Sunday, December 18, 2011
தமிழ்சங்கத்தின் விவாதக் குழுமம்
படம் பாரு கடி கேளு - 51

கனபாடிகள்: ம்... மாப்பிள்ளை ரொம்ப பிஸியாம். கல்யாணம் கூட "Flying visit" ல வந்து அதுவும் இந்தியாவில் தான் பண்ணிப்பேன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம். அதுக்காக முகூர்த்ததை "ரன்வே" யில் செய்யறது கொஞ்சம் ஓவரா இல்லே?
Friday, December 09, 2011
இந்தியா வந்தியா?
இந்நிலையில், மேல் படிப்பிற்காகவும், வேலைக்காகவும், விடுமுறைக்காகவும் வெளிநாட்டவர் (குறிப்பாக அமெரிக்கர்களும் NRI க்களும்) இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். சென்னை, மும்பாய், பெங்களூரு, டில்லி மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் (பட்டி தொட்டிகளிலும்) வேலை வாய்ப்பு தேடி வெளிநாட்டவரும் NRIக்களும் வருவது சாத்தியம்.
இவ்வாறு வருபவர்களுக்கெல்லாம் இந்தியாவில் அவர்கள் தங்கும் சூழ்நிலைக்கேற்ப அன்றாடம் தேவைப்படும் முக்கியமான விஷயங்கள் பல. அதில் அதிமுக்கியமான பலவற்றை தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு அன்பர் விலாவாரியாக தொகுத்து யூட்யூபில் வழங்கியுள்ளார். இவர் விவரிக்கும் சில விஷயங்கள் சிக்கனம் தேடுபவருக்கும் மிக உதவியாக இருக்கும். அதில் சிலவற்றை கீழே கண்டு மகிழுங்கள்.
Saturday, December 03, 2011
பித்தனின் கிறுக்கல்கள் - 46
கனிமொழி ஜாமீன்.
குற்றம் சாட்டப் பட்டது சாட்டப் பட்டதுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. நிரபராதி என்று தீர்ப்பு வரவில்லை, ஆறு மாதம் கோர்ட் கோர்ட்டாக ஏறி இறங்கி போன மாதம் சோனியாவின் காலில் விழுந்து, குட்டிக்கரணம் போட்டு, அழுது, ஒப்பாரி வைத்து ஒரு சப்பை ஜாமீன் வாங்கி விட்டு அதுவும் ‘சோ’ சொன்னது போல் பல குழப்படி செயல்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது. இதற்கு ஒரு பெரிய பில்டப் கிழவனாரால் கொடுக்கப் பட்டு, இதற்கு தியாகம் என்ற பெயர் சூட்டப் பட்டு அள்ளக் கைகள் பேனர் ஒட்டி, கூப்பாடு போட்டு இவைகளுக்கு நடுவில் சென்னை வந்திருக்கிறார்.
அன்னா ஹசாரேவின் அடுத்த உண்ணாவிரதம்
நாடாளுமன்ற குளிர் காலத் தொடரில் அன்னா ஹசாரே அவரும் அவரது குழுவினரும் சொன்ன லோக்பால் மசோதாவை அவர்கள் சொன்ன படி மத்திய அரசு நிறைவேற்றாததால், அதை அவர்கள் சொன்ன படி அரசு நிறைவேற்றும் வரை மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். நல்லது,
தமிழ்ப் படங்கள்
7ம் அறிவு
Hugo
The next 3 Days
Unknown
The Hit List
IP Man 1 & 2:
பதிவை முழுவதும் இங்கே படிக்கலா ம்
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
Wednesday, November 16, 2011
பின்னூட்டங்களில் இருக்கும் நகைச்சுவை - பகுதி 1.
- கடவுள் நல்லவர்களை அதிகம் சோதிப்பார் ஆனால் கை விட மாட்டார்; கெட்டவர்களுக்கு நிறையா தருவார் ஆனால் ஜாமீன் தரமாட்டார்.!
- நாங்க ஏங்க திஹாருக்கு போயி பார்க்கணும், 200 கோடி நாங்களா அடிச்சோம்? அப்படிப்போடு... போடு... போடு...!
- கண்ணே கனியம்மா வைத்து விடுவார்கள் உனக்கு ஆப்பாம்மானு அன்றே எம்ஜீஆர் சொன்னரோன்னு நினைச்சேன்.
- ஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும்" - அக்கா வெளியதான் எல்லாருக்கும் அல்வா குடுத்துட்டாங்களே, அதான் அல்வா ஸ்டாக் காலியாயிருக்கும் சாக்லேட் குடுத்துருக்காங்க! விடுங்க தலைவர்கிட்டே சொன்னமுன்னா கிண்டித் தந்துட்டு போறாரு!
- ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரிச்சப்பவும் அதே மாதிரி சிரிச்சது." - ஏதாவது பேதலிச்சிருக்கலாம்.
- கனியக்காவிற்க்கு ஒரு லேப்டாப் குடுத்து, அதில் விகடன் வாசகர்களின் கமென்ட்டை படிக்க ஒரு வாய்ப்பு தாருங்கள்...
- சின்ன வயசு...எந்த பள்ளியில படிக்குது புள்ள? பிஞ்சுலே பழுத்ததோ? தீவிர அரசியலில் .....லேசான அரசியல் .....விளக்க முடியுமா அம்மையாரே?
- கனி: 'பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்கு. ஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்’
- இப்படியே போச்சுன்னா 1 லட்சத்தி 75 ஆயிரத்த தாண்டி போயிரும் ஆமா சொல்லிபுட்டேன்.....கருதுக்களின் எண்ணிக்கையை சொன்னேன்.
- என்னடா நாராயணா .... உள்ள ஒரே புழுக்கம் ...ஓஹ்ஹொ ஹ்ஹொஹ்ஹோ ... சீபீஅய்னாலே இதெல்லாம் இருக்கறதானடா ...... ..... .....அரசியல்வாதினாலே தியாகிகள்தானே ...... ஆயிரம் என்கொயரீஸ்.......ஆயிரம் எங்கேஜ்மென்ட்ஸ் ..... அய்ய்யோ அய்யோ ....இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும் ....எனக்கு செல வெப்பாங்க ....ஸ்டூடன்ட்ஸெல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க ................................ சத்திய சோதன ............ பாரதமாதாவே சோ சாரீ ..... அரசியல்னா இதெல்லாம் சாதாரணமப்பா ......
- எனக்கு ஒரு டவுட்டு. ஜெயிலுக்கு போய்ட்டு வந்தால் அரசியலில் முதிற்சி வந்திருமா. அப்படீன்னா கனி இன்னும் கொஞ்ச நாள் உள்ளுக்கு இருந்தால் இன்னும் முத்தும் தானே. எப்பிடி என் டவுட்டு.
- சோனியா காந்தியிடம் "கனிமொழி காப்பிட்டு திட்டம்" எடுபடவில்லை....
- ஒரு தாயா உங்க மகளை பார்க்குறது சரி.... ஒரு அப்பாவி இந்தியனாய் ஒன்னேமுக்கால் லட்சம் கோடிகளை கொஞ்சம் அண்ணாந்து பாருங்களேன்...
- அடிச்சது ஒன்னேமுக்கால் லட்சம் கோடி, படிச்சது 150 நாட்கள் திஹார் சிறையில்... கூட்டி கழிச்சு பார்த்தாலும் கணக்கு ஒட்ட மாட்டேங்குதே... ஒன்னேமுக்கால் லட்சம் கோடிகள் அடிச்சுட்டு, அரை கிலோ சாக்லேட் வாங்கி தருவது பெரிய காரியமா???
- கண்ணகியின் கலக்கம்..!
- அடுத்து வள்ளுவருக்கும் கலக்கும்..
- எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!''--------> ஈரமான ரோசாவே, நன்றே நடக்கட்டும். அதுவும் இன்றே நடக்கட்டும். காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போகலாம்.
- ஏம்மா, முருகானு கத்துற? மு.கநு கத்தியிருக்க வேண்டியதுதானே. நீ முருகானு கத்தினதைப் பார்த்து, சுத்தி இருக்கிறவங்க தலைவரைத் தப்பா நினைக்க மாட்டாங்களா’னு அஞ்சாவது படிச்சப்பவே பகுத்தறிவுக்கொழுந்தா இருந்த கனிமொழி, அரசியலுக்கு வந்ததில் ஆச்சர்யமே இல்ல - ஓ அப்ப நடிப்பு 5 வயசிலேயே ஆரம்பிச்சிருச்சா. அரசியலுக்கு வந்ததில் ஆச்சரியம் இல்லை.
- கனிமொழிக்கு எதிரான சதியை யார் பண்ணினாலும் சரி... ஒரே ஒரு தடவை திகார் ஜெயிலைப் போய்ப் பார்த்துட்டு வாங்க. உங்களால் ஒரு நாள் அங்கே இருக்க முடியும்னு தோணுச்சுன்னா, நீங்க தொடர்ந்து பண்ணுங்க - கவலைப்படாதீங்க ஸ்டாலின் திகார பாத்துட்டாரு, ஆனாலும் சதி தொடருதே.
- இந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?' - கஷ்டம்தான், 1.76 லட்சம் கோடின்னா சும்மாவா. வெயிட்டாத்தான் இருக்கும்.
- பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்கு. ஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்’ - அப்புறமென்ன இனிமே ஜாமீனுக்கு அப்ளை பண்ண வேண்டாம்.
- ஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும். - நல்லா விசாரிச்சு பாருங்க, ராசா குடும்பமும் சாக்லேட் கொடுத்திருக்கும், கனிக்கு ஜாமீன் கொடுக்காமலிருந்ததுக்காக.
- திகார் ஜெயில்ல இருந்து கோர்ட்டுக்குக் கிளம்பினப்ப, அங்கே இருக்கிற கைதிகளோட குழந்தைகள் சிலர், 'இனிமேல் இங்க வர மாட்டீங்களா?’னு அழுது இருக்காங்க. எங்கே போனாலும் யாரோட கஷ்டத் தையும் பொறுக்காத குணம் என் பொண் ணுக்கு.- அதனால இனிமே நீதிபதி ஜாமீன் கொடுத்தாலும் கனியக்கா வாங்காம சிறைக்குள்ளேயே இருப்பார்.
- சீதை' தீயில் குதிக்க எந்த நாட்டின் பல்கலையில் பயிற்சி பெற்றார் என்று தெரியவில்லையே. ஓ.. தன்க்குன்னா இந்தக் கேள்வியெல்லாம் வராதில்ல, அது சரி.
- உடல் நலம் சம்பந்தமாத்தான் ரெண்டு பேரும் பேசினாங்களே தவிர, கனிமொழிபத்திப் பேசலை...
- சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும்...
- இந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?
- எம்.ஜி.ஆர். அவர்கள் கனிமொழியை அள்ளிக் கொழ்ஞ்சி, 'உங்க அப்பா மாதிரி நீ வருவம்மா’னு சொன்னார்"............. அப்புறமென்ன..... வருங்கால முதல்வர் ரெடி...! ஸ்டாலினுக்கு ஆப்புத்தான்....!
என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவார் |
- நெருப்புல குதிக்கிறவரைக்கும் சீதையும் தவறானவளாத்தான் பார்க்கப்பட்டாள்" - அப்புறம் ஏன் திஹாரை விட்டு வரணுமுன்னு துடியா துடிக்கிறீங்க?
- எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!
- உங்க அப்பா மாதிரி நீ வருவம்மா’னு சொன்னார்.
- கனிமொழி இலக்கியவாதியா? நாலு வார்த்தை எதுகை, மோனையில் மொக்கையாக எழுதினால்.. மு.க பொண்ணு என்பதால் ஃபேமஸ் ஆகி விட்டார். இல்லை என்றால் கை எழுத்துப்பத்திரிகை நடத்தும் எண்ணில் அடங்கதாவர் களிமொழியை விட அருமையாக இலக்கியம் படைக்கின்றனர்.
- அன்று எம்.ஜி. ஆர் சொன்னது இன்று அப்படியே நடக்கிறது.
- இந்த அம்மா தொல்லையாலதான் அந்த அக்கா அரசியலுக்கு வந்துச்சு இல்லாட்டு அதுபாட்டுக்கு கிறுக்கிட்டு கவிதைன்னு பில்டப் கொடுத்துட்டு இருந்திருக்கும்.
- நாராயணா, கொசுத் தொல்லை தாங்க முடியலை.
- ஏம்மா, முருகானு கத்துற? மு.க.னு கத்தியிருக்க வேண்டியதுதானே. இனிமேல் 'நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முக' அப்படின்னு கத்துங்க மகளையும் கத்த சொல்லுங்க. மு.க. வையும் நாக்க முகன்னு கத்த சொல்லுங்க.
- செந்தமிழ் மானாட்டில் ஆராய்ச்சி கட்டுரை எழுதப்பட்டு வாசிக்கப்படும் அளவுக்கு தற்பெருமையும் தகுதியும் வந்திருந்தால் கூடவே இதையும் தாங்கித்தான் ஆகவேண்டும்.
- அன்று எம்.ஜி.ஆர். சொன்னது இன்று அப்படியே நடக்கிறது!