Monday, September 14, 2009

அம்மா

அம்மா காட்டிய நிலாவும்,
அம்மா ஊட்டிய சோறும்
என்றுமே ஒருபடி உசத்திதான்.

யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை,
என் தம்பி மட்டும் விதிவிலக்கு.

எனக்கு பிகாஸோவெல்லாம் தெரியாது
மார்கழி மாதக் காலைகளில்
அம்மா போடும் கோலங்கள்தான் தெரியும்.

நவராத்திரியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அப்போதுதான் அம்மா அடிக்கடி பாடுவாள்.

அம்மா கோணலாய் இட்ட விபூதிக் கீற்றில்தான்
என் முகம் அழகாய்த் தெரிகிறது.

என் பரிட்சைகளுக்காக என்னிலும் அதிகமாய்
தூக்கம் தொலைத்தவள் அம்மா.

சிகப்பு நிற சேலைகள் அனைத்தும் அழகானவை
அம்மாவிடம் அவை நிறைய உண்டு.

நான் வேற்றூரிலிருந்து வருகையில்
'வாடா' என்று அழைக்கும் போது
கண்கள் பனிக்கும் போதே தெரியும்
எனக்காக காத்திருந்திருக்கிறாள் என்று.

அம்மா கோவிலுக்குப் போய் சாமி பார்ப்பாள்.
நான் வீட்டிலிருந்து அம்மா பார்ப்பேன்.
இரண்டிற்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசமில்லை.

எல்லா குஞ்சுக்கும் தன் காக்கை
பொன் காக்கை.
*******************************************************************************
இது நான் எழுதிய கவிதை இல்லை. கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பலப் பல வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு புதினத்தில் படித்தது, சமீபத்தில் கிடைத்தது. இதை இப்போது வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எழுதியவர் பெயர் நினைவில்லை மன்னிக்கவும்.

முரளி.
*******************************************************************************

5 comments:

  1. //அம்மா கோவிலுக்குப் போய் சாமி பார்ப்பாள்.
    நான் வீட்டிலிருந்து அம்மா பார்ப்பேன்.
    இரண்டிற்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசமில்லை.

    எல்லா குஞ்சுக்கும் தன் காக்கை
    பொன் காக்கை.//

    மறுப்பேதுமில்லை நண்பா............
    அருமையான பதிவு...

    ReplyDelete
  2. அம்மா, அம்மாதான். நன்றி முரளி.

    ReplyDelete
  3. அகல்விளக்கு,

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

    முரளி.

    ReplyDelete
  4. கவிநயா,

    அம்மா எல்லா உயிருக்கும் தவிர்க்க முடியாத சக்தி. அந்த பதிவில் அனைவரும் நமது தாயைக் காண முடியும். உன்னிகிருஷ்ணன் பாடல் ஒன்று உயிரும் நீயே உடலும் நீயே கேட்டால் நம் அனைவருக்கும் நம் அம்மாவின் ஞாபகம் கண்டிப்பாக வரும். எல்லா பாசத்தையும், அறுத்தெறிந்த பட்டிணத்தாருக்கு தாய் பாசம் மட்டும் போகாமல் தாய் மறைந்தவுடன் ஒரு பெரிய பாடல் பாடியிருக்கிறார். அது பற்றி பிரிதொருமுறை எழுதுகிறேன்.


    முரளி.

    ReplyDelete
  5. Murali,

    it is fantastic one. We can talk lot about "Amma". it brings tears for everyone.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!