சனிக்கிழமை, சோம்பெறிதனம் அதிகம் இருக்கவே, மதிய சாப்பாடு வெளியே போய் சாப்பிடலாம்னு தீர்மானம்பண்ணிட்டு சில்லரை வீட்டு வேலைகளை செய்து முடித்தேன்.
மெதுவாக தயாராகி, எந்த கடைக்கு செல்லலாம் என்ற சர்ச்சையை எப்படியோ சுமுகமாக சமாளித்து, ஒத்துதீர்ப்பான கடைக்குள் நுழைந்தோம்.
நல்ல கூட்டம், கடையின் கதவிலேயே வரிசை நெருக்கமாக நின்றது. எப்படியும் வெறொரு கடைக்குசென்றாலும் தாமதம் ஆக வாய்ப்பு இருந்ததால் வரிசையில் தீர்மானமாக நின்றாகிவிட்டது.
ஆமை வேகத்தில் வரிசை நகர்வதக்குள் நானும் என் பிள்ளையும் பல தெரிந்த விளையாட்டுகளை விளையாடிமுடித்து சில புதிய விளையாட்டுகளை கண்டுபிடிக்க தயாராகும் தருவாயில் எங்கள் வாய்ப்பு வந்தது.
என் பிள்ளை முதலில் அவளுக்கு தேவயான உணவு வகைகளை பட்டியலிருந்து சொல்லி முடித்தாள். அப்போதுதான் கவனித்தேன், வேலை செய்யும் பெண்ணை, ஒவ்வொரு அசைவும் அவள் வேலைக்கு புதிதென்பதை மெல்லதெரிவித்து.
அடுத்து நான் என்பதை கூட உணராமல் அவளின் மேலான என் ஆராய்ச்சியில் இருக்க, என் பிள்ளை என்னைஉலுக்கினாள். அம்மா உன் வாய்ப்பு என்றாள்.
மெதுவாக நகர்ந்து அவள் அருகில் சென்று எனக்கு தேவையானதை தெளிவாக சொன்னேன். கேட்டு முடித்துஅவள் செயல்பட்டுக் கொண்டே அருகில் இருந்த ஊழியரிடம் என்னுடைய ஆர்டரை திரும்ப சென்னாள்.
அவளுக்கு நான் ஆர்டர் செய்த பொருளை செய்யத் தெரியவில்லை என்பதை உணர்வதற்கு முன் சக ஊழியர்அந்த உணவை குப்பையில் எறிந்திருந்தார். நான் ஒரு நிமிடம் ச்தம்பித்து அசையாமல் நின்றேன்.
சக ஊழியர் இப்போ என்னை பார்த்து, மன்னிக்கணும் அவள் நடுவில் cheese போடுவதற்கு பதிலாக வலது பக்கம்தொடங்கிவிட்டாள் அதான், உங்கள் உணவு இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும் என்று அடுத்த ஆர்டரில்மூழ்கினாள் ஆனால் நான் அந்த குப்பையில் போன உணவிலேயே இருந்தேன். அந்த பெண்ணின் முகமும்மாறியிருந்தது.
ஒரு நொடியில் கேடே இல்லாத தின்பண்டம் குப்பையில். மனதில் நெருடலுடன் கடந்து பணம் கொடுத்து, சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டும் ஆனது. ஆனாலும் தைத்து கொண்டே இருந்தது.
வண்டியில் ஏறி ப்ரீவே எடுக்க சிக்னலில் நிற்க ஒரு ஏழை குடும்பம், ஒரு சிறிய பொட்டலத்தை பங்குபோட்டுகொண்டிருந்தது.
இருப்பவனுக்கு அலட்சியம், இல்லாதவனுக்கு பொக்கிஷம்