அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் அம்மையாரின் பிரசார பீரங்கியாகக் கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாமல் செயல்பட்டு வரும் நடுநிலை(?)யாளர் சோ அவர்கள், அம்மையார் பிரதமராக பா.ஜ.க. உதவ வேண்டும் என்று முழங்கி இருக்கிறார். தேவ கவுடா போன்றவர்களே பிரதமராகி இருக்கும்போது, இந்த அம்மையார் பிரதமரானால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
அம்மையார் முதல்வராக இருந்த போது நமக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து, அவர் பிரதமரானால் என்னவெல்லாம் நடக்கும்? சில ஊகங்கள்.
- பார்லிமன்ட் கட்டடம் சர்க்கஸ் கூடாரமாக மாற்றப்பட்டு, புதிய கட்டடம் கட்ட வின்சி நிறுவனத்திற்கு உரிமை கொடுக்கப்படும்
- தூர்தர்ஷன் பெயர் J-தர்ஷன் என்று மாற்றப்படும்
- முதல்வராக இருக்கும்போது ஓய்வெடுக்க வேண்டும் என்றால், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்திற்குப் போவார். பிரதமர் ஆகி விட்டதால், இத்தாலியில் உள்ள விலை கூடிய திராட்சைத் தோட்டத்தில் இவருக்கு ஓய்வு மாளிகை கட்டப்படும்.
- இவர் போயஸ் தோட்டத்தில் கிளம்பினால், ராயபுரம் வரை போக்குவரத்து ரத்து செய்யப்படும். டெல்லியில் இவர் கிளம்பினால், சண்டிகார் முதல் குவாலியர் வரை தரை வழிப் போக்குவரத்து நிறுத்தப்படும். விமானத்தில் பறந்தால், துபாய் முதல் சிங்கப்பூர் வரை விமானங்கள் ரத்து செய்யப்படும்.
- சன்னா ரெட்டி இவரிடம் முறைத்துக் கொண்ட போது, அவரது பல அதிகாரங்களைப் பறிக்க இவர் சட்டங்கள் இயற்றினார், (துர்)அதிர்ஷ்ட வசமாக, அந்த சட்டங்களை அனுமதிக்கும் அதிகாரமும் ஆளுநரிடமே இருந்ததால் பல கோமாளித் தனங்கள் நிறைவேறாமல் தப்பித்தன. ஜெயலலிதா பிரதமரானால், ஜனாதிபதி பதவி பிரதமருக்குக் கீழ் செயல்படுமாறு அரசியல் சட்டம் மாற்றப்படும்.
- ஒபாமா இந்திய பிரயாணம் செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். அம்மையாரிடம் முறைத்துக் கொண்டால், ஒபாமா மானபங்கப் படுத்த முயன்றதாக ஐ.நா. சபையில் முறையீடு செய்யப்படும்.
- இவர் இன்னொரு வளர்ப்பு மகனைத் தத்து எடுக்க மாட்டார் என்று நம்புவோம், ஒரு வேளை எடுத்து விட்டால் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு என்னவெல்லாம் நடக்கும்?
- budget 300 பில்லியன் டாலர்கள் (300 கோடி ரூபாய் பழைய எண்ணிக்கை)
- இமயமலை முழுவதும் சீரியல் லைட் போடப்படும்
- அழைப்பிதழ் தங்கத் தட்டுகளில் வைரக் கற்களால் எழுதப்படும்.
- யானி இசை அமைப்பில், மாதுரி தீட்சித்தும், ஐஸ்வர்யா ராயும் நடனம் ஆடும் கலை நிகழ்ச்சி நடத்தப்படும்.
- தேனிலவு சந்திரனில் ஏற்பாடு செய்யப்படும்
- பா.சிதம்பரம் நாடு கடத்தப் படுவார்
- எதிர்க்கட்சி M.P. களை அடித்து உதைக்க, தாமரைக்கனி குடும்பத்தினர் மூலம் பயிற்சி முகாம்கள் அமைக்கப்படும்.
- நானூறு M.P. கள், காலில் விழுந்து வணங்குமாறு பார்லிமன்ட் கட்டடம் விஸ்தரிக்கப்படும்.
- ஜெயலலிதா நூறாண்டுகள் வாழ, காசி விஸ்வநாதர் கோயிலில் தினமும் அர்ச்சனை செய்யப்படும்.
- ராஜா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு அமைச்சரவையின் chief advisor ஆக நியமிக்கப் படுவார்
- சசிகலா மீண்டும் உடன் பிறவா சகோதரியாகப் பதவி ஏற்பார். நடராஜன் அகில இந்திய அளவில் ராஜகுருவாக செயல்படுவார். பாஸ்கரன், தினகரன், திவாகரன் ஆகியோர் பல்வேறு அகில இந்திய வாரியத் தலைவர்களாக நியமிக்கப் படுவார்கள்