இங்கிலாந்தில் வாழும் பதினைந்தே வயதான பிஞ்சு அலைஸ் பைன் (Alice Pyne) இன்று டிவிட்டரைக் கலக்கிக் கொண்டிருக்கிறாள். புற்றுநோயுடன் கடந்த நான்காண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் இச்சிறுமி தன் கடைசி ஆசைகளைத் தன் வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறாள். அதில் ஒன்று டிவிட்டரில் ட்ரென்ட் எனப்படும் அதிகமாக பேசப்படும் தலைப்பாக இருக்க வேண்டுமென்பது. டிவிட்டருலகம் அதற்கு முக்கியம் கொடுத்து அப்படியே சாதித்துக் கொடுத்திருக்கிறது. நீங்களே இங்கே பார்க்கலாம்.
அவளுடைய ஆசைகளில் சில: சுறாக்களுடன் நீந்துவது, அவளுடைய நாயை ஒரு போட்டியில் பங்கேற்க வைப்பது என்று பட்டியல் போகிறது. அவளுடைய ஒரு ஆசையை நாம் அனைவரும் மனது வைத்தால் நிறைவேற்றலாம். அனைவரும் போன் மாரோபு தானம் செய்ய பதிந்து கொள்ள வேண்டும் என்பதே அது.
அலைஸ் குறித்து வரும் செய்திகளை இங்கே பார்க்கலாம். அந்தச் சுட்டியில் டிவிட்டரில் எவ்வளவு பேர் எழுதுகிறார்கள் என்றும் பார்க்கலாம்.
இதை டிவிட் செய்யும் அனைவரும் அதோடு நிறுத்திவிடாமல் தாங்களும் போன்மாரோ தானம் செய்ய பதிந்து கொண்டு மற்றவர்களையும் பதிய வைக்க வேண்டும்.
நாகு,
ReplyDeleteஅருமையான பதிவு. நோய் ஒரு தடையில்லை என்பதை நமக்கு மிகச் சுலபமாக விளக்கிய ஒரு சிறுமியின் மனத்திடம். இச்சிறுமிக்கும் இவளைப் போன்று புற்றுநோயால் வாடும் முகம் தெரியாத அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டுவதை அனைவரும் செய்யும் அதே நேரம் போன்மாரோ தானம் செய்ய அனைவரும் பதிய வேண்டிய அவசியத்தை நானும் வழிமொழிகிறேன்.
பித்தன்.