அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம். அதே நேரத்தில் இந்தியாவை மூன்றாவது உலகம் (Third World) என்று அழைத்து வருபவர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு இந்தியா முன்னேறி விட்டது. கணினி தொழில் நுட்பத்தில் மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் இந்தியா முன்னேறி விட்டது - முன்னேறிக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், மேல் படிப்பிற்காகவும், வேலைக்காகவும், விடுமுறைக்காகவும் வெளிநாட்டவர் (குறிப்பாக அமெரிக்கர்களும் NRI க்களும்) இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். சென்னை, மும்பாய், பெங்களூரு, டில்லி மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் (பட்டி தொட்டிகளிலும்) வேலை வாய்ப்பு தேடி வெளிநாட்டவரும் NRIக்களும் வருவது சாத்தியம்.
இவ்வாறு வருபவர்களுக்கெல்லாம் இந்தியாவில் அவர்கள் தங்கும் சூழ்நிலைக்கேற்ப அன்றாடம் தேவைப்படும் முக்கியமான விஷயங்கள் பல. அதில் அதிமுக்கியமான பலவற்றை தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு அன்பர் விலாவாரியாக தொகுத்து யூட்யூபில் வழங்கியுள்ளார். இவர் விவரிக்கும் சில விஷயங்கள் சிக்கனம் தேடுபவருக்கும் மிக உதவியாக இருக்கும். அதில் சிலவற்றை கீழே கண்டு மகிழுங்கள்.
வாருமய்யா பரதேசியாரே. நான் பயந்து கொண்டிருந்த சர்குணராஜ் வீடியோ வந்தே விட்டது :-)
ReplyDeleteஎங்கள வச்சு காமெடி கீமெடி பண்ணலயே?
உங்களை வெச்சு காமெடி பண்ணுவேனா?
ReplyDelete"டெர்மினாலஜி" எப்படி?
காலத்திற்கேற்றாற்போல் நற்பல விஷயங்களை விவரிக்கும் சற்குணராஜின் விடியோக்களைப்பார்த்தபின் பதியாமலிருக்க முடியவில்லை. ஐயா வெள்ளை சட்டை, கருப்பு பாண்ட், கருப்பு டை, கருப்பு கண்ணாடியுடன் கலக்கியிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமின்றி அயல்நாடுகளிலும் இவ்வாறு பல அறிய விஷயங்களை அலசி வெளியிட்டுருக்கிறார்.
பரதேசி,
ReplyDeleteபிண்ணி பெடலெடுத்திருக்கிறார் சர்குணராஜ்.
வடிவேலு பாஷைல சொல்லனும்னா "நல்லாத்தான் வெளக்குராவ"
சிரிச்சுசு சிரிச்சு கண்ணெல்லாம் தண்ணி.
முரளி.