Wednesday, September 16, 2009

தென்கச்சி சுவாமிநாதன்: அஞ்சலி

பிரபல தமிழ்ப் பேச்சாளர் தென்கச்சி சுவாமிநாதன் (63) இன்று காலமானார்.


அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி. தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகி சென்னை வானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[Information thanks to: thatstamil.com]

3 comments:

  1. இவருடைய இழப்பு நிஜமாகவே ஒரு பெரிய இழப்புதான். ஒரு சாதாரணமான குரலில் பல அசாதாரண விஷயங்களை பாமர மக்களுக்கும் கொண்டு சென்றவர். இவரது எளிமை என்னை கவர்ந்த ஒன்று. ஒருமுறை அவருடன் பல்லவன் பேருந்தில் அருகருகே நின்று கொண்டு பயணம் செய்த போது அவரிடம் கேட்பதற்கு பல இருந்தும் கேட்க நா வராமல் ஏதோ ஏதோ பேசிக்கொண்டு வந்தது நினைவுக்கு வருகிறது.

    அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பதினருக்கும் பல் ஆயிரம் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை ப்ரார்த்திப்போம்.

    முரளி.

    ReplyDelete
  2. avarai izhanthatharku azhuvatha, illai avar vazhntha intha kaalathil naamum vazhvatharku perumai padhuvatha yendru yennaku theriyavillai....

    doordharsanil avarin pechai kaalai 07:40 ku keetu valanthavan naan... naan matumalla, anegaamaaga thamizhagam matrum ulagam muzhuvathum...

    avarai pirinthu vaadum avarathu kudumbathaarku yenathu aazhntha varuthathai therivithu kolgiraen.

    avarathu aathma shanthi adaiyae naan kadavulai prarthikiraen.

    dhananjayan

    ReplyDelete
  3. அவரை இழந்ததற்கு அழுவதா, இல்லை அவர் வாழ்ந்த இந்த காலத்தில் நாமும் வாழ்வதற்கு பெருமை படுவதா என்று எனக்கு தெரியவில்லை....

    தூர்தர்சனில் அவரின் பேச்சை காலை 07:40 இற்கு கேட்டு வளர்ந்தவன் நான்... ஏன் நான் மட்டுமல்ல, அனேகமாக தமிழகம் மற்றும் உலகம் முழுவதும்...

    அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திகிறேன்.

    தனஞ்செயன்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!