Tuesday, June 07, 2011

பூணல் அல்லது பூணூல் என்றால் என்ன? ( தெளிவு 1 )

அன்பு உள்ளங்களே,

கேள்வி ஞானம் பற்றி கேள்விப் பட்டு இருப்பீர்கள். நீங்கள் கேள்வி கேட்டதுண்டா?
நிறைய கேளுங்கள். உங்களுக்குள்ளே கேளுங்கள், பிறரிடம் கேளுங்கள். அப்பொழுது தான் ஞானம் பிறக்கும்.
இது அல்ல கேள்வி ஞானம். ஒரு கேள்விக்கு ஆயிரம் பதில் இருக்கும். ஆனால் எல்லாம் சரியானதாக இருக்காது.
பதில் சொல்லியவருக்கோ அது சரியானதாக இருக்கும்.

இங்கே தான் குழப்பம். ஒருவருக்கு சரியாக தோன்றுவது, மற்றவருக்கு சரியாக படுவது இல்லை.
அட எதைத் தான் சரி என்று எடுத்துக் கொள்வது?
அதை நம் அறிஞர்களிடம் விட்டு விடுவோம்.

நாம் பூணல் அணிகிறோம். எதற்கு அணிகிறோம், அது என்ன என்றாவது கேட்டதுண்டா?
உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள், நான் 10 நாட்கள் கழித்து சரியான் விடை தருகிறேன்.

வேதாந்தி

8 comments:

  1. என்னய்யா குழப்புறீர்?

    பூணுல் குறித்த எனது 'கேள்வி' ஞானம். கல்லூரியில் ஒரு ஜூனியரை ராகிங் செய்யும்போது பூணுல் பயன் குறித்து அவன் சொன்னான்.

    அந்த காலத்தில் பாம்பு கடித்தால் விஷம் பரவாமல் இருக்க கட்டுப் போட கயிறைத் தேடி அலையாமல் உடனே பூணுல் வைத்து கட்டுப் போடலாமாம்! அதிலிருந்து அவன் பெயரே பூணுல் சுந்தர் ஆகிவிட்டது.

    ReplyDelete
  2. வேதாந்தி
    குழப்பமாக பேசினால் வேதாந்தமா? என்ன திடீரென ப்ரச்சனைன்னு வந்தா பூணூல் பற்றி பேசும் தமிழகத் தாத்தா போல பேச ஆரம்பித்து விட்டீர்கள். பூணூல் பற்றிப் பேச வந்துவிட்டு எதற்காக கேள்வி ஞானம் என்று அளக்க ஆரம்பித்தீர்கள். சரி அதை பிறகு ஒரு பதிவில் பார்த்துக் கொள்வோம்.

    நீங்கள் தொடங்கிய ப்ரச்சனை, பூணூல் எதற்கு அணிகிறோம், இதற்கு அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை, கூகுளாண்டவரிடம் முறையிட்டால் போதும் பொல பொலவென்று பல பதில்கள் கொட்டுகிறது, விக்கிபீடியாவிலும் விலாவரியாக அதைப் பற்றி இருக்கிறது. இதைப் பற்றி சோவின் எங்கே ப்ராமணன் புத்தகத்திலும் விவரமாக எழுதப் பட்டிருக்கிறது.

    இதைப் போல மற்ற மதச் சின்னங்களைப் பற்றியும் வேதாந்தியார் எழுதுவார் என்று எதிர் பார்க்கலாமா?

    பித்தன்.

    ReplyDelete
  3. நாகு மற்றும் பித்தன் அவர்களே

    நான் எதிர் பார்த்த ஒன்று, அனால் உங்களிடம் இருந்து இல்லை.
    மக்களுக்கு பொருள் விளங்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
    நான் கருணா தாத்தாவும் இல்லை, செல்வி ஜெயலலிதாவும் இல்லை, பிற மதத்தை தாக்கும் பாஜ வும் இல்லை.
    தயவு செய்து அரசியல் பார்வை வேண்டாம். மத சாயமும் பூச வேண்டாம்.
    நீங்கள் கேள்வி பட்டதை எழுதுங்கள்.
    நம் வாழ்வில் நிறைய விஷயங்கள் தெரியாமல் கடைப் பிடிக்கின்றோம்.
    எனது பதிப்பு "ஏன் எப்படி எதற்கு " என்பது போல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
    மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து புண்படாத வகையில் இது வர மற்றும் வளர வேண்டும்.

    வேதாந்தி

    ReplyDelete
  4. நாகு மற்றும் பித்தன் அவர்களே,

    நம் தமிழ் சங்கத்தின் வலைப்பதிவை தவிர வேறு ஒன்றையும் பார்க்காத அபிமானி நான்.
    நீங்கள் கூறிய வலைப்பதிவின் தொடர்புகளை கொடுத்தால் நம் உறுப்பினர்கள் பார்க்க வசதி ஆக இருக்கும்.
    என் முயற்சி நம் சங்க வலைப் பதிவு மற்றவர்களுக்கு ஒரு விளக்கப் பதிவு ஆக இருக்க வேண்டும் என்று.

    உதாரனத்திற்க்கு பூணல் விளக்கம் பற்றி கேள்விப் பட்ட ஒன்றை கூறுகிறேன்.
    ஆனால் உண்மையான விளக்கத்திற்கு பத்து நாள் காத்திருக்க வேண்டும்.

    பூணல் நம் உடம்பை சரி பாதி ஆக பிரிக்கிறது.
    மேல் பாதி ஞானம் சார்ந்தது கீழ் பாதி கர்ம வினைகள் சார்ந்தது என்றும் போட்டு இருந்தது.
    எப்பொழுது ஞானம், கர்மம் பற்றி அறிகின்றரோ , அப்பொழுது அணிய வேண்டும் என்று இருந்தது.
    இது வியப்பாக தோன்றினாலும் விமர்சிக்க தோன்றவில்லை, மாறாக சிந்திக்க தூண்டுகிறது .

    எனவே நாம் செய்தி சார்ந்த விசயமாக இந்த தெளிவை கருதுவோம்.
    எனது அடுத்த தெளிவு நாமம் என்றால் என்ன, பட்டை என்றால் என்ன என்று நினைத்தேன்.
    அனால் உங்களின் கருத்தை பார்த்து மதம் சம்பந்த பட்டதை சொல்லுவதை விட மற்ற வழக்கங்களை
    சொல்ல முயற்சிக்கிறேன். உங்களின் கருத்துக்கு நன்றி .

    வேதாந்தி

    ReplyDelete
  5. பித்தரே,


    சண்டையும் சச்சரவும் புலவர்களின் தனிச்சொத்து. :-)

    வேதாந்தி எதையோ கேட்கப்போக நீங்கள் அதை எங்கேயோ கொண்டு போகிறீர்கள். :-)

    அவர் சொல்வதுபோல அவர் கேட்கும் கேள்வியை மட்டும் அலசுவோம்.

    வேதாந்தியாரே - தொடரட்டும் உமது நாரத வேலை. நாரதர் கலகத்தை கிளப்பிதான் விடுவார். அவரே கலகத்தில் சிக்க மாட்டார். நீர் நவீன நாரதர். அதுதான் கொஞ்சம் குழப்பம்.

    ReplyDelete
  6. நாகு,
    இங்கு சண்டையும் இல்லை சச்சரவும் இல்லை.

    வேதாந்தி: நீங்கள் வைத்த தலைப்புக்கும் தொடங்கிய செய்திக்கும் சம்பந்தம் இல்லை என்பது விளங்கியதும் இதை எது வரை கொண்டுசெல்ல உங்கள் திட்டம் எனத் தெரிந்து கொள்ளும் ஒரு ஆவலில்தான் மற்ற மதச்சின்னங்களைப் பற்றி எழுதுவீர்களா என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு பதில் சொல்லாமல் தேவையில்லாமல் பாஜக வை பற்றி ஒரு தவறான செய்தியைத் தந்திருக்கின்றீர்கள். அதைப் பற்றிய எமது கருத்தை கூடிய விரைவில் மற்றுமொரு கிறுக்கலில் வெளியிடுகிறேன். போதாத குறைக்கு நாமம் பட்டை என்று உங்கள் பட்டியல் நீள ஆரம்பித்திருக்கிறது. உங்கள் பதிவு “ஏன், எப்படி எதற்கு” (எழுத்தாளர் சுஜாதா, ஏன், எதற்கு, எப்படி என்ற ஒரு தொடரை பலகாலம் ஜூனியர் விகடனில் எழுதிவந்தது நினைவுக்கு வந்தது) என்ற அளவில் இருக்க வேண்டும் என்றால் அதையே தலைப்பாக வைத்திருக்கலாம், மாறாக பூணல் அல்லது பூணூல் என்றவுடன் அதைப் பற்றி கேள்வி கேட்டாலேயே அது மதச் சாயம் என்ற வாதமும், பாஜகவைப் பற்றிய தவறான செய்திகளும், அரசியல் பார்வை தேவையில்லை என்ற சப்பை கட்டுக்களும் எமக்கு ஏற்புடையதில்லை.

    பித்தன்.

    ReplyDelete
  7. சுஜாதா ஒரு அதிசயப் பிறவி. அவர் அனைத்தையும் அறிந்தவர் என்று நாம் நம்பலாம்.
    அவருக்கு தெரிந்ததை அவர் "ஏன் எதற்கு எப்படி" என்று வெளியிட்டார்.
    நானோ கேள்விப் பட்டதை மட்டும் எழுத விரும்புகிறேன். நமக்கு சொந்த அறிவு இல்லை. கேள்வி அறிவு மட்டும் தான்.

    ஞானம் அறிதலில் வரும். தெளிவு தேடுதலில் வரும். அனுபவமோ அடி பட்டால் வரும்.
    இப்பொழுது எனக்கு அனுபவம் கிடைத்து கொண்டு இருக்கிறது. (பித்தரிடமிருந்து)
    எல்லோரும் தேட வேண்டும். அதனால் தான் தெளிவு என்று வைத்து உள்ளேன்.
    நான் கேள்விப் பட்ட உண்மையை சொன்ன பிறகு எத்தனை தெளிவு பிறக்குமோ
    தெரிய வில்லை. அனால் அனுபவம் நிறைய கிடைக்கும் என்பது உண்மை.

    தெய்வீக சிந்தனை உள்ளவன் தெய்வம் சார்ந்த தெளிவுகளை சொல்ல விரும்புகிறேன்.
    பித்தரின் கருத்துக்கு பிறகு சிறிது யோசிக்கிறேன்.

    வேதாந்தி

    ReplyDelete
  8. ஒரு காலத்தில் பூணூல் என்பது அனைவரும் அணிந்து கொண்டனர். தான் பார்க்கும் தொழிலுக்கு ஏற்ற வகையில் சத்தியபிரமானம் எடுத்து, அணிவதே பூணூல். உதாரணமாக க்ஷத்திரியர்கள், "எக்காலத்திலும் தர்மம் தவறாது நாட்டை காப்பேன்" என்றும் சபதம் எடுத்து இதனை அணிவர்.. காலப்போக்கில் இவ்வழக்கம் விடுபட்டு, சிலரால் மட்டும் கடைபிடிக்கப் படுகிறது.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!