Wednesday, April 30, 2014

முதல் பதிவு

Ca2+(aq) + 2 Cl−(aq) + 2 Ag+(aq) + 2 NO3−(aq) → Ca2+(aq) + 2 NO3−(aq) + 2 AgCl(s)

என்னடா இது 'ப்ரேக்கிங் பாட்'  நாடகத்தோட 'டைட்டில் க்ரெடிட்ஸ்' மாதிரி இருக்கே-னு யோசிக்கிறீங்களா?


இது தான் என்னோட தற்போதய ‘state of mind’. ஏன் என் மன நிலை இந்த ‘complex chemical equation’ மாதிரி கொழம்பி இருக்கு. அதுக்கு காரணம் என்ன?


'நுணலும் தன் வாயால் கெடும்'–னு சொல்ற மாதிரி நானே என்னை மாட்டி விட்ட கதையா, தமிழ் சங்க பதிவுல எதாவது எழுதலாமேனு தீர்மானிச்சு தான் தாமதம். உடனடியா நான் கண்டுப்பிடிச்சது எனக்கு ‘creative block’டிஸிஸ் இருக்கறது... அதென்ன ‘creative block’? அதெல்லாமா வரும்?


அப்படி என்ன பெரிய எழுத்தாளர் நீ?

உலகத்துல எங்கும் இல்லாத எழுத்தாளர்? – னு
நீங்க பராசக்தி styleல கேக்கறது புரியுது.சொல்றேன் சொல்றேன்...மேல படிங்க...

சரி எடுத்த கார்யத்தை முடிப்போம்'னு எழுத உட்கார்ந்தேன்...முதல்ல யோசனை வந்தது... தற்போதய சூடான செய்திகள்'ல வர இந்திய தேர்தல் பத்தி எதாவது எழுதலாம்....ம்ம்ம்... இந்திய தேர்தல் பத்தி எழுதுறதுனா ஸ்டாலின் சொன்ன 3 பேரு-ல ஒருத்தர பத்தி கண்டிப்பா எழுதனம். அவர பத்தி என்ன ஏற்கனவே எழுதல நான் புதுசா எழுதறதுக்கு...? மறுபடியும் யோசிச்சேன்... "மோடியும் அவரது வெள்ளை தாடியும்" அப்படினு தலைப்பு போட்டு முதல் பதிவு எழுதலாம். ஆனா போயும் போயும் ஆறம்பிக்கறது தான் ஆறம்பிக்கறோம் வெள்ளை தாடிய பத்தியா எழுதனம். எதாவது மங்களகரமா சிவப்போ மஞ்சள்  நிறத்திலயோ இருந்தா கூடா பரவால்ல....அதுவும் இல்லேனா... அவர் தாடி ஏன் வைத்தார்...தற்போதைய இந்திய பிரதமர் மாதிரி இருபார்'னு சொல்றதுக்கா? இல்ல வெள்ளை தாடி வெச்சவன் எல்லாம் இந்திய பிரதமர் ஆகலாம்'னு சொல்றதுக்கா? ஒரு பத்து நிமிஷம் யோசிச்சேன் அதுக்கு மேல எதுவுமே தோனல...


சரி வேறு எதாவது எழுதலாம்னு எல்லா மொழி படங்களிலும் காமிக்கற மாதிரி...paperஅ சுருட்டி தரையில கீழ போட்டு புதுசா ஒரு வெள்ளை தாளை எடுத்தேன்... ஏன் எழுத்தாளர்கள காமிக்கனம்'னு நினைக்கற  எல்லா படங்களிலும் கண்டிப்பா அந்த writer ஒரு paperஅ சுருட்டி போடற காட்சி வைக்கறாங்க? என்ன காரணமா இருந்தாலும் paper சுருட்டி போட்டா தான் writer’னு முடிவானதுக்கப்பறம் நானும் செய்யலேன்னா எப்படி? புதுசா இருக்கற வெள்ளை தாள்ல 'முக புஸ்தகமும் முதியோர் கல்வியும்' னு ஒரு தலைப்ப போட்டு ரெண்டு கோடு கீழ போட்டு underline பண்ணிணேன். எனக்கு இந்த 15 நிமிஷத்துல மனசுல வந்த ஆங்கில வார்த்தைகள்ல கணகச்சிதமா தமிழுக்கு ‘மொழி மாற்றம் செய்ய தெரிஞ்சது இந்த முக புஸ்தகம் மட்டும் தான். சரி..சரி...தலைப்புக்குள்ள போறேன்...ஏன் இந்த முக புஸ்தகத்துலேருந்து இளம் users எல்லாம் ஓடி போறாங்க'னு சமீபத்துல ஒரு செய்தி படிச்சேன். அதுல நிறைய தாத்தா பாட்டிகள் வந்து அவங்களோட தம்பட்ட புராணத்த எழுதர்துனாலயாம். முக புஸ்தகத்த படிக்கிறதுக்கு கீதா புத்தகத்தையோ, பகவத் பாகவதத்தையோ படிச்சா புண்யமாவது சேருமே... முக புஸ்தகம் ஏன் டம்ப வர்ஜனம் பண்ர இடம் ஆச்சு? நம்ம அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான ‘values’ கொடுக்கிறோம்? யோசிச்சு பாத்தா...’social anger' தான் வருது... எழுதறதுக்கு எந்த சமாசாரமும் வரல...அதுவும் இல்லாம இது ரொம்ப ‘sensitive subject’அ இருக்குமோ... முதல் post... குறைந்த பட்சம் ஒரு 10 பேராவது படிக்க வேன்டாமா? அதையும் ஏன் கெடுப்பானே'னு நெனச்சு இந்த தலைப்பையும் சுருட்டி கீழ போட்டேன்... என்ன…. "லுடேரா" படுத்துல வர சோனாக்ஷி சின்கா வுக்கு அவ வீட்டு வேலை பாக்ற அம்மா  வந்து சுருட்டி போட்ட paper எல்லாம் எடுத்து குப்பை தொட்டில போடும்... நம்ம வீட்ல நம்மளயே இல்ல குப்ப தொட்டில போடுவாங்க... அதனால நான் சுருட்டி போட்ட ரெண்டு paperயும் நானே குப்பை தொட்டில போட்டிட்டு... இனிமே "போ பச்சை"(Go Green) எழுத்தாளரா இருக்கலாம்னு முடிவு மட்டும் பண்ணிணேன்.


இரண்டு முறையும் தோல்வி...மூன்று முறை முயன்றால் முடியாததே இல்லை'னு முப்பத்து முக்கோடி தேவர்கள்ளேருந்து முப்பது வயசு முட்டாள் வரை எல்லாருக்குமே தெரியுமே...அதனாலே திரும்பவும் எழுத முயற்ச்சி பண்ணேன்...


ரிச்மண்ட் தமிழ் சங்கம் வலைபூவில எழுதறோம். பேசாம ரிச்மண்ட பத்தியே எழுதினா என்ன? "ரிச்மண்டில் மாம்பழ ஸீசன் - இந்த முறை வருமா வராதா..."? நல்ல தலைப்பு...எல்லா audience கும் போய் சேரும்... gender neutral... யார் மனதையும் புண்படுத்தாது...இது தான்டா தலைப்பு'னு முடிவு பண்ணி எழுத தொடங்கினேன். ஏன் ரிச்மண்டில் இந்த முறை வெயில் காலம் வரவே இல்லை? மே மாசமே வந்தாச்சே...இன்னும் மழையும் குளிரும் ஏன் இருக்கு? என்னிக்கி ‘sweat shirt’ போடாம வெளியில போக முடியும்? ஒரு வேளை இது எல்லாத்துக்கும் காரணம் "Global Warming" ஆ இருக்குமோ... அதே தான்...கண்டிப்பா "Global Warming" தான் காரணம். ஆனா அத எப்படி என் பதிவுல விளக்கி சொல்றது? இந்த மாதிரி அறிவியல் பத்தி எல்லாம் பேசனம்னா கொஞ்சம் புத்திசாலியா இருக்கனமே? நமக்கோ "Global Warming"கு தமிழாக்கம் என்னனு கூட தெரியல... நம்ம எப்படி இத பத்தி எழுத முடியும்..ஒரு வேளை இதுவும் நமக்கு தோதான தலைப்பு இல்லையோ....மறுபடியும் ஒரு 15 நிமிஷம் உக்காந்து யோசிச்சேன்... ஆரம்பிச்ச இடத்துகே வந்துடேன்..."Creative block”. ஆமாம் அதுனால தான் எதுவும் புதுசா தோனல...இல்லைனா கண்டிப்பா நல்ல கருத்து சொல்லிருக்கலாம்...


ஆனா Chemistry'ல ஆரம்பித்து Science'ல முடிச்சிருக்கேன்.. முன்னுரையும், முடிவுரையும் பொருந்துதே... அப்போனா இதுவே கட்டுரை இலக்கணத்துக்கு சரியா வருமே...பேசாம இதயே ஒரு பதிவா போட்டுட்டு..அடுத்த தடவைக்குள்ளவாது எதாவது உருப்படியா எழுத முடியுமான்னு பாக்கலாம்.


நல்ல யோசனை'னு இறைவனையும் இணையதள எழுதாளர்களையும் வணங்கி இந்த 'post'அ  'submit' செய்கிறேன்.


தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல விதமான ‘spelling mistakes’ களையும், ‘grammatical errors’யும் பொறுத்தருள வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.


மிக்க நன்றி...கூடிய விரைவில் சந்திபோம்...


10 comments:

  1. பரவாயில்லையே... சூட்டோட சூடா முதல் பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள். முதல் பதிவே ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்கு போயிருக்கு. மேலும் நிறைய எழுதுங்கள். எழுதத் தோணாத பத்தியே இவ்வளவு எழுதியிருக்கீங்க. உங்கள் பதிவும் மோடி தாடி மாதிரி குறுகாமல், மன்மோகன் சிங் தாடி மாதிரி நீண்டு வளர வாழ்த்துக்கள்.

    // 'முக புஸ்தகமும் முதியோர் கல்வியும்' //
    என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே?
    // டம்ப வர்ஜனம்//
    அர்த்தம் லேசாகப் புரிகிறது. ஆனால் இந்த பிரயோகம் நான் கேள்விப்பட்டதில்லை.

    ரொம்ப கொழம்பியிருக்கீங்கன்னுதான் நினைக்கிறேன். வேதி சமன்பாட்டில் கழித்தல் குறி எல்லாம் வருகிறது? :-)

    ReplyDelete
  2. நாகு சார், 10 பேராவது படிக்கணம்'னு நினைத்தேன். நன்றி. இன்னும் 9 பேர் பாக்கி. 'இந்த நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே'னு மெகா ஸீரியல்ல சொல்ற மாதிரி என் பதிவில் வரும் கதாபாத்திரங்கள் எந்த நபரையோ பொருளையோ குறிப்பிடுவன இல்லை :)

    -vgr

    ReplyDelete
  3. 10 பேரா, அப்போ ரிச்மண்ட் தமிழ் சங்க பொதுக் குழுல இருக்கர அத்தனை பேரும் படிக்கனுமா? சொல்லவே இல்லை.

    விஜிஆர், நல்லா இருக்கு உங்க ஸ்டைல். தொடர்ந்து எழுதுங்க.

    முரளி

    ReplyDelete
  4. முரளி, என்னுடைய குறிக்கோளை 10-2 ஆக்கியமைக்கு மிக்க நன்றி :) 10 பேர் ரொம்ப குறைச்சலான number'னு நெனச்சு தான் target பண்ணினேன். இப்போ தான் தெரியுது target 2'னு வச்சுருக்கனம்'னு :) என் வீட்ல எப்படி நான் சொல்றத யாரும் கேக்கலயோ rts blog'லயும் நான் எழுதற்த யாரும் படிக்க மாட்டாங்க போலருக்கே...இந்த உலகமே இப்படி தான் யா..

    -vgr

    ReplyDelete

  5. Dear vgr,

    Excellent work to start with. depicts the true million changes that run over the neurons in the brain when u start a thing.

    Balakumaran madiri periya ezhuthalargaloda novel's kellam adutha varam epo varum nu magazine padikarchey kathirukara madiri inime unnoda post kum wait pannnalam polaruke....avalo arumai :)

    Banu

    ReplyDelete
  6. பானு,

    நேரம் எடுத்து இந்த பதிவ படிச்சதுக்கு
    அது உனக்கு நிஜமாவே பிடிச்சதுக்கு
    அதன் காரணமா நீ காமென்ட் அடிச்சதுக்கு
    அடுத்த முறைக்குக் காத்திருப்பேன்னு சொல்லி என்ன கலாய்ச்சதுக்கு

    எல்லாத்துக்கும் மிக்க நன்றி!

    -vgr

    ReplyDelete
  7. vgr/பானு,

    எலெக்சன்தான் முடிஞ்சு போச்சே. இப்ப லேட்டா லாரில கூட்டத்துக்கு ஆள் கூட்டியார மாதிரி இருக்கு :-)

    எப்படியோ மூணாவது ஆள்(literally) இந்த பதிவ படிக்கறது கேட்டா சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  8. ஏன் நாகு Sir, ஏன்?

    ஒரு வலைபக்க நிர்வாகி(webpage admin) ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர(budding writer) இப்படி discourage பன்னலாமா?

    நான் இன்னும் 7 பேரு படிக்கற வரை wait பன்னலாம்'னு நெனச்சேன். நீங்க சொல்ற படி பாத்தா இத்தோட முடிசுக்க வேண்டியது தான் போலருக்கே....அதுவும் இல்லாம வாழ்க்கை ஒரு வட்டம் டா'னு தலைவர் சொன்ன மாதிரி...உங்க காமென்ட்'ல ஆறம்பிச்சு உங்க காமென்ட்'லையே முடிஞ்ச்சாச்சு...

    -vgr

    ReplyDelete
  9. padichachu!!!

    miga nalla arambam... romba swarasyama irukku padikarthukku...adengappa onnume illadha vishayatha kooda ivlo swarasyama ezhudha mudindhaal , appo vishayam kedacha avlo thaan richmond lendhu rich men varaikkum uncontrollable response thaan...

    adi dhool vgr!!!

    ReplyDelete
  10. Thanks anu. panam kodutha poda sonna comment madiriye iruku :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!