“கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது” - கமலஹாசர் டிவிட்டரில்....
நாகேந்திரனார் உரை:
கடவுள் கிடையாது. ஆனால் சாதி உண்டு. கடவுளை நம்பறவன் என் சாதி.
முரளியார் உரை:
கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.
கோயில்ல கை வெச்சுகினா அவ்வளவுதான் என் கைல நாஸ்த்தி ஆயிடுவ
நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி.
நான் சாமியை நம்பரன்னா இல்லியான்னு செக் செய்ய தாவல
நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல.
நீ நம்பிகினா உன்னை கண்டுக்காம போயிகினே இருக்கரது சாமி கெடையாது, அது இந்த பால்டீக்ஸ் ஆளுங்க செய்ரது
பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.
நம்பர ஆளுங்க நெற்ய டைப்ஸ் கீது, அதுங்க எல்லாம் என் ஜனம்தான்
ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது
அத்தொட்டு இந்த ஜாதி பேசிகினா அது என்னாண்ட ஆவாது, சாமிக்கும் ஆவாது சொல்டன்.
உள்ளூர்காரர் உரை:
//கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா
என்பதல்ல கேள்வி.
என் கடவுள் நம்பிக்கை கோவில் கொள்ளையரை காப்பாற்றாது.
//நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர்
நம்பும் ஆண்டவன் செயலல்ல.
உன்னைக் கைவிட்டது நீ தேர்ந்தெடுத்த ஆள்வோர் செயல். நீ நம்பும் செயல்படாத ஆண்டவன் அல்ல.
//பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.
எல்லா வகை பக்தர்களும் என் உறவினர்.
//ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது
ஆனால் எல்லோரையும் உறவினார்ன்னு சொல்வதை சாதி ஒத்துக்காது. நாமும் சாதியை ஒத்துக்கொள்ளக் கூடாது.