Friday, April 02, 2021

சூடா


அப்பாடா வெள்ளிக்கிழமை (ஆனா, வர்றதும் தெரியல போறதும் தெரியலன்னு உங்களுக்கு தோணிச்சா, எனக்கும் தான்), இரவு உணவு முடிந்து, ஒரு படமும் பார்த்து முடிச்சாசு, நம்ம வடிவேலு சார் நடையில் (Vadivel Sir Style - lite) ஒரு சின்ன பசி. சிந்தனை உணவில் சுற்றி உருளைக்கிழங்கில் நின்றது.

சூடா சாதம், அதுல இரண்டு சொட்டு நெய், சூடா சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல் - நாக்கில் எச்சில் ஊறியது. யார் செஞ்சு தர்றது? சரி விடு. பேசாம, வண்டிய எடுத்துட்டு McD போய் ஒரு பிரெஞ்சு ஃப்ரைஸ் வாங்கிட்டு வரலாம்னு பார்த்தா, சமயம் தாண்டிடுச்சு. 

அதுக்குள்ள மனசு சுட சுட புஸ் புஸ் பூரி (சபோலா Saffalo எண்ணெய் விளம்பரத்தில் வர மாதிரி), மஞ்சள் கிழங்கு மாசாலாவோட சாப்டா எப்படி இருக்கும்கிற ஆலோசனைக்கு தாவி இருந்தது. "கடுப்பேத்துறார் மை லார்ட்", என்ன செய்ய? mind voice கேக்குது. 

டாக்கோ பெல் போய் சூடா பியஸ்டா Fiesta கிழங்கு வாங்கி sour cream வச்சு சாப்டா, செம்மயா இருக்குமே. "Taco Bell - Closed now" சொல்லியது கூகிள். அடுத்து Waffle House போய், சூடா Hashbrown, கொஞ்சம் வெங்காயம், காளான், மிளகாய் போட்டு முறுகலா வாங்கலாம்னா, பக்கத்துல கூட இல்லைன்னு கூகிள் ஆண்டவர் தகவல் சொன்னார்.

கடுப்பில் சமையலறையில் நுழைந்தேன் (கண்டிப்பா சமைக்க இல்லை), என்ன சரக்கு (Pantry la தாங்க) உள்ளது என்று தேடினேன், கையில் ஒரு பெரிய சிப்ஸ் பாக்கேட் சிக்கியது. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை. மிளகாய் தூள் எடுத்தேன், சிப்ஸ்ஸில் தூவினேன், சூடானா (காரமான) உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி. கடைசியில் ஆனேன் (couch potato) சோம்பேறியாக ..... வார இறுதியிலும். 





1 comment:

  1. கொஞ்சம் தந்தி பாஷை போல இருந்தாலும் நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க. எஸ்.வி.சேகரோட ஒரு நாடகத்துல ஒருத்தர் படம் எடுப்பது போல கதை சொல்லுவார், பார்க்கு கட்டு, பீச்சு கட்டு ந்னு அது மாதிரி உங்க மன நிலையை கட்டு கட்டு ந்னு சும்மா சூப்பரா சொல்லிட்டீங்க.

    பெரிய சிப்ஸ் பாக்கெட் எப்படி ஏழைக்கு அதுவும் எள்ளுருண்டையாகும், சின்ன சிப்ஸ் பாக்கெட் நா கூட ஒத்துக்கலாம்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!