ஒரு வங்கிக் கணக்கோ, அல்லது வீட்டுக் கணக்கோ எழுத வேண்டும் என்றால் (நீங்க அப்படி எதுவும் தப்பெல்லாம் செய்யறதில்லையா ? அப்ப நம்ம கூட்டாளி :))), முதலில் கட்டம் கட்டி, பார்டர் போட்டு, 'இன்ன தேதிக்கு பாலுக்கு இவ்வளவு, கீரைக்காரம்மா கிட்ட பேரம் பேசி வாங்கின காய்கறி இவ்வளவு' என்று கட்டங்களைத் தேடி தேடி எழுதுவோம். இரண்டாவது, வரிசையா எழுதிகிட்டு வந்து கடைசியில் (ஒரு குரூப்பா) பிரித்து மொத்தமா பால், காய்கறி என்று அந்த மாதத்திற்கு கணக்கிடுவோம். இந்த இரண்டாவது முறையை கையாண்டு எக்ஸெலில் ரொம்ப எளிதா, சில "க்ளிக் அண்ட் ட்ராக்" மூலம் முதல் முறையான கட்டங்களைப் பெறலாம். எடுத்துவிட்டேன் ரம்பத்தை என எகிறிவிடாதீர்கள் :) எழுத்தைக் குறைத்து, படங்களின் மூலம் பிவோட் டேபிளிலில் பயணிக்கலாம் வாருங்கள்.

தேதியிட்டு வரிசையா எழுதிக் கொண்டு வந்த கணக்கு. மொத்தத்தையும் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

"Insert" மெனுவை க்ளிக்கி, "Pivot table"ஐ செலக்ட் செய்யுங்கள். எக்ஸெல் 2003 எனில், Data மெனு.

கணக்கு பார்க்கும் பக்கத்திலேயே பிவோட் டேபிள் போட்டுக் கொள்வோம். அதனால், திறக்கும் குட்டி விண்டோவில், "Existing worksheet" க்ளிக்கி, செல் $E$2வில் க்ளிக்கிக் கொள்ளுங்கள்.

மாயாஜாலம் மாதிரி ஆங்காங்கே திறக்கும் கட்டங்கள் கண்டு பயந்துவிடாதீர்கள்.

வந்த கட்டங்களின் வலது மேலே, "Choose fileds to add to report"ல் அனைத்தையும் "டிக்" செய்து கொள்ளுங்கள். இவை முறையே "Row Labels" மற்றும் "Values" கட்டங்களில் பிரதிபலிக்கும். பிவோட் டேபிளும் தயார்.

தேதி வாரியாகப் பார்க்க, தேதியை "Row Label"ல் க்ளிக்கி "Column Label"ல் ட்ராப் செய்யுங்கள்.

தேதி வாரியாக, Nice and Beautiful Pivot table.

ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் எனில், டேட்டா ஏரியாவில் செய்யுங்கள். பின், பிவோட் டேபிளில் "Right Click" செய்து "Refresh" க்ளிக்கினால் போதும்.

மாற்றம் செய்யப்பட்ட பிவோட் டேபிள்.
மிகவும் பயனுள்ள தவகல், மிக்க நன்றி...
ReplyDeleteமிகவும் பயனுள்ள தவகல், மிக்க நன்றி...
ReplyDeletevery good post
ReplyDelete