Sunday, May 29, 2011

பித்தனின் கிறுக்கல்கள் – 42

டெல்லியில் தி.மு.க.

திஹார் ஜெயிலில் கனிமொழி அடைக்கப் பட்டாரோ இல்லையோ, எமக்கு சில நண்பர்கள் நேரிலும், தொலைப் பேசியிலும் “என்ன இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், இதைப் பற்றி கொஞ்சம் விலாவரியாக எழுதக்கூடாதா” என்று கேட்டு நான் என்னவோ சட்ட வல்லுனர்போலவும், நாம் சொல்வதை நம் வீட்டிலேயே யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதும் இல்லை என்ற உண்மை கிஞ்சித்தும் தெரியாமல், நாம் சொல்வது சரி என்று பாவம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை ஏமாற்றாமல் இதோ நம் பக்க கருத்து.

..................
முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்


2 comments:

  1. "நாம் சொல்வது சரி என்று பாவம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" -- இது கொஞ்சம் ஓவரா தெரியல? மாப்பு இன்னமுமா ஊரு நம்மல நம்பிகிட்டு இருக்கு? சரி சரி, அரசியல்ல இதெல்லாம் சாதாரணம். உங்க பழைய பல்லவி எல்லாம் பாத்தா ரொம்ப நாளா ஒரு பார்ட்டி மேல செம காண்டா இருந்து இப்ப மாட்டினவுடனே கத்திய போட்ட மாதிரி தெரியுது. பாப்பா அரெஸ்ட் ஆனவுடனே வூட்டுல சக்கர பொங்க வச்சு கொண்டாடினிகளா? மந்திரி சாவு எதிர்பாரா விபத்து தான்னு கண்டுபிடிச்சிட்டாங்க, உள் வேலை எது இல்ல போல. இப்பெல்லாம் பெருசு லெட்டர் எழுதறத விட்டுருச்சு. நீங்களாவது அப்பிடியே "அம்மா" வோட இலவசங்களையும், இன்ன பிற ஜெகதள பிரதாபங்களையும் பத்தி கொஞ்சம் கருத்து சொல்லறது?

    ReplyDelete
  2. சண்டியரே,
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. தாத்தா மீது எம்முடையை கோபம் சமீபத்தில் மாட்டினாருன்னு கத்தி போடும் நிலையில் இல்லை, அது 20-30 வருடங்களுக்கு முந்தைய கோபம், கணன்று கணன்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் வெளிவரும், மந்திரி இறப்பில் கஷ்டப்பட்டு ட்ரைவரையும் வண்டியையும் பிடித்திருக்கிறார்கள். சி.டி.சி.ஐ.டி ரிப்போர்ட் முழுவதும் வரட்டும். தாத்தா, திஹாருக்கும் சென்னைக்கும் அலைவதால் நல்ல வேளை கடிதம் எழுத முடியாமல், வீரமணி, அன்பழகன்னு அள்ளக்கைகளை விட்டு நாளுக்கொரு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு நாள் அவரையும் நாற்காலியோடு உருட்டிக் கொண்டுபோய் திஹாரில் ஆயுள் தண்டனை கொடுத்தால்கூட என் வீட்டில் இனிப்பு செய்ய மாட்டோம். அவர் த்ராபையாக இருப்பதால் நாம் நம்முடைய நிலையில் இருந்து இறங்க வேண்டிய அவசியம் இல்லை. அம்மாவின் இலவசங்களைப் பற்றி ஒரு சில வாரங்களில் கிறுக்கலாம் என்று இருக்கிறேன். நான் முன்பே சொன்னது போல் அவரும் ஊழலுக்கு அப்பாற்பட்டவரில்லை ஆனால், அவருடைய நிர்வாகத் திறமை எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரையும் விட மிக சிறப்பானது. அதிலும், தமிழை மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை காலங்களும் தமிழர்களை ஏமாற்றி வரும் தாத்தாவை விட பலமடங்கு புத்திசாலியான இவர் சில சமயங்களில் தனது வார்த்தைகளைக் கட்டுப் படுத்த முடியாமல் தடுமாறுகிறார். நேற்று சட்ட சபையில் ‘அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானதுதான், அது மீண்டும் உதயமாகாது’ என்று உளறியிருக்கிறார். தமிழகத்தில் மேல் சபை கொண்டு வராமல் இருக்க எத்தனையோ காரணங்கள் இருக்க தேவையில்லாமல் உளறியிருக்கிறார். இதையெல்லாம் தவிர்த்து விட்டு அவர் தமிழக மக்களுக்கு பல நன்மைகளைச் செய்யலாம்.

    பித்தன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!