உ.பி மற்றும் 4 மாநில தேர்தல்கள்
உ.பி. தேர்தல் பலப் பல கூத்துகளுக்குப்
பிறகு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும்பான்மையான வித்யாசத்தில் வெற்றியை
அள்ளித் தந்து முடிந்திருக்கிறது. இவரது மகன்
அகிலேஷ் இந்தியாவில் குறைந்த வயதில் முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்று, சென்னையில்
ஒரு கிழவர் இன்னமும் தனது தொண்டுகிழத் தந்தையார் பதவி விலகக் காத்துகொண்டு இளைஞர் அணித்
தலைவர் என்ற பதவியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார், அவருடைய வயிற்று எரிச்சலை கொட்டிக்
கொண்டிருக்கிறார்.
தமிழகத்தின் மின்வெட்டு
வெளியில் நாத்திகம் பேசிக் கொண்டு வீட்டில்
சாமிகும்பிடும் திராவிட கட்சிகள் கூட கடவுளை பற்றிப் பேச வைத்திருக்கிறது தமிழகத்தின்
மின்வெட்டு.
தமிழக இடைத்தேர்தல்:
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவில்
அ.இ.அ.தி.மு.க மற்ற கட்சிகளை அனைத்தையும் அடித்து நொறுக்கி டெபாசிட் இல்லாமல் செய்து
பெற்றிருக்கிற வெற்றி பணம் கொடுத்து வந்ததா இல்லை ஜெ யின் ஆட்சியில் இருக்கும் நம்பிக்கையால்
வந்ததா என்று ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
இலங்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த
தீர்மானம் ஐ.நாவில் இந்திய ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது. இது செய்தி.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தற்போதைய
அதிபர் தயாராகி வரும் இந்த நேரத்தில் அவரை எதிர்க்கக் கூடிய தகுதியிருப்பதாக குடியரசுக்
கட்சியின் சார்பில் முன்னனியில் இருக்கும் மிட் ராம்னி அதிபருக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டுவார்
என்று நம்பும் பலரில் நாமும் ஒருவர்.
திரைப்பட
விமர்சனங்கள்
HUGO
HUNGER GAMES
WELCOME
ஹிந்திப்
படம்.
வேட்டை
ஒரு
கல் ஒரு கண்ணாடி.
உதயநிதி
ஸ்டாலினின் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
பித்தனின்
கிறுக்கல்கள் தொடரும் ......
பித்தன், முதல் மூன்று குறிப்புகளில் உங்களது திமுக துவேஷத்தைக் காட்டி இருக்கிறீர்கள். அதில் தவறொன்றும் இல்லை. உங்களது விருப்பம். என் கருத்துக்கள்.
ReplyDelete1 . அகிலேஷ் முதல் அமைச்சரானது ஒரு கண் துடைப்பு. முலாயத்தின் மூன்றாந்தர ஆட்சிதான் நடக்கிறது. கொலைக் குற்றவாளி சிறை அமைச்சரானது ஒரு சிறந்த விஷயம. முலாயத்தின் குடும்ப அரசியலைத் திட்ட உங்களுக்கு மனதில்லை, ஏதோ முலாயம் உ.பி.யின் சிறந்த ஒரு இளைஞரை அவர் தேர்ந்தெடுத்து இருப்பது போல புளகாங்கிதம் அடைந்து இருக்கிறீர்கள். அந்த சாக்கில் கிழவரைத் திட்டி இருக்கிறீர்கள்.
2 . மின் வெட்டு பற்றிக் கூறுவது உங்கள் குறிக்கோள் அல்ல, கருணாநிதியைத் திட்டுவதற்க்காகத் தென்னை மரத்தில் பசுவைக் கட்டி இருக்கிறீர்கள்.
3 . சங்கரன்கோயில் மட்டும் அல்ல, திருமங்கலம் உட்பட எல்லா இடைத் தேர்தல்களும் ஒரு ஏமாற்று வேலை. ஜெயலலிதாவின் ஆட்சியில் நம்பிக்கை? நல்ல நகைச்சுவை, நான் ரசித்தேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலிலும் நம்மிடம் உடன்பாடு இல்லை, நம் முதல் ஒட்டு தானைத் தலைவர் ஒபாமாவுக்கே.