி யோசிக்க வேண்டி வேற இருக்கு. 'ரேவதி'னு number plate'ல போட்டா அந்த car ஓட்டற அம்மாவோட பேரு 'ரேவதி'னு நினைச்சிக்கறதா இல்ல அந்த car சொந்தகாரருக்கு பிடிச்ச ராகம் 'ரேவதி'னு நினைச்சிக்கறதா? இப்படி எவனோ ஒருத்தன் car'ல ஏதோ பேர போட்டான்'கறதுக்காக ஊர்ல இருக்கற அத்தனை பேரும் எதாவது பேர் போட்டுக்கனமா? பல பேர் ஒரே விஷயத்த திரும்ப திரும்ப செய்யறச்சே அது அந்த இடத்துல ஒரு 'stereotype' பிறக்க வழி செய்யும்.
Anyway தலைப்புக்கு வரேன். இந்த மாறி stereotype fix பண்ணறதுல
அதிகபட்சமா நம்ம கைல மாட்டி படாதபாடு பட்ட ஒரு ஆள் இந்திரன். தேவர்களுக்கெல்லாம் தேவன் மகாராஜன் தேவேந்திரன். அந்த தேவராஜன் "தேவராஜமதிராஜமாஷ்ரயே"னு எப்பேர்பட்ட சிறப்புடைய காஞ்சி தேவபெருமாளோட பெயரையே கொண்டவன். உலக்த்துல வேறு எந்த ராஜாவுக்கும் இப்பேர்பட்ட 'cliche' இருக்காது.
நாடக, திரைப்பட வரலாற்றுலையே ரொம்ப stereotype பண்ணப்பட்ட
கதாபாத்திரம் தேவேந்திரன் தான். இந்தியால தேசிய அளவு
channel 'லேருந்து cable tv operator local channel வரை தொலைகாட்சி தொடர்களான ராமாயணம், மகாபாரதம்,
ஜெய ஹனுமான், ஸ்ரீ க்ருஷ்ணா, ஓம் நமஷிவாயா முதல் ஸ்வாமி ஐயப்பன், பாலாஜி, கணபதி வரை எல்லாமுமே தேவராஜனை குறைச்சு தான் எடை போட்டு
காமிச்சுருக்கு. அவர்
எப்போதுமே தேவலோக அழகிகளோட cultural நிகழ்ச்சிகளையே பாத்துக் கொண்டிருக்கிறார்.
எப்போதும் எதையாவது
முட்டாள் தனமா செஞ்சு தன்னோட பதவி, புகழ் எல்லாத்தையும் இழக்கிறார். கோடான கோடி தேவர்களின் அரசன்
மாபலம் பொருந்திய ஐராவதத்தின் காவலன் எபோதுமே கோழையை போல பயந்து பயந்து ஓடறார். அவருடைய அறிமுக காட்சி எப்போதுமே
தற்கால தமிழ் படங்கள் மதுபான கடை location'ல ஆரமிக்கற மாதிரியே இருக்கு. அவர் எப்போதுமே
எந்த குட்டி அசுரன கூட ஜெயிகரதில்லை. அசுரன், அசுரனோட அக்கா பையன், அசுரனோட சித்தி
பையன், ஒன்னு விட்ட தாத்தா பொண்ணு அசுரன்னு எல்லார் கிட்டயுமே தோற்று போறார்.
எப்பேர்பட்ட சக்திமான், தேவலோக சூப்பர் ஹீரோ - அவரோட வீரம், விஜயம், பெருந்தன்மை, கருணை இன்னும் பல பெருமைகள் எல்லாத்தையும் சித்தரிகர மாதிரி ஒரு நாடகம் எடுது இந்த கார் number plate ரிச்மண்ட்'லேருந்து உலகத்துக்கு உணர்த்தனம். அதுக்கு ஒரு தயாரிப்பாளர் வேணும். உங்களில் யார் அடுத்த producer? ங்கற இந்த கேள்வியோட இந்த பதிவ நிறைவு செய்றேன்.
மீண்டும் சந்திப்போம்,
vgr
வாங்க VGR. ரொம்ப நாளுக்குப்பறம் சுவாரஸ்யமான பதிவு...
ReplyDeleteரிஷிபத்தினிகள் கூட சில்மிஷம் பண்ற இந்திரனின் 'மாறா நிலையை' விட்டுட்டீங்களே?
http://dictionary.tamilcube.com/
கார் லைசன்ஸ் நம்பர்களிலேயே மடத்தனமானதாக நான் கருதுவது, காரின் மாடல் போட்ட பேருதான். ப்ரையஸுக்கு ப்ரையஸ்னு நம்பர் ப்ளேட் ரொம்ப முக்கியமா? காசு ரொம்ப இருந்தா தெருவுல வீசிட்டு போகலாம். அதுக்குதான் நாகுன்னு நம்பர் ப்ளேட் போட்டுக்கனும். எதுக்கு நாகுன்னு எல்லாம் கேள்வி வராது :-) சில பேர் அதையும் Nag U னு படிக்கலாம். அவர்களுக்கு இந்த பிறவியில் விமோசனம் இல்லையாம்.
கார் நம்பர் ப்ளேட்டுகளிலேயே சூப்பர் நம்பர் ப்ளேட் இதுதான்.
ReplyDeleteFEATURE - ஒரு வோக்ஸ்வாகன் பீட்டில் காருக்கு. இது ஆணி பிடுங்கும் குலத்துக்குத்தான் புரியும் என்று நினைக்கிறேன்.
நன்றி நாகு Sir. படித்ததற்கு. So 'stererotype' கு 'மாறா நிலை' ன்னு பேரா. இது 'stable'கு பொருந்தும் போல இருக்கு. நீங்களும் காருக்கு பேர் வச்சாச்சா. உங்கள பத்தி உயர்வா நெனச்சேனே :)
ReplyDeleteகாருக்கு பேர் வச்சிருந்தேன். புள்ளையாண்டான் மாத்திட்டான்.
ReplyDeleteஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் வார்த்தை தேடினால், நீர்வீழ்ச்சி கதைதான் நடக்கும். சரியான பிரயோகம் தேடவேண்டும். Try 'concept'.
ReplyDelete