Tuesday, October 31, 2006

எதிரொலி - 1

நாகு அவர்களே, ஜெயகாந்தன் அவர்களே, எங்க அண்ணாச்சி அவர்களே (உன்னையெல்லாம் மரியாதையா கூப்புடரத எண்ணி த்சொ த்சொ, ஒன்னும் இல்லை விஸ்கி விஸ்கி அழுதேன்). மற்றும் இந்த ப்ளாக்கில் நான் எழுதப் போவதையெல்லாம் தொடர்ந்து படிக்க இருக்கும் கோடான கோடி (ஒரு கோடில நாகு, இன்னொரு கோடில ஜெயகாந்தன்) தமிழ்(ள்/ல் எதுனாச்சும் போட்டுக்குங்க) மக்களே அல்லாருக்கும் வன்கம். நானும் எதிரொலின்னு ஒரு ப்ளாக் புடிச்சு வெச்சுட்டேன், கபால்ன்னு நீங்க என்னை வெளில தள்ளிட்டா என்ன பண்றது, அதான்.

பழைய பதிப்புகளை கொஞ்சம் பிரிச்சு மேஞ்சிருக்கேன். யாருக்காச்சும் sad-ஆ இருந்தா மன்சிகப்பா.

பரதேசியின் ஆகஸ்ட் மாசக் கதை படிச்சேன், தலைப்பு இல்லை கால்ப்பு தான்னு சொல்லிட்டு 'இது எப்படி இருக்கு'-ன்னு கேட்டு இருக்கார். நல்லா கனவு கண்டு எழுதியிருக்கார். நம்மூர்-ல இப்ப எல்லாரும், வயசு வித்தியாசம் இல்லாம செய்யரது கனவு காண்றது. பரதேசியாரின் கனவு கொஞ்சம் டேஞ்சர்தான், இந்தியால இப்ப இருக்கற ஜனத்தொகைக்கு மேல உங்க ஊர்ல இருந்து ஆட்கள் வந்தா கிழிஞ்சுடும், இருந்தாலும் நல்லா கீதுபா.

'இது ஞாயமா' 'புல்லின் டைரி குறிப்பு' ரெண்டும் கவிதையா, கட்டுரையா?

'ஒரு குடாக்கின் புலம்பல்' - கொஞ்சம் நெருடுதே வார்த்தைலாம்.
'பூபாளம் பாடும்போது நீலாம்பரி பாடினால்' அம்மா தாச்சுகினாங்கன்னு அர்தம் ஆவுது,
'நான் சீரியல் சாப்பிடும்போது நீ ஸீரியல் பார்க்கிறாய்' -ன்னா முய்சுகினாங்களா
'நான் அலுவலகம் கிளம்பும்போது நீ அவுட்டிங் கிளம்புகிறாய்' - முய்சுகினு மிட் நைட் ஷாப்பிங்கா?
'நான் உணவருந்தும்போது நீ நித்திரையில் ஆழ்கிறாய்' - மதியம் லஞ்ச்சா? அப்ப அம்மா மருடி தூங்கிட்டாங்களா?

நீ இருப்பதோ இந்தியாவில் நான் இருப்பதோ அமெரிக்காவில்
உனக்கோ வெகேஷன் எனக்கோ டென்ஷன்

இப்படி சொன்னா டைமிங் ஒத்து வர்லியே? சரி ரைமிங்கா இருந்தா சரின்றீங்களா, ஒகே.

வேதாளம் நல்லா வந்து இருக்கு, உங்க ஊர்காரங்களுக்குத்தான் அது புரியும்னு நினைக்கிறேன். எங்க அண்ணாத்தே 3 பேர கண்டு புடிச்சுட்டான்.

செப்டம்பர் மாதப் பதிப்புகளில், கொலு பற்றி நாகுவின் விளக்கங்கள் நல்லா இருக்கு.
உயிருள்ள சொற்றொடரகளும், சைவமா வைஷ்ணவமா அருமை. நல்லா என்ன மாதிரி பயலுகளையும் படிக்க வெச்சுட்டார்பா. ஆயிரம் ஆண்டுகளில் முதல் பாயிண்டா 'என்னை மாதிரி ஒன்னு ரெண்டு பேர் நக்கீரன் வேலை பண்ணிட்டு இருப்பாங்க' -ன்னு சேத்துடுங்க.

அக்டோபர் மாதப் பதிப்புகளில், முரளியின் அவருடைய comments பகுதியில் கலைஞனின் 2வரி கதைகளை மாற்றி எழுதியிருக்கார் அதுவும் நாடகத்தனமாகத்தான் இருக்கு.

பசியோடு தென்னை மரத்தடியில் ஒரு தேங்காய் விழாதா என இருந்தவனுக்கு
சித்ரகுப்தன் சொன்னான் விழுந்த தேங்காய் ரொம்ப கனம் என்று.

இது நல்லா இருக்கு.

சென்னையில் அடை மழை. தொட்டுக்க சாம்பார், கெட்டி சட்னி, அவியல் எதுவும் கிடையாது.

மத்தது அடுத்த தபா ரைட்டா?

2 comments:

  1. அத்னி போஸ்டையும் அதுக்குள்ளார பட்ச்சு கமெண்டு வேற! கலக்குபா. மழைக்கு பயந்து ப்ளாக்கு பக்கம் ஒதுங்கிட்டயா? எதோ கஷ்ட பட்டு நானும் ஒரு குட்டி கத எழுதி மொத பக்கத்துல வரலாம்னா உட மாட்டேன்றீங்களே. உடனே ரெண்டு போஸ்ட போட்டு கீழ தள்ளிட்டீங்க.

    ReplyDelete
  2. எதிரொலின்னு கரீட்டா தான் பேரு வெச்சுகினபா நீ. எதிரொலி நாராண்ஜாமி கணக்கா அத்தினி மேட்டரையும் அல்சி ஆராஞ்சி பட்சி பீராஞ்சி சுகுரா விமர்சனம் வேற பண்ணிக்கீர. ரொம்ப டாங்ஸ்பா.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!