Thursday, March 10, 2011

சிரிப்பு

என் தந்தை அழுவார் என்று எங்கள் கோமளவல்லி சொன்னால் கூட்டம் சிரிக்கிறது.
செந்தில் அழுதால் கவுண்டமணியுடன் சினிமா ரசிக்கிறது.
சில நேரம் நாம் அழ அழ சிரிக்க வைக்கிறார் ஆனந்த கண்ணீர் என்று
பிறர் அழ நாம் சிரிப்பதில் எத்தனை சந்தோசம் - இது காமெடி

பிறந்த குழந்தை அழுதால் தாய் சிரிக்கிறாள் சுகப்பிரசவம் என்று
குழந்தை அடித்து தாய் அழுதால் மழலை சிரிக்கிறது பாசாங்கு என்று
இதிலும் தான் எத்தனை சந்தோசம் - இது தாய்மை உணர்வு

குடிகாரன் சிரித்தால் குடும்பம் அழுகிறது
குடும்பஸ்தன் அழுதால் ஊரே சிரிக்கிறது
ஏழை அழ பணக்கரான் சிரிக்கிறான்
பணக்காரன் அழுதால் உலகம் சிரிக்கிறது
இதனை என்னவென்று சொல்ல --

பிறர் சிரித்து நாம் சிரித்தால் அது சிறப்பு
பிறர் அழ நாம் சிரித்தால் அது வெறுப்பு
குடும்பம் சிரிக்க நீ அழுதால் அது உழைப்பு
உலகம் சிறக்க நீ சிரித்தால் அது பொறுப்பு
உன் தாய் சிரிக்க நீ சிறந்தால் அதுவே உன் பிறப்பு.

வேதாந்தி

6 comments:

  1. //என் தந்தை அழுவார் என்று எங்கள் கோமளவல்லி சொன்னால் கூட்டம் சிரிக்கிறது.//

    சிரித்த கூட்டத்தில் என் தந்தையும் இருந்தார் அப்படீங்கறது தான் அதுல காமெடி வேதாந்தி. :-)

    சிரிப்பை இவ்வளவு ஜோரா அக்கு வேறு ஆணி வேறா ஆராயந்திருக்குற நீங்க ஏன் இந்த தலைப்புல ஒரு குட்டி research பண்ணி doctorate பண்ண கூடாது? டாக்டர் வேதாந்தி எங்க ஊர்காரர்னு நாலு பேருகிட்ட நாங்க பெருமையா சொல்லிக்கலாமே?

    ReplyDelete
  2. மீனா,
    உங்கள் "பின்" ஊட்டம் மிக அருமை. தேர்தல் வந்தாலும் வருது.
    டாக்டர் பட்டம் இலவசம் ன்னு சொல்லிட்டாங்களோ ?
    வடிவேல் சொல்லுற மாதிரி, எல்லோரும் என்னை சிரிப்பு டாக்டர்ன்னு
    சொல்லுவாங்களே. அதுனால அந்த ஆராய்ச்சி வேலை எல்லாம் வேணாம்.
    முதலில் நின்ற காமெடி (ஸ்டாண்ட் அப் காமெடி) ன்னு எழுதலாம் ன்னு தான்
    நினைத்தேன். அப்புறம் நீங்க எனக்கு நிறைய பட்டம் கொடுப்பீங்கன்னு பயந்து எழுதலை.

    வேதாந்தி

    ReplyDelete
  3. //என் தந்தை அழுவார் என்று எங்கள் கோமளவல்லி சொன்னால் கூட்டம் சிரிக்கிறது.//
    இது நல்லா இருக்கு. பித்தன், பரதேசி, வேதாந்தின்ற பேர்ல யார் யார் எழுதறாங்கன்னு கண்டுபிடிக்கறதுக்கு ஒரு கூட்டம் அலையுது. இவர் தெரிஞ்சவங்களுக்கு புனைப்பெயர் குடுத்து குழப்பறார். வேதாந்தம்னா சும்மாவா? :-)

    வேதாந்தம் படிச்சுட்டு நான் அழுதா யார் சிரிப்பாங்க?

    அழுவது,சிரிப்பது குறித்து நல்ல வேதாந்தம்தான். மேலும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நாகு,

    சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்
    நான் சிரித்துக் கொண்டே குழப்புகின்றேன்.
    சிலர் குழம்புவார், சிலர் புலம்புவார்
    நான் புலம்பிக் கொண்டே குழப்புகின்றேன்.
    கல்யாணத்துக்கு அப்புறம் காவி என்பது போல
    நமக்கு வேதாந்தம்.
    எல்லாம் ஒரு அனுபவம் தான்.
    விக்கிரமன் போல் தொடர முயற்சி செய்கிறேன்.
    யாரும் வம்பு பேச வரலை.
    வந்தா நமக்கும் கொஞ்சம் கருத்து கிடைக்கும்.

    வேதாந்தி

    ReplyDelete
  5. வேதாந்தி,

    சும்மா ஒரு குழந்தைக்கு சாக்கலேட் கொடுத்துட்ட் டக்குன்னு ஒரு கசப்பு மருந்து கொடுக்கரமாதிரி, சாதாரணமா ஆரம்பிச்சுட்டு கப்புன்னு கடைசில மெசேஜ் சொல்லிட்டீங்களே.

    நல்லாத்தான் ரூமு போட்டு யோசிப்பீங்க போலயிருக்கு.

    முரளி.

    ReplyDelete
  6. முரளி,

    நன்றி, ரொம்ப நல்லா சொன்னிங்க.

    கொடி எத்திவிட்டு சாக்லேட் மாட்டும் தர்றாங்க, மெசேஜ் சொல்ல மாட்டேங்கிறாங்க .

    உங்கள் மெசேஜ் நல்லா இருக்கு. நீங்க எப்ப சாக்லேட் தருவீங்க.

    உங்கள் பஹமாஸ் விஜயம் ரொம்ப நல்லாவே போகுது. நம்ம ஒரு நாடகம் போட்டு விடலாம்.

    வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!