Tuesday, October 31, 2006

எதிரொலி - 1

நாகு அவர்களே, ஜெயகாந்தன் அவர்களே, எங்க அண்ணாச்சி அவர்களே (உன்னையெல்லாம் மரியாதையா கூப்புடரத எண்ணி த்சொ த்சொ, ஒன்னும் இல்லை விஸ்கி விஸ்கி அழுதேன்). மற்றும் இந்த ப்ளாக்கில் நான் எழுதப் போவதையெல்லாம் தொடர்ந்து படிக்க இருக்கும் கோடான கோடி (ஒரு கோடில நாகு, இன்னொரு கோடில ஜெயகாந்தன்) தமிழ்(ள்/ல் எதுனாச்சும் போட்டுக்குங்க) மக்களே அல்லாருக்கும் வன்கம். நானும் எதிரொலின்னு ஒரு ப்ளாக் புடிச்சு வெச்சுட்டேன், கபால்ன்னு நீங்க என்னை வெளில தள்ளிட்டா என்ன பண்றது, அதான்.

பழைய பதிப்புகளை கொஞ்சம் பிரிச்சு மேஞ்சிருக்கேன். யாருக்காச்சும் sad-ஆ இருந்தா மன்சிகப்பா.

பரதேசியின் ஆகஸ்ட் மாசக் கதை படிச்சேன், தலைப்பு இல்லை கால்ப்பு தான்னு சொல்லிட்டு 'இது எப்படி இருக்கு'-ன்னு கேட்டு இருக்கார். நல்லா கனவு கண்டு எழுதியிருக்கார். நம்மூர்-ல இப்ப எல்லாரும், வயசு வித்தியாசம் இல்லாம செய்யரது கனவு காண்றது. பரதேசியாரின் கனவு கொஞ்சம் டேஞ்சர்தான், இந்தியால இப்ப இருக்கற ஜனத்தொகைக்கு மேல உங்க ஊர்ல இருந்து ஆட்கள் வந்தா கிழிஞ்சுடும், இருந்தாலும் நல்லா கீதுபா.

'இது ஞாயமா' 'புல்லின் டைரி குறிப்பு' ரெண்டும் கவிதையா, கட்டுரையா?

'ஒரு குடாக்கின் புலம்பல்' - கொஞ்சம் நெருடுதே வார்த்தைலாம்.
'பூபாளம் பாடும்போது நீலாம்பரி பாடினால்' அம்மா தாச்சுகினாங்கன்னு அர்தம் ஆவுது,
'நான் சீரியல் சாப்பிடும்போது நீ ஸீரியல் பார்க்கிறாய்' -ன்னா முய்சுகினாங்களா
'நான் அலுவலகம் கிளம்பும்போது நீ அவுட்டிங் கிளம்புகிறாய்' - முய்சுகினு மிட் நைட் ஷாப்பிங்கா?
'நான் உணவருந்தும்போது நீ நித்திரையில் ஆழ்கிறாய்' - மதியம் லஞ்ச்சா? அப்ப அம்மா மருடி தூங்கிட்டாங்களா?

நீ இருப்பதோ இந்தியாவில் நான் இருப்பதோ அமெரிக்காவில்
உனக்கோ வெகேஷன் எனக்கோ டென்ஷன்

இப்படி சொன்னா டைமிங் ஒத்து வர்லியே? சரி ரைமிங்கா இருந்தா சரின்றீங்களா, ஒகே.

வேதாளம் நல்லா வந்து இருக்கு, உங்க ஊர்காரங்களுக்குத்தான் அது புரியும்னு நினைக்கிறேன். எங்க அண்ணாத்தே 3 பேர கண்டு புடிச்சுட்டான்.

செப்டம்பர் மாதப் பதிப்புகளில், கொலு பற்றி நாகுவின் விளக்கங்கள் நல்லா இருக்கு.
உயிருள்ள சொற்றொடரகளும், சைவமா வைஷ்ணவமா அருமை. நல்லா என்ன மாதிரி பயலுகளையும் படிக்க வெச்சுட்டார்பா. ஆயிரம் ஆண்டுகளில் முதல் பாயிண்டா 'என்னை மாதிரி ஒன்னு ரெண்டு பேர் நக்கீரன் வேலை பண்ணிட்டு இருப்பாங்க' -ன்னு சேத்துடுங்க.

அக்டோபர் மாதப் பதிப்புகளில், முரளியின் அவருடைய comments பகுதியில் கலைஞனின் 2வரி கதைகளை மாற்றி எழுதியிருக்கார் அதுவும் நாடகத்தனமாகத்தான் இருக்கு.

பசியோடு தென்னை மரத்தடியில் ஒரு தேங்காய் விழாதா என இருந்தவனுக்கு
சித்ரகுப்தன் சொன்னான் விழுந்த தேங்காய் ரொம்ப கனம் என்று.

இது நல்லா இருக்கு.

சென்னையில் அடை மழை. தொட்டுக்க சாம்பார், கெட்டி சட்னி, அவியல் எதுவும் கிடையாது.

மத்தது அடுத்த தபா ரைட்டா?

முடிச்சு வைக்க வாங்க..

ரமேஷ் தன் கைபேசியில் நண்பனை அழைத்தான்.

மறுமுனையில் குரல், "ஹலோ.. யார் பேசரது.."

"டேய் வெண்ணை. எத்தனை வாட்டி உன்னை கூப்பிட்டு மெசேஜ் விடறது. அப்படி என்ன வெட்டி முறிக்கர வேலை ஒனக்கு. திருப்பி கூப்பிட மாட்டயாடா?"

"மெசேஜ் விட்டயா? எப்ப.. எனக்கு மிஸ்டு கால் ஏதும் இல்லையே.."

"போன சனிக்கிழமை மதியம் 2 மணி போல கூப்பிட்டேன். பிறகு செவ்வாய்கிழமை சாயந்திரம் பண்ணினேன்."

"வேலை கொஞ்சம் அதிகம். சரி என்ன விசயம்னு சொல்லு."

"ஒன்னும் இல்லடா கோபால். சும்மாதான் பண்ணினேன். தீபாவளி ரிலீஸ்'ல எந்த படம் பார்த்தே? எது நல்லா இருக்கு.?"

"----------------------------------------------------------------"

இந்த குட்டிக்கதையின் முடிவை ஒரே வரியில் முடியுமாறு பின்னூட்டத்தில் எழுதுங்க.. கோடிட்ட இடத்தில் நான் எனது முடிவு வரியை 2-3 நாளில் பதிக்கிறேன்.

நவம்பர் மாத லொள்ளு மொழிகள்

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?

ஸ்கூல் test ல பிட் அடிக்கலாம். காலேஜ் test ல பிட் அடிக்கலாம்.
ஆனா blood test ல பிட் அடிக்க முடியுமா?

அனைவருக்கும் எதிரொலியின் வணக்கம்

ஐயா வணக்கமுங்க. உங்க ப்ளாக்ல எழுதியிருக்கர படைப்புகள படிச்சேன். நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் (எங்க அண்ணன் தான்) ஒரு லிங்க் அனுப்பி எனக்கு டைம் இருந்தா எழுதச் சொன்னாரு. முதல்ல இதுவரை எழுதியிருக்கரவங்க படைப்புகளப் பார்த்தா, நம்ம கதை கந்தல்ன்னு நினைக்கிறேன். நமக்கு (என்னடா பெரிய பருப்பு மாதிரி நமக்கு நமக்கு-நு எழுதரான்னு திட்டாதீங்க, என்னை நான் மதிக்கலைனா வேற யார் மதிப்பாங்க, அதான்) அவ்வளவா நல்ல தமிழ் வராது, இங்கிலீஷ் கலக்காம தமிழ் பேசவே வராது, இருந்தாலும், அண்ணாத்தே சொல்லிட்டாரேன்னு எழுதறேன். தப்பு இருந்தா சொல்லுங்க (திருத்திக்க மாட்டேன், எங்க அண்ணன் யாருன்னு சொல்றேன் அவனை பெண்டு எடுங்க, என்னை 'கவனிக்கனும்னா' சிங்காரச் (இப்போ கொஞ்சம் சொதச் சொதச்) சென்னைக்கு வாங்க, அது நம்ம பேட்டை யாபகம் வெச்சுக்கங்க).
என்னாடா எதிரொலி-ந்னு பேர் வெச்சிருக்கேன்னு கேட்பீங்கன்னு பாக்கறேன் ஒருத்தரும் கேக்கல, போனாப் போவுதுன்னு இந்த தடவை நானே சொல்லிடறேன். நெக்ஸ்ட் டைம் நீங்கதான் கேக்கனும் ரைட்டா.

முன்பு ஒரு காலத்தில, சென்னைத் தொ(ல்)லைக் காட்சியில் ரொம்ப ஃபேமஸ் ப்ரோக்ராம் எதிரொலி, அதுல T.S. நாராயணஸ்வாமின்னு ஒருத்தர் வருவார் (பேர் குன்ஸாதான் ஞாபகம் இருக்கு தப்பா இருந்தா, இதுக்கெல்லாம் கட்டைய தூக்கிட்டு வராதீங்க, இதெல்லாம் பேசி தீத்துக்க வேண்டியது), அவரால அந்த ப்ரோக்ராம் சக்க போடு போட்டது, அந்த ஞாபகத்தில இந்த பேரை வெச்சுகிட்டேன், (ஒன் கோலி சோடா ப்ளீஸ்).

மொதல்ல இங்க வந்திருக்கிற கதை, கவித எல்லாத்தையும் பிரிச்சு மேஞ்சிடலாம்னு இருக்கேன். ஒரு தபா யாரோ சொல்லி ஒரு பெரியவர் கேட்டு (நாந்தான்) இன்னிக்கு சொல்றது என்னடான்னா, 'A critic need not be a professional', so, இதுக்கும் கழி, கம்பு எடுத்துகிட்டு வராதீங்க, பாவம் அறியாபுள்ள தெரியாம சொல்லிகினான்னு உடுங்க. (ஐ எனக்கும் நல்லா எதுகை மோனைல எழுத வருது, okay okay, இதெல்லாம் நமக்கு ஜகஜமப்பா).

அடுத்து உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் நன்பன் எதிரொலி.

(பி.கு. இப்படி ஒரு தடவை வணக்கம் சொல்லி எழுதிப் பாக்கனும்னு ரொம்ப நாளா ஆசை, எழுதினதுக்கு அப்பரம்தான் தெரியுது சகிக்கலன்னு)

Friday, October 27, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 4

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என்னுடைய கிறுக்கல்களை http://pkirukkalgal.blogspot.com என்கிற ப்ளாக்கில் படித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் (அதாங்க comments) தரவும்.

எனது நாலாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2006/10/4.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Monday, October 23, 2006

யார் தலை(வர்)?


தொண்டர்களென்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும். தலைவர் சிலைக்கு மாலை போடலாம். ஆனால் தலைவர் தலையே தெரியாமல் மாலை போட்ட தொண்டர்களின் அபிமானத்தை என்ன சொல்வது?

Saturday, October 21, 2006

கூட்டாங்'ஸ்

அது என்ன கூட்டாங்ஸ்? இந்த வலைப்பதிவில் எழுதும் அன்பர்களின்(சுருக்கமாக பிளாகிகள்) கூட்டு முயற்சியான ஒரு கூட்டாங்கதை, ஒரு கூட்டாங்கவிதை - சேர்த்து சுத்தத் தமிழில் கூட்டாங்ஸ். ஆனால் கூட்டாங்கவிதை இந்த முறை ஒருவர் படைப்புத்தான். கூட்டாங்கதைதான் உண்மையில் கூட்டாங்கதை. நான் எங்கேயோ ஆரம்பித்ததை அனைவரும் கடத்திச் சென்று கடைசியில் தமிழீழத்தில் விட்டு விட்டார்கள்! நீங்களும் படித்துப் பார்த்து கொஞ்சம் திட்டினால் எங்களுக்கெல்லாம் சற்று உற்சாகமாக இருக்கும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Friday, October 20, 2006

தீபாவளி

போராடி கிடைத்த போனஸ்
பளபளக்கும் பட்டாடை
பலவிதத்தில் பணியாரம்
படபடக்கும் பட்டாசு
பழங்கதையில் புதுப்படம்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் பாமரனின் தீபாவளி

மினுமினுக்கும் மோதிரம்
கைகனக்கும் கடிகாரம்
ஜொலி ஜொலிக்கும் வேட்டி
பளபளக்கும் மோட்டார்பைக்
பல்லுடைக்கும் மைசூர்பாக்
படபடக்கும் மைத்துனன்
பரபரக்கும் மாமியார்
பல்லிளிக்கும் மாமனார்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் புது மாப்பிள்ளையின் தலை தீபாவளி


சிடுசிடுக்கும் மாப்பிள்ளை
சரிக்கட்டும் செல்லப்பெண்
சிக்கல் தீர்க்கும் மனைவி
சிரித்துக்குலுங்கும் பேத்திகள்
சிலுமிஷம் செய்யும் பேரன்கள்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை

வாசலில் நின்று பயமுறுத்தும் மளிகைக்கடைக்காரர்
வழியில் மடக்கி வாதாடும் தையல்காரர்
விட்டு விட்டு தலையை சொரியும் தபால்காரர்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை
தபாலில் வந்து மதிமயக்கும் மாஸ்டர் கார்ட் பில்
தவராமல் வந்து விழி பிதுக்கும் விசா கார்ட் பில்
இது தான் தீபாவளி என்பதோ?
இது பாமரனின் தீபாவளியல்ல
இது புது மாப்பிள்ளையின் தலை தீபாவளியுமல்ல
இது தலைவரின் தீபாவளி
ஆம் குடும்பத்தலைவரின் தீபாவளி!


உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
ப்ளாகிகளே! மேலும் மேலும் ப்ளாகுக!

Tuesday, October 17, 2006

வலையில் சுட்டவை

தமிழ்நாட்டு அரசியல் YouTubeல் இணையம் சிரிக்கிறது (சந்தியெல்லாம் இந்த இன்டெர்நெட் உலகில் ரொம்ப சிறுசுங்க)அரசியல் கிடக்கட்டும். இரண்டரை வயது வாண்டு தபலாவில் என்னமாய் கலக்குகிறான் பாருங்க!

படித்ததில் பிடித்தவை

"அரண்மனை தையல்கரரிடம் மன்னர் ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்திருக்கராமே?"
"ஆமாம், முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே மாதிரி தெரியும்படி சட்டை தைக்கச் சொல்லியிருக்கார். போரில் புறமுதுகிட்டு ஓடும்போது மானக்கேடா இல்லாம இருக்கத்தான்!"


நன்றி: ஆனந்த விகடன்