Ca2+(aq) + 2 Cl−(aq) + 2 Ag+(aq) + 2 NO3−(aq) → Ca2+(aq) + 2 NO3−(aq) + 2 AgCl(s)
என்னடா இது 'ப்ரேக்கிங் பாட்' நாடகத்தோட 'டைட்டில் க்ரெடிட்ஸ்' மாதிரி இருக்கே-னு யோசிக்கிறீங்களா?
இது தான் என்னோட தற்போதய ‘state of mind’. ஏன் என் மன நிலை இந்த ‘complex chemical equation’ மாதிரி கொழம்பி இருக்கு. அதுக்கு காரணம் என்ன?
'நுணலும் தன் வாயால் கெடும்'–னு சொல்ற மாதிரி நானே என்னை மாட்டி விட்ட கதையா, தமிழ் சங்க பதிவுல எதாவது எழுதலாமேனு தீர்மானிச்சு தான் தாமதம். உடனடியா நான் கண்டுப்பிடிச்சது எனக்கு ‘creative block’டிஸிஸ் இருக்கறது... அதென்ன ‘creative block’? அதெல்லாமா வரும்?
அப்படி என்ன பெரிய எழுத்தாளர் நீ?
உலகத்துல எங்கும் இல்லாத எழுத்தாளர்? – னு
நீங்க பராசக்தி styleல கேக்கறது புரியுது.சொல்றேன் சொல்றேன்...மேல படிங்க...
சரி எடுத்த கார்யத்தை முடிப்போம்'னு எழுத உட்கார்ந்தேன்...முதல்ல யோசனை வந்தது... தற்போதய சூடான செய்திகள்'ல வர இந்திய தேர்தல் பத்தி எதாவது எழுதலாம்....ம்ம்ம்... இந்திய தேர்தல் பத்தி எழுதுறதுனா ஸ்டாலின் சொன்ன 3 பேரு-ல ஒருத்தர பத்தி கண்டிப்பா எழுதனம். அவர பத்தி என்ன ஏற்கனவே எழுதல நான் புதுசா எழுதறதுக்கு...? மறுபடியும் யோசிச்சேன்... "மோடியும் அவரது வெள்ளை தாடியும்" அப்படினு தலைப்பு போட்டு முதல் பதிவு எழுதலாம். ஆனா போயும் போயும் ஆறம்பிக்கறது தான் ஆறம்பிக்கறோம் வெள்ளை தாடிய பத்தியா எழுதனம். எதாவது மங்களகரமா சிவப்போ மஞ்சள் நிறத்திலயோ இருந்தா கூடா பரவால்ல....அதுவும் இல்லேனா... அவர் தாடி ஏன் வைத்தார்...தற்போதைய இந்திய பிரதமர் மாதிரி இருபார்'னு சொல்றதுக்கா? இல்ல வெள்ளை தாடி வெச்சவன் எல்லாம் இந்திய பிரதமர் ஆகலாம்'னு சொல்றதுக்கா? ஒரு பத்து நிமிஷம் யோசிச்சேன் அதுக்கு மேல எதுவுமே தோனல...
சரி வேறு எதாவது எழுதலாம்னு எல்லா மொழி படங்களிலும் காமிக்கற மாதிரி...paperஅ சுருட்டி தரையில கீழ போட்டு புதுசா ஒரு வெள்ளை தாளை எடுத்தேன்... ஏன் எழுத்தாளர்கள காமிக்கனம்'னு நினைக்கற எல்லா படங்களிலும் கண்டிப்பா அந்த writer ஒரு paperஅ சுருட்டி போடற காட்சி வைக்கறாங்க? என்ன காரணமா இருந்தாலும் paper சுருட்டி போட்டா தான் writer’னு முடிவானதுக்கப்பறம் நானும் செய்யலேன்னா எப்படி? புதுசா இருக்கற வெள்ளை தாள்ல 'முக புஸ்தகமும் முதியோர் கல்வியும்' னு ஒரு தலைப்ப போட்டு ரெண்டு கோடு கீழ போட்டு underline பண்ணிணேன். எனக்கு இந்த 15 நிமிஷத்துல மனசுல வந்த ஆங்கில வார்த்தைகள்ல கணகச்சிதமா தமிழுக்கு ‘மொழி மாற்றம் செய்ய தெரிஞ்சது இந்த முக புஸ்தகம் மட்டும் தான். சரி..சரி...தலைப்புக்குள்ள போறேன்...ஏன் இந்த முக புஸ்தகத்துலேருந்து இளம் users எல்லாம் ஓடி போறாங்க'னு சமீபத்துல ஒரு செய்தி படிச்சேன். அதுல நிறைய தாத்தா பாட்டிகள் வந்து அவங்களோட தம்பட்ட புராணத்த எழுதர்துனாலயாம். முக புஸ்தகத்த படிக்கிறதுக்கு கீதா புத்தகத்தையோ, பகவத் பாகவதத்தையோ படிச்சா புண்யமாவது சேருமே... முக புஸ்தகம் ஏன் டம்ப வர்ஜனம் பண்ர இடம் ஆச்சு? நம்ம அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான ‘values’ கொடுக்கிறோம்? யோசிச்சு பாத்தா...’social anger' தான் வருது... எழுதறதுக்கு எந்த சமாசாரமும் வரல...அதுவும் இல்லாம இது ரொம்ப ‘sensitive subject’அ இருக்குமோ... முதல் post... குறைந்த பட்சம் ஒரு 10 பேராவது படிக்க வேன்டாமா? அதையும் ஏன் கெடுப்பானே'னு நெனச்சு இந்த தலைப்பையும் சுருட்டி கீழ போட்டேன்... என்ன…. "லுடேரா" படுத்துல வர சோனாக்ஷி சின்கா வுக்கு அவ வீட்டு வேலை பாக்ற அம்மா வந்து சுருட்டி போட்ட paper எல்லாம் எடுத்து குப்பை தொட்டில போடும்... நம்ம வீட்ல நம்மளயே இல்ல குப்ப தொட்டில போடுவாங்க... அதனால நான் சுருட்டி போட்ட ரெண்டு paperயும் நானே குப்பை தொட்டில போட்டிட்டு... இனிமே "போ பச்சை"(Go Green) எழுத்தாளரா இருக்கலாம்னு முடிவு மட்டும் பண்ணிணேன்.
இரண்டு முறையும் தோல்வி...மூன்று முறை முயன்றால் முடியாததே இல்லை'னு முப்பத்து முக்கோடி தேவர்கள்ளேருந்து முப்பது வயசு முட்டாள் வரை எல்லாருக்குமே தெரியுமே...அதனாலே திரும்பவும் எழுத முயற்ச்சி பண்ணேன்...
ரிச்மண்ட் தமிழ் சங்கம் வலைபூவில எழுதறோம். பேசாம ரிச்மண்ட பத்தியே எழுதினா என்ன? "ரிச்மண்டில் மாம்பழ ஸீசன் - இந்த முறை வருமா வராதா..."? நல்ல தலைப்பு...எல்லா audience கும் போய் சேரும்... gender neutral... யார் மனதையும் புண்படுத்தாது...இது தான்டா தலைப்பு'னு முடிவு பண்ணி எழுத தொடங்கினேன். ஏன் ரிச்மண்டில் இந்த முறை வெயில் காலம் வரவே இல்லை? மே மாசமே வந்தாச்சே...இன்னும் மழையும் குளிரும் ஏன் இருக்கு? என்னிக்கி ‘sweat shirt’ போடாம வெளியில போக முடியும்? ஒரு வேளை இது எல்லாத்துக்கும் காரணம் "Global Warming" ஆ இருக்குமோ... அதே தான்...கண்டிப்பா "Global Warming" தான் காரணம். ஆனா அத எப்படி என் பதிவுல விளக்கி சொல்றது? இந்த மாதிரி அறிவியல் பத்தி எல்லாம் பேசனம்னா கொஞ்சம் புத்திசாலியா இருக்கனமே? நமக்கோ "Global Warming"கு தமிழாக்கம் என்னனு கூட தெரியல... நம்ம எப்படி இத பத்தி எழுத முடியும்..ஒரு வேளை இதுவும் நமக்கு தோதான தலைப்பு இல்லையோ....மறுபடியும் ஒரு 15 நிமிஷம் உக்காந்து யோசிச்சேன்... ஆரம்பிச்ச இடத்துகே வந்துடேன்..."Creative block”. ஆமாம் அதுனால தான் எதுவும் புதுசா தோனல...இல்லைனா கண்டிப்பா நல்ல கருத்து சொல்லிருக்கலாம்...
ஆனா Chemistry'ல ஆரம்பித்து Science'ல முடிச்சிருக்கேன்.. முன்னுரையும், முடிவுரையும் பொருந்துதே... அப்போனா இதுவே கட்டுரை இலக்கணத்துக்கு சரியா வருமே...பேசாம இதயே ஒரு பதிவா போட்டுட்டு..அடுத்த தடவைக்குள்ளவாது எதாவது உருப்படியா எழுத முடியுமான்னு பாக்கலாம்.
நல்ல யோசனை'னு இறைவனையும் இணையதள எழுதாளர்களையும் வணங்கி இந்த 'post'அ 'submit' செய்கிறேன்.
தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல விதமான ‘spelling mistakes’ களையும், ‘grammatical errors’யும் பொறுத்தருள வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
மிக்க நன்றி...கூடிய விரைவில் சந்திபோம்...
Wednesday, April 30, 2014
Sunday, April 27, 2014
கணவனின் பார்வையில்!!!!
கல்லூரிக் காலத்தில்
குடும்பம் பற்றிப்
பல
கனவுகள்
குறிப்பாக மனைவி
புடவை உடுத்தி
பொட்டு வைத்து
பின்னல் இட்டு
பூ முடித்து
கூட்டுக் குடும்பதில்
அமைதி அடக்கத்துடன்
அனைவரையும் கவர்ந்தாள்
கனவில் அவள்
பேசியதேயில்லை
பேசியிருந்தால்
பித்தம் அன்றே தெளிந்திருக்கும்
கனவு கல்யாணம்
வரை
தொடர்ந்தது
உள்ளுர் ஜோதிடரின்
தயவால்
மணநாளும்
வந்தது
விடுப்பெடுத்து விமானம்
ஏறி
ஊர்
கூட்டி
உறவுகள் சூழ
அவள் கரம் பற்றிக் கணவனானேன்
மணமேடையில் அவள் தலை தாழ்த்தி
நின்றது
அடக்கத்தாலோ அச்சத்தாலோ
அல்ல
அணிந்திருந்த மாலை நகைகளின்
பாரத்தால்
என்பது போகப் போக புரிந்தது
வீட்டில்
தாய் தந்தை அவளிடம்
பரிவு
காட்ட
அவளும் அவர்களிடம் பாசத்தைக் கொட்ட
இல்லற இன்பத்தை
இதயம் முழுக்க
அனுபவித்தேன்
வீட்டின் சிரிப்பொலிக்கு
வினை விருந்துருவில்
வந்தது
வீட்டிற்குப் புதிதாக வந்த ஓட்டைக் கைப்பற்ற
விருந்திற்கு அழைத்தனர்
உறவினர்கள்
விருந்தறையில் நான் மட்டும்
வீற்றிருக்கச்
சமையலறையில்
என் குடும்ப
சரித்திரத்தைச்
சத்தமில்லாமல் அவளிடம்
வாசிக்க
அதில் என்
காதில் விழும்படி
சொல்லப்பட்ட
கடைசி வரி
இவன் மட்டும்
நல்லவன்
வீட்டில் அதுவரை
பூத்துக்குலுங்கிய
அவளின் புன்சிரிப்பு
விருந்திற்குப் பின்
புன்னகையாய் சுருங்கியது
விடுப்பு முடிந்து
விமானநிலையத்தில்
வழியனுப்ப வந்த
அவள் வீட்டினர்கள்
அனுசரித்து நடக்கும்
அறிவுரையை
அவளிடம் கூறாமல்
என்னிடம்
கூற
அதிர்ச்சியோடு அவளுடன்
அமெரிக்கா திரும்பினேன்
முதல் நாள் மாலை
தனிமையின் கொடுமை
இனியில்லை என
தணியாத ஆர்வத்துடன்
தாமதிக்காமல் வேலை முடித்து
பூக்களோடு வீடு திரும்ப
அண்டை நாட்டு
அரசன் கைப்பற்றிய
அரண்மனை போல் வீடு
சூரையாடப்பட்டிருந்தது
படித்த புத்தகங்கள்
பழைய பாடல்கள்
படுக்கை விரிப்புக்கள்
பாதுகைகள்
பாத்திரங்கள்
பாதித் துணிமணிகள்
பார்வைக்குத் தென்படவில்லை
அவளைத் தவிர நான் ரசித்த
எதையும்
அவள் ரசிக்கவில்லை
என்பது
விளங்கியது
புதியன வாங்கப் புறப்பட்டோம்
அந்த அநியாயத்திற்கு
ஆங்கிலத்தில் Shopping என்று பெயர்
கடுங்குளிரிலும் கார் ஓட்டிக்
கடைகள் பல ஏறி இறங்கிக்
கதவை நான் திறந்து
பிடிக்க
அவள்
கால்களால் கடை அளந்து
கண்களால் பொருள்
அளக்க
நான்
கடிவாளம் கட்டிய
குதிரையாய்
அவள்
பின்
நடந்து
கால்கடுக்கக் காத்திருந்து
கடுங்கோபத்தைக் கட்டுப்படுத்தி
காலம் கடத்த
கடைசியில் கண்டதையும்
காட்டிக்
கட்டாயம் வேண்டுமென
அவள்
கூறக்
காரணமே தெரியாமல்
அனைத்தையும்
கணிப்பொறியில் கணக்கிட்டுக்
கடன் அட்டையில்
வாங்கிக்
கார் நோக்கி
நடந்த
என் கை முழுக்கக் குடும்ப
பாரம்
இதுவே வாடிக்கையாக
அதலபாதாள்த்தில் இருந்த
அமெரிக்கப் பொருளாதாரம்
அவ்வாண்டே மீண்டது
வீட்டில்
சீதனமாய்க் கொண்டு வந்த
சமையல் புத்தகத்தை
அவள் புரட்டிய
போதெல்லாம்
நான் சோதனைக்
கூட
எலியானேன்
கடுகினும் சிறிய பொட்டை
கவனிக்கத் தவறினாலும்
காதல் இல்லை
பாசம் இல்லை
போன்ற பழிச்சொற்களுக்கு
ஆளானேன்
அதுவரை
உலக செய்திகளை
மட்டுமே
உற்று கவனித்து
வந்த
நான்
அன்று முதல்
உடைந்த நகம்
உதிர்ந்த முடி
காதணியின் கற்கள்
காலணியின் அழகு
இவற்றையெல்லாம்
உன்னிப்பாய்க் கவனித்து
உடனுக்குடன் தெரிவித்தேன்
அவளைப் பற்றிய
விசயங்களில்
என்னோடு கலந்து
பேசி
அவளே முடிவு
செய்தாள்
என்னைப் பற்றிய
விசயங்களில்
முடிவு முன்பே
எடுக்கப்பட்டு
என்னிடம் அறிவிக்கப்பட்டன
இடைவிடாது பேசி
இடை இடையே கேள்விகளால்
என் கவனத்தை
அவள்
சோதிக்க
பதில் தவறானால்
பாடத்தைப் பாதியிலேயே
நிறுத்தி
அவள் பாரா முகம் காட்ட
பள்ளியிலே ஆசிரியை
பாடத்தை நிறுத்தினால்
ஆனந்தம் அடைந்த
நான்
பள்ளியறையிலோ
அதிர்ச்சியில் உறைந்தேன்
என் ஐம்புலன்களையும்
கூராக்கி
அக்கால குருகுல
சீடனைப்போல்
பாடத்தைத் தொடர மன்றாடினேன்
குற்றங்கள் அனைத்தும்
மன்னிக்கப்பட்டன
குறைகள் அனைத்தும்
மறக்கப்பட்டன
பிழைகள் அனைத்தும்
ரசிக்கப்பட்டன
மோகம் முப்பது
நாள்
ஆசை அறுபது
நாள்
தொண்ணூறு நாட்கள்
கழித்துத்
திருமணத்திற்கு பின்
முதல் முறையாக
மூளை தன் இருப்பை
உணர்த்தி
நான்
எத்தனை முறை ஏமாளியானேன்
என்ற எண்ணிக்கையை
எடுத்துரைக்க
எதிர்க்கத் தயாரானேன் நான்
துரும்பெல்லாம் தூணாக
வீடு போர்க்களமானது
அதுவரை கணவனாக
மட்டுமே
இருந்த
நான்
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
பிரதிநிதியாக ஆக்கப்பட்டு
ஆண் இனம் இழைத்த
அனைத்துக் கொடுமைகளின் பழியும்
என் மீது சுமத்தப்பட
சளைக்காமல் நானும்
அதைச் சமாளிக்கச்
சற்றும் எதிர்பாரா
நேரத்தில்
ஓர் அழிவு ஆயுதம் என்னைத் தாக்கியது
மூளையைச் செயல்
இழக்கச் செய்து
பேசும் ஆற்றலைத் தடுத்து
பயங்கர எரிச்சலை
எற்படுத்திய
அந்த ரசாயன ஆயுதத்திற்குக்
கண்ணீர் என்று பெயர்
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது
அதனினும் அரிது ஆசை இல்லாத பெண்
அதனினும் அரிது அழத் தெரியாத பெண்
அழுகைக்குப் பின்
படுக்கை அறையின்
பக்கத்து அறை அவளின்
தற்காலிகத் தாய்
வீடானது
அமைதி முயற்சிக்கு
நடந்த
அனைத்துச் சுற்றுப் பேச்சு வார்தைகளும்
தோல்வியில் முடிந்தது
சண்டையை முடிக்கச்
சரணடைவதைத் தவிர
வேறு வழியெதுமில்லை
என
என் பாழாய்ப் போன மனம் பரிதவிக்க
சரி என்ற
ஈறேழுத்து மந்திரத்தை
நான்
இடை விடாது
உச்சரிக்க
இல்லத்தில் அமைதி திரும்பி
குடும்பம் ஒரு கோவிலானது
நான் ஒரு கோமாளியானேன்
பழைய நண்பர்களைப்
புதிய கோணத்தில்
பார்க்க
வைத்தாள்
நண்பனின் மனைவியை
இவளுக்கு
பிடித்திருந்தால் மட்டுமே
நட்பு நீடித்தது
ஆசைப்பட்ட அனைத்தும்
வேண்டுமென அடம் பிடித்தாள்
வேண்டியது கிடைக்காவிட்டால்
வேலை நிறுத்தம்
மனைவி ஒரு மந்திரி
என்பதற்கு என்ன பொருள்
லஞ்சம் இல்லாமல்
வேலையேதும் நடக்காது என்று பொருள்
செலவைச் சமாளிக்க
நான் வீட்டுக்
கணக்கைக் கையில் எடுக்க
அவளோ
நான் வீட்டுக்கு
அனுப்பும்
கணக்கைக் கையில் எடுத்தாள்
இனி
சம்பள உயர்வைத்
தவிர
வேறு வழியில்லை
எனச்
சண்டையிட்டு நான் பெற்ற
சம்பள உயர்வை
தான் வந்த வேளை என்றாள்
முருகா ஈசா பெருமாளே
உணர்ந்தேன் உங்கள்
பெருமைகளை
அப்பப்பா ஒன்றுக்கே என் உயிர் பிதுங்க
இரண்டு கொண்டு
சமாளிக்கும்
நீங்கள்
எல்லாம்
கண்டிப்பா கடவுளப்பா!
மாதங்கள் பல உருண்டன
மணவாழ்வின் அடுத்த
கட்டம்
மனைவி கருவுற்றாள்
மகிழ்ச்சி மசக்கை
வரை
நீடித்தது
அவள் படும் அவஸ்தைகள்
ஆண்களுக்கு இல்லை
படைப்பின் பிழைக்கு
நான் பலியானேன்
இன்னல்களை இடைவிடாது
கூறி
நாளுக்கு
நாள் நச்சரிதத்தாள்
இடுப்பு வலிக்கு
இப்போதே பயந்தாள்
இனி வீட்டு
வேலை
இருவருக்கு போது என்றாள்
இட்ட வேலைகளைத் தட்டாமல்
செய்து
முடிக்க
என் இடுப்பு
அன்றே
வலி
கண்டது
பிரசவத்திற்கு அத்தை வர
பிழைத்தேன் நான்
தாயும் மகளுமே
ஆனாலும்
ஒரே வீட்டில்
இரண்டு பெண்கள்
இணக்கமாக வாழ்ந்தால்
அது எட்டாவது
உலக
அதிசயமாகத்தான்
இருக்க முடியும்
நான் தின்று
செரித்த
என் தாய் மண்னை மகனுக்கு
அடையாளம் காட்டும்
ஆவலில்
தாயகம் சென்றோம்
யார் வீட்டில்
எத்தனை
நாள்
என்னும் விடையில்லாக் கேள்விக்கு
மாமியார் மருமகளுக்கு
இடையிலான
பனிப்போர் பதிலானது
பெயரில் தான் பனி
நிஜத்தில் வெப்பம்
என்னை
தாக்கியது
பனிப்போர் பார்வைப்
போராகிப்
பின் சொற்போராய்
முடிந்தது
இறந்தகாலப் பண்பாட்டைத் தாய் கூற
எதிர்காலப் பெண்னுரிமையை இவள் பேச
இருவருக்கு இடையில்
சிக்கிய
என்
நிகழ்கால நிம்மதி
நாசமானது
தம்பிக்கு பெண் பார்க்க மறக்காமல் ஜோதிடரை மாற்றினார்கள்
விடுப்பு முடிந்து
திரும்பியதும்
விரைந்து பச்சை அட்டைக்கு
விண்ணப்பித்தேன்
நண்பர்களின் கேள்விக்கு
யாதும் ஊரே யாவரும்
கேளிர்
எனத் தமிழைத் துணைக்கழைத்தேன்
சிக்கல்கள் இருந்தும்
சிந்தையில் அவளே
சிம்மாசனம் இட்டு
வீற்றிருக்கக் காரணம்
வேதாளம் இல்லா
விக்கிரமன் வீண்
-வாசு சண்முகம்
மிசெளரி தமிழ்ச்
சங்கத்தின்
2004 ஆம்
ஆண்டு
முத்தமிழ்
விழாக்
கவியரங்கத்திற்காக
எழுதி வாசித்தக் கவிதை
Subscribe to:
Posts (Atom)