Monday, June 23, 2008

ஜிலேபி பலேபி!

என்னதான் ஜிலேபியை கடையில ரெடிமேடாக வாங்கினாலும், அவரவர் சுத்தும் ஜிலேபி அலாதி தான். இந்த லிங்க்கை க்ளிக்கிப்பாருங்கள்.


http://www.youtube.com/watch?v=rMf4fegb76Q


முதலில் கடைக்காரர் யாரென்று தெரியவில்லை.
கடைசியில், கடைக்காரர் யாரென்று தெரிகிறது. இரு பெண்மணிகள் போட்டி போட்டுக்கொண்டு சுத்தோ சுத்தென்று ஜிலேபி சுத்தியது தாங்கமுடியாமல் அவர் படும் பாடு தெரிகிறது.

அதே சமயத்தில் இந்த ஆள் சுத்தும் ஜிலேபிகளைப்பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=17Kdz6eEgcw&feature=related

2 comments:

  1. வாங்க பரதேசி - என்ன ப்லாக் தடை உத்தரவு நீக்கப்பட்டதா இல்லை தங்கமணி ஊருக்குப் போயாச்சா? :-)

    நீங்க வந்தாதான் ஜிலேபி கடை களை கட்டுது!

    இந்த ஆள் சுத்தும் ஜிலேபி ஸ்டைலைப் பார்த்தால் எனக்கு பிலானி ஞாபகம்தான் வருது. இந்த மாதிரி ஜுஜுபி சைஸ்ல போடாம மொத்த வாணலி பரப்புக்கு ஒன்னை ஒன்னு சேர்ந்தாப்பல பெருசு பெருசா போட்டு ஒரு பக்கம் வெந்த உடனே முழுசா - ஒரு planeல் திருப்பும் அழக பாத்துட்டே இருக்கலாம். சுடச்சுட அந்த ஜிலேபி சாப்பிடறதுக்கு கொடுத்து வச்சிருக்கனும். அந்த ஜிலேபிகளை காலை உணவா சாப்பிடும் கொடுமையும் நடந்துருக்கு.
    அதுதான் காலை உணவுன்னு தெரியாம் ரெண்டு ஜிலேபி சாப்பிட்டுட்டு வெய்ட்டரை கூப்பிட்டு 'ப்ரேக் ஃபாஸ்ட்' எங்கேன்னு கேட்டு திட்டு வாங்கியது இன்னும் கொடுமை.

    ReplyDelete
  2. ஆஹா. என்ன அழகா சுத்தறாங்க! அது சரி.. இதென்ன தொடர் பதிவா? அப்படின்னா... ஜிலேபி இங்கே; சிவாஜி எங்கே? :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!