Thursday, April 24, 2014

கப்பல் ஓட்டிய தமிழனும், காலில் விழும் தமிழனும்





  கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. செய்த குற்றம் சொந்த நாட்டு விடுதலைக்குப் போராடியதுதான்.
அவர் தண்டனை அனுபவித்து வெளியே வந்தபோது அவரை சிறைவாயிலில் வரவேற்க ஒரே ஒருவர் மட்டும் வந்திருந்தார். வெளியே வந்த வ.உ.சி.யை பிள்ளைவாள் என்று உரத்த குரலில் அழைத்தார். வெளியே காத்திருந்த மனிதர். அந்த ஒருவரை யாரென்று சிதம்பரம் பிள்ளையால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு குஷ்ட ரோகத்தால்  அவர் உடலும், முகமும் மாறியிருந்தது. அந்த ஒருவர்தான் தியாகி.சுப்ரமணீய சிவா.
     இது சோகம் நிறைந்த சுதந்திரப் போராட்ட கால வரலாறு..
2006 ம் ஆண்டு ஒரு அரசியல்வாதி 3 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.
  அமைச்சராக இருந்த காலத்தில் லஞ்சம் வாங்கியதாகவும் வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாகவும் பேராசிரியர் பொன்னுசாமி மேல் குற்றச்சாட்டு. குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதி மன்றம் அவருக்கு 3 ஆண்டு  சிறைத் தண்டனை வழங்கியது. சமீப காலத்தில்  லஞ்ச ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி பேராசிரியர் பொன்னுசாமிதான்.
    சிறையிலிருந்து வெளீயே வந்த போது அவரை பத்தாயிரம் பேர் ஊர்வலமாகச் சென்று அவரை வரவேற்றார்கள். வெளியே வந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர் தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை..
   தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கவில்லை..
    சமீபத்திய தேர்தல் பிரச்சார காலத்தில் பேராசிரியர் பொன்னுசாமி மீண்டும் அம்மா முன்னிலையில் அ.தி.மு.க..வில் சேர்ந்தார்
  தன்னுடைய அம்மா விசுவாசத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட 13-4-2014  நாளிதழான இந்து வில்  ஒரு முழு பக்க விளம்பரம் செய்திருக்கிறார்.அந்த விளம்பரம் வேறு சில தமிழ் தினசரிகளிலும்  வந்திருக்கிறது.. விளம்பரச் செலவு மட்டும் பல லட்சத்தைத் தொட்டிருக்கும் எவ்வளவு ஆனால் என்ன? எல்லாம் முத்லீடுதானே?
அம்மா காலடி நிழலில் திரும்பவும் இடம் கிடைத்து விட்டதே 
  அம்மா படத்துடன் வெளீயாகியிருக்கும் அந்த முழுபக்க விளம்பரத்தின்
அடிமை வாசகத்தை அந்த தமிழைப் படித்து மகிழுங்கள்.



       நன்றி          நன்றி         நன்றி

அம்மா   
     தங்களை நம்பினோர் கெடுவதில்லை  ?
    தங்களின் திருவடியின்றி
    வேறேதும் எனக்கு அடைக்கலமில்லை.
 கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் ,இதய தெய்வம், தங்கத் தாரகை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் 

     புரட்சித்தலைவி அம்மா அவர்களே “

 தாயுள்ளத்தோடு என்னை மீண்டும் கழகத்தில் இணைத்து கழகப் பணியாற்றிட நல்வாய்ப்பு வழங்கியமைக்கு தங்களின் பொற்பாதங்களில்
கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி பணிந்து வணங்குகிறேன்.

      தங்களின் உண்மை விசுவாசி

    பேராசிரியர் க. .பொன்னுசாமி எம்.எஸ்சி பி.எல்
          முன்னாள் அமைச்சர். திருச்சி புறநகர் மாவட்டம்.
 
- மு. கோபாலகிருஷ்ணன்

நினைவிற்குத் தேன்

ஆடி அசைந்து பள்ளி நுழைந்து
வெயிலும் நிழலும் அப்பிய முற்றத்தில்
அணிவகுத்து நின்று கடவுளை வாழ்த்திய காலை
நிழல் தேடி வட்டமிட்டு அமர்ந்து
கதை பேசிப்பேசி காகம் விரட்டி
கட்டித்தந்ததை உண்ட மரத்தடி மதியம்
ஆவலாய்க் காத்திருந்து மணிச்சத்தம் கேட்டவுடன்
ஆர்ப்பரித்த்து வெறியோடு வளாகம் விட்டு
அங்கும் இங்குமாய்ச் சிதறி ஓடிய மாலை
தன்னைவிடப் பிரம்பை நம்பிய ஆசிரியர்கள்
கேட்கக் கேட்கத் தாலாட்டாய் மாறும் அவர்கள் குரல்
கண்விழித்துக் கண்ட பகல் கனவு
சமைக்காத போதும் சாம்பார் மணக்கும் சத்துணவுக்கூடம்
கவனம் ஈர்த்த கிருத்துவக் கல்லூரிப் பெண்கள்
இடை இடைச் செரித்த பாடம்
பதைபதைக்கப் புரட்டிய வினாத்தாள்
படித்ததை எழுதி முடித்த நிம்மதிப் பெருமூச்சு
அறிவையும் ஆன்மாவையும் தொட்ட சிந்தனைகள்
இவை அனைத்தும் தந்த அனுபவம் கொண்டு
நான் நானாக உருவாகத் துவங்கிய கருவறை
கார்லி கலைக் கோயில்
- வாசு சண்முகம் 



Tuesday, April 22, 2014

சதி, சதி. எங்கும் சதிதான்




            
இந்தியா தேர்தல் இரண்டாம் ரிப்போர்ட்...

குஜராத்திலிருந்து மின்சாரம் கொண்டு வருவேன் என்று ஜயலலிதா 2011 தேர்தல் வாக்குறுதியில் கூறினார். ஜயலலிதாவுக்கும் மோடிக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருப்பதாக பத்திரிகைகள் கூறின ..அம்மா பதவி ஏற்பு விழாவில் மோடி கலந்து கொண்ட செய்திகளெல்லாம் பத்திரிகையில் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. 3 ஆண்டுகள்  ஆகியும் குஜராத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை..அங்கிருந்து மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள், ஆகக் கூடிய செலவினங்கள். .இடையில் வீணாகும்  மின்சக்தி பற்றிய விவரங்கள், அந்த துறை சார்ந்த நிபுணர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள்.
    சாதாரண மக்கள் அந்த வாக்குறுதியை நம்பியதே தவறு..இப்பொழுது கூடங்குளம் தரும் மின்சாரம் முழுவதையும் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்குத் தான் கொடுக்கிறது.ஆனாலும் மின்பற்றாக்குறை பிரச்னை தீர்ந்தபாடில்லை.
    சில வாரங்களாக கோடை வெய்யில் அதிகரித்துவிட்டது .தினமும் 2 மணி நேர மின்வெட்டு.அம்மா வாக்காளர்கள் அதிகம் உள்ள கிராமங்களீள் மின்வெட்டு சற்று அதிகம். எல்லா இடங்களீலும் சீராக இல்லை. இன்று முதல் மின்வெட்டு மேலும் ஒரு மணி நேரம் அதிகமாகிவிட்டது.
       ஜெயா டி.வி.யில் 24 மணி நேரமும் அம்மா நேரடி தேர்தல் பிரச்சார உரை.ஜெயா சினிமா சானலில், ஜெயலலிதா, புரட்சித்தலைவர்  நடித்த பழைய படங்கள் மாற்றி மாற்றி ஒளிபரப்பு.ஜெயா ம்யூசிக் சானலில் அம்மா, புரட்சித் தலைவர் சேர்ந்து பாடிய (வாய் அசைத்த )    டூயட் பாடல்கள் பாடிய காட்சிகள் இப்படியாக தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது
   குஜராத்தில் ஓடும் பாலையும் தேனையும் தமிழ்நாட்டுப் பக்கம் திருப்பி
விட முயற்சி செய்வோம் என்று பி.ஜே.பி.பிரசசாரம் .ட்


    3 வருடங்களாக மின்சாரமே குஜராத்திலிருந்து வரவில்லை..பாலும்.,தேனும் எப்படி வரும் என்று மூளை உள்ள ,சிந்திக்கும் திறன் உள்ள பகுதி மக்கள் மட்டுமே கேட்கிறார்கள்.அவர்கள் கர்னாடகாவில் ஆட்சி செய்த காலத்தில் (எடியூரப்பா காலம் )காவிரியில்
தண்ணீர் கூட திறந்து விடவில்லை .என்று தி.மு க எதிர்ப் பிரச்சாரம்
   நாடு முழுவதும் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பி.ஜே.பிக்குத்தான் தான் முதல் இடம். மற்றக் கட்சிகள் திணறிக் கொண்டிருக்கின்றன.10000 கோடிரூபாய் பட்ஜெட்டில் வேலை நடக்கிறது,.அதில் 3400 கோடி ரூபாய்  பிரச்சாரத்துக்கு மட்டும் ..கேட்கவா வேண்டும் ?
      தமிழ்நாட்டில் பி.ஜே.பி சொல்லத் தக்க வகையில் இல்லை.கூட்டணியைப் பயன்படுத்திக் கொண்டு காலைப் பதிக்க முயற்சி நடக்கிறது. .ஆனால் சகுனம் சரியில்லை என்று தோன்றுகிரது.
     நிறைய ஆட்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்..அவர்களுடைய ஆட்களூம் விலை போவதாகத் தகவல் நீலகிரி தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளருடைய மணு  காலதாமதமாக ஆவணம் கொடுத்த காரணத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டது. கட்சி வேட்பாளர் வேண்டுமென்றே ஆவணத்தை காலதாமதமாகக் கொடுத்ததாக கட்சியைச் சார்ந்தவர்களே கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு வேட்பாளர் மீது மேலிடம் விசாரனை
தி.மு.க. வேட்பாளரிடம் விலை போய்விட்டதாக தகவல் கசிகிறது. 2 ஜி.அலைக்கற்றை ஊழல் புகழ் ஏ..ராஜா தான் தி.மு.க வேட்பாளர்..அவருக்கு எந்த விலையும் பெரிதல்ல.
    பெரம்பலூர் தொகுதியில் பி.ஜெ.பி.சின்னத்தில் போட்டியிடுபவர் ஒரு பெரும் பணக்காரர். பல்கலைக்கழகம் .மருத்துவக் கல்லூரி,.,மருத்துவமனை இவைகளுக்கு சொந்தக்காரர் அதுமட்டுமல்ல.சொந்தமாக ஒரு கட்சியே வைத்திருக்கிறார்.அந்த கட்சிக்கு அவரே தலைவர். மற்றும் எல்லாம் .. .அந்த பெரும் பணக்காரர் தன் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை விலைக்கு வாங்கிவிட்டதாக  இந்து நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.
     மிகவும் பின் தங்கிய பெரம்பலூர் தொகுதிக்கு தேர்தல் காலத்தில் விஜயம் செய்வது ஒரு தனி அனுபவம்.என்னுடைய கணிப்பில் தமிழ்நாட்டிலேயே அதிகம் பணம் செலவிடப்படும் தொகுதியாக அது இருக்கும்..
இரண்டு நாட்களுக்கு முன் டிரக் லோடு நிறைய வேட்டிகள்,புடவைகள்,பெரம்பலூர் தொகுதியில் கைப்பற்றப்பட்டிருக்கிறது.அதன் மதிப்பு 30 லட்சம் என்று கூறுகிறார்கள். .வஸ்திர தானம் புண்ணீயம் என்று ஹிந்து மதம் சொல்கிறது. .அந்த தானத்தை செய்ய முடியாமல் தேர்தல் ஆனையம் தடுக்கிறது. இதை எதிர்த்து ஏதாவது செய்தாக வேண்டும் இல்லையென்றால் இந்து மதம் இந்த நாட்டில் அழிந்துபோகும் என்று பல தீவிர இந்துக்கள் சங்கடப்படுகிறார்கள்
..     நேற்று வரை கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார்கள் தஞ்சாவூர் தொகுதி பி.ஜே.பி வேட்பாளர் மீது 6 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
தேர்தலுக்காக கறுப்புப் பணம் நகர்வதில் தமிழ்நாடுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா முழுவதும் 214 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. .தமிழ்நாட்டில் பறிமுதல் செய்தது மட்டும் 40 கோடியைத் தொடுகிறது .தேர்தல் நெருங்க நெருங்க தொகை கூடுகிறது.
          தமிழ்நாடு எல்லவற்றிலும் எப்போதும் முதல் இடம்தான்.தமிழன் பெருமைப்படுவதில் நியாயம் இருக்கிறது.    
    அம்மா துதி பாடி பத்திரிகைகளீல் வரும் விளம்பரம் தமிழ்நாட்டின் தனித்தன்மையான அரசியல் சாதி வாரியாக போய் அம்மாவை வாழ்த்தி வணங்கி ஆதரவு தெரிவிக்கிறார்கள் ‘இங்கே பிராமண சஙத்துக்குத்தான் முதல் இடம்..கோயில் பிரசாதத் தட்டோடு சாஸ்திரிகள் புடை சூழ முக்கிய பிராமண சங்கத்துத் தலைவர்கள் ( அல்லது ஏஜண்டுகள் என்றும்
சொல்லலாம்..) போய்  அம்மாவை கண்டுகொண்டார்கள் .இவர்களீல் பலர்  மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகளீல் காண்டிராக்டர்கள்..இவர்கள் தங்களுடைய தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள சாதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் ...
  துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி எந்தக் கட்சியும் சேராத நடுநிலையாளர் என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார் .இப்பொழுது அவர் பாடு திண்டாட்டம்தான்..பி.ஜே.பி அம்மா கூட்டணி முயற்சியில் தோல்வி அடைந்த பிறகு இவர் நிலையில் குழப்பம் .பி.ஜே.பி போட்டியிடும் தொகுதிகளில் அந்த கட்சிக்கு வாக்கு அளியுங்கள். மற்ற தொகுதிகளில் அம்மா கட்சிக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதனால் பி.ஜெ.பி அணியில் இருக்கும் ம.தி.மு.க.,தே மு.தி.க ,பா.ம.கட்சிகளுக்கு வருத்தம்.
    சோ எப்போதுமே நடுநிலையாளர், அவர் விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது.என்று பி.ஜே.பி. கையை விரிக்கிறது..
    இது பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம் சோ சொல்லி வோட்டு போடுவோர் மொத்தமே பதினேழு பேர்தான் என்கிறார் ஒரு தே மு.தி.க.
யார் அந்த பதினேழு பேர் என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறார். சோவினுடைய மாமா,மாமி, அம்மாஞ்சி , அத்தான்குட்டி,,அக்கா.,அத்திம்பேர் வகையறாக்கள்தான் என்று விளக்கம் கொடுக்கிறார்.
.     அத்தனை வோட்டுகளும் மயிலாப்புர்,மாம்பலம் பகுதிகளில்தான் இருக்கும் .என்கிறார்
ம.தி.மு.க தலைவர் வை.கோ பேசும் போது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.தேர்தல் நடப்பது இந்திய பாராளூமன்றத்திற்கா அல்லது இலங்கை பாரளுமன்றத்துக்கா என்ற சந்தேகம் தான். அவருடைய பேச்சு முழுவதும் ஈழம் தான்...
இந்த லட்சணத்தில் தன்னைத் தோற்கடிக்க கேரளா சதி செய்கிறது என்று புலம்புகிறார்.கேரள அரசாங்கமா அல்லது கேரள மக்களா என்பது பற்றி அவர் விளக்கவில்லை . இந்த சதி பற்றிய பயம் கலந்த பேச்சு பல தலைவர்களுக்கு நாடகமாக ஆகிவிட்டது..
   மேற்கு வங்க முதல் அமைச்சர் தன்னுடைய தேர்தல் சுற்றுப் பயணத்தில் மால்டா என்ற நகரத்தில் உள்ள ஹோட்டலில்  தங்கியிருக்கிறார்..அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு தீவிபத்து ஏற்பட்டது.முதல் அமைச்சர் தங்கியிருந்த அறையிலிருந்து சற்று தள்ளி தான் விபத்து நடந்தது,. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவுதான் விபத்துக்குக் காரணம் என்று பூர்வாங்க விசாரனையில் தெரிய வருகிறது..என்பது பத்திரிகைச் செய்தி.
    ஆனால் கூச்சல் நாயகி மமதா அதையும் அரசியலாக்கப் பார்க்கிறார்.’
என்னுடைய தலைமையில் மேற்கு வங்கம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.அதைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் என்னைக் கொல்லச் சதி செய்கிறார்கள் .என்று கூறுகிறார்.அதோடு நிற்கவில்லை.நான் மாண்டாலும் திரும்பவும் மேற்கு வங்கத்திலேயே பிறப்பேன்..மக்களுக்கு தொடர்ந்து தொண்டு செய்வேன்.என்று வசனம் பேசியிருக்கிறார் இந்த வசனம் புளீத்துப் போன பழைய வசனம்.
   சுதந்திரப் போராட்டக் காலத்தில் தூக்கு மேடைக்குப் போகும்போது ஒரு போராளி பாடிய வங்காள மொழிக்கவிதை இது. .அந்த பழைய கவிதையைக் கடன் வாங்கிப் பேசுகிறார்.
   தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் சூறாவளி சுற்றுப் பயணத்தில் தன்னுடைய பங்குக்கு பேசியிருக்கிறார்.இதில் பிரச்னை என்னவென்றால்
அவர்  என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை.ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்துக்கு எப்போது தாவினார் என்பதே புரிவதில்லை.
அவர் தன்னுடைய சுற்றுப் பயணத்தில் தன் மனைவி பிரேமலதாவைக்
கூட்டி வர வேண்டும் என்று ஒரு தொண்டர் கூறுகிறார்..அவருடைய யோசனை நல்லதுதான்  என்று  பல தொண்டர்கள் கூறுகிறார்கள்
   விஜயகாந்த் பேசி முடித்தவுடன் அவர் மனைவி கணவருடைய பேச்சை புரியும்படி விளக்கிப்ப் பேசலாம்..அவர் தடுமாறும் போது தாங்கிப்  பிடித்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்
     மோடி நிச்சயமாக வித்தை தெரிந்தவர். வடநாட்டில் சாமியார் ராம்தேவ்  (யோகா குரு ) மற்றும் பல சாமியார்களோடு சேர்ந்து
நின்று போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்..ஆனால் தமிழ்நாட்டில் அவர் போஸ்கொடுக்க சாமியார்களைத் தேடுவதில்லை.இங்கே அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள எத்தனையோ சாமியார்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் .அவர்களை எல்லாம் விட்டு விட்டு மோடி சினிமா நடிகர் ரஜனியுடன் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார் இளைய தளபதி விஜய் யுடன்  . சேர்ந்து போஸ் கொடுக்கிறார்.
   மோடி டிரேட் தெரிந்தவர்,.எந்த சரக்கு எங்கே விலை போகும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்.
     அதனால் மோடி வித்தை ஜயித்துவிடும் என்று பலர் நம்புகிறார்கள்/.அல்லது நம்பவைக்கிறார்கள்..தேர்தலுக்குப் பிறகு
மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை. அவர்களெல்லாம் பாக்கிஸ்தானுக்குப் போக வேண்டியதுதான் என்று பி.ஜே.பி.தலைவர் ஒருவர் இப்பொழுதே கூறிவிட்டார்.இதைக் கேட்டு பலர் இப்பொழுதே மூட்டை.முடிச்சுகளுடன் தயாராகிவிட்டதாகக் கேள்வி. பாவம் எல்லைப்புறத்தில் வாகா  பகுதியில் எப்படி நெரிசலை சமாளிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
        கோலிவுட்டில் கொஞ்ச நாட்களாக படப்பிடிப்பு நடக்கவில்லையாம்..எல்லா எக்ஸ்ட்ராக்களூம்தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்பி விட்டார்கள். சின்னத்திரை நடிகர்களூம் கிளம்பிவிட்டார்கள்.வில்லன் பொன்னம்பலம் என்ற பெயரை யாராவது கேள்விப் பட்டதுண்டா ?அவரும் அம்மா கட்சிக்கு வாக்குகேட்டு பிரச்சாரம் செய்கிறார்.  நாலு வாரத்தில் ஊத்திக் கொண்டு நின்று போன சீரியலில் மூனு தடவை முகம்காட்டிய மூன்றாம் தர நடிகர்களூக்கு கூட நல்ல கிராக்கி..
  இந்த நிலையிலும் கரடிக்கு எந்த சான்ஸும் இல்லை அந்த அடுக்கு மொழியெல்லாம் இப்பொழுது எடுபடாது என்று கலைஞருக்கே தெரியும்  தனக்கு சான்ஸ் கிடைக்காத்தால் தன்னை யாரும் மதிக்கவில்லை ஆகையால் தன்னுடைய கட்சியைப் புதிப்பிக்கப் போவதாகக் கூறிவிட்டார்
     ஆம் ஆத்மி கட்சி அந்தோ பரிதாபம் .டெல்லியில் காட்டிய பலத்தை எல்லா இடத்திலும் காட்டலாம் என்ற முயற்சி..கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் கன்னத்தில் விழுந்த அறை கூட வாக்காக மாறும் என்று நம்புகிறார்கள்> 
  எப்படியோ புதிய சிந்தனையுடன் களம் இறங்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏகப்பட்ட சோதனை.மோடியை எதிர்த்து வாரணாசியில்
போட்டியிடுகிறார்.உருப்படியாக ஒரு கூட்டம் கூட நடத்த முடியவில்லை.எல்லா கூட்டத்திலும் கலகம், கல்லெறி கைகலப்பு கூச்சல்.இப்படிப்பட்ட ஜனநாயக வழிமுறைகளீல் பி.ஜே.பி யினர் கெஜ்ரிவாலை திணரச் செய்து கொண்டிருக்கிறார்கள்..புனிதத் தலமான வாரணாசி இப்பொழுது குருஷேத்ரமாக மாறி விட்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்
இதெல்லாம் மிகைப் படுத்தப்பட்ட தேர்தல் உத்திகள் .
  ஆனால் இந்த குருஷேத்ரத்தில் யார் பஞ்சபாண்டவர்  யார் கவுரவர்கள் என்பதுதான் தெரியவில்லை.
    இது எப்படி ஆனாலும் ஜனநாயகத் திருவிழா வந்துவிட்டது,.
      நிறைய செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது எல்லாவற்றையும் விமர்சனத்துடன் எழுத நேரம் இல்லை. இப்போதைக்கு இவ்வளவுதான்

                                     - மு.கோபாலகிருஷ்ணன்