Wednesday, December 21, 2011

பின்னூட்டங்களில் இருக்கும் நகைச்சுவை - பகுதி 2.


சமீபத்தில் பாமகவின் அன்புமணி பேசிய கூட்டத்தில் பேசிய இளைஞர் அணிச் செயலாளர் அறிவுச்செல்வன் ''சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவுதிரைப்படத்தில், போதி தர்மனைப் பற்றி காட்டி இருக்கிறார்கள். சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலை மற்றும் மருத்துவம் கற்றுத் தந்த குருவான அவர், நமது தமிழ்நாட்டின் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு மேல் உள்ள வரலாற்றை நான் சொல்கிறேன். அந்த பல்லவ வம்சம் என்பது நமது வன்னியர் சமூகம்தான். அதிலும் அந்த போதி தர்மனின் வம்சம் என்பது நமது அய்யாவின் வம்சம்தான். அந்த போதி தர்மரின் மரபணு நமது சின்ன அய்யாவிடம்தான் இருக்கிறது'' என்று பேச, 'பின்னிட்டாருய்யாஎன்று கூட்டத்தினர் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
 அன்புமணி தனது பேச்சில்  ''அரசியல் என்றாலே அடிதடி, சாக் கடை என்ற மன ஓட்டத்துக்குத்தான் மக்கள் வருகிறார்கள். அப்படி இல்லாத ஒரு அரசியலைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பா..-வின் புதிய அரசியல். அரசியல் நாகரிகமானது; அரசியல் சுகாதாரமானது; அரசியல் பாதுகாப்பானது என்ற நிலைமையை உருவாக்கப் பாடுபடவேண்டும். அப்படிக் கொண்டுவந்தால்தான், திராவிடக் கட்சிகளால் சீரழிந்துகிடக்கும் தமிழ்நாட்டை மீட்க முடியும். அதற்காக நாம் அயராது பாடுபட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இனி நான் ரசித்த பின்னூட்டங்கள்: 

போதி தருமனுக்கு பொறந்த போக்கத்த பயலுகளா நீங்க..

இவர் உடம்புல இருக்கற டி.என்.ஏவை தூண்டி விடுவோம். சின்னய்யாவை படத்துல வர்ற மாதிரி பாட்டில்ல ஊறப் போடுங்கய்யா.

இந்த போதி தர்மரின் ஜீன்ஸ் நமது சின்ன அய்யாவிடம்தான் இருக்கிறது -அவ்ளோ பழைய ஜீன்ஸா,இவ்ளோ நாளா கிழியாமலா இருக்கு.அப்படியே என்ன பிரான்ட் ஜீன்ஸ்னும் சொல்லிடுங்க.

போதி தர்மன் - பல்லவர்கள் தெலுங்கர்கள் ஆயிற்றே. பின் வன்னியர்கள் தெலுங்கர்களா ?. பேசாமல் இவர்களை ஆந்திராவிர்க்கு நாடு கடத்தினால் தமிழகம் சுபிஷ்க்கும்.

சீன அரசியலுக்கு தலைமை ஏற்க வாரிசை கூப்பிடுகிறார்கள் .அனுப்பிவிடுவோம்.

சரிப்பா. அதுக்காக சிக்ஸ் பேக் எல்லாம் கேக்கப்படாது. அப்புறம் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கப்பா நோக்க்க்கிறப்போறார்.

அய்யா.....நீங்க உண்மையுலேயே Mentalலா இல்லை........Mental மாதிரி நடிக்குறீங்களா

"போதி தர்மனின் வாரிசுதான் அன்புமணி!" - இந்த விசயம் போதி தர்மனுக்கு தெரியுமா?

அந்த பல்லவ வம்சம் என்பது நமது வன்னியர் சமூகம்தான். அதிலும் அந்த போதி தர்மனின் வம்சம் என்பது நமது அய்யாவின் வம்சம்தான் >>>
ஆமா, அய்யாதான் மகேந்திரவர்மர், புள்ளைதான் நரசிம்மவர்மர். எல்லாருமா சேர்ந்து தமிழ்நாட்டின் மற்ற இடங்களை நோக்கி படையெடுத்து மிச்சம் இருக்கிற மரங்களையும் வெட்டிச் சாய்ச்சிருங்க!

மொதல்ல இருக்கிற ஒன்னு ரெண்டு அறிவை ஒழுங்க உபயோகப்படுத்துங்கையா!  அதுக்குள்ள ஏழாவது அறிவுக்கு போயிட்டாக!

ஐயா அன்புமணி நீங்க டோங்லி வாரிசுனு ஊருல பேச்சு

இந்த வன்னிய போதி (பேதி) தருமர் எத்தனை பேருக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்? எம் பி பி எஸ் பரிட்சையில் ஐந்து வருடங்கள் வருட வாரியாக வாங்கிய மார்க்குகள் என்னென்ன? அதற்கு முன்னால் புகு முக வகுப்பு (பி யூ ஸி)யில் வாங்கிய மதிப்பெண்கள் என்ன ? தெரிந்தால் யாரவது சொல்லுங்களேன் இந்தப் பேதி தருமரின் மறு பக்கத்தை!

சரி. இது போதி தருமனுக்கு தெரியுமா?

இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

இந்த விசயம் சீனாகாரனுக்கு தெரியுமா?

போதி தர்மனின் வாரிசை சீனாவுக்கு அனுப்பிவிடுவோமா?

அந்த போதி தர்மரின் மரபணு நமது சின்ன அய்யாவிடம்தான் இருக்கிறது  அப்படியா, இவரையும் இவரது அப்பாவையும் சீனாவில் விட்டு விட்டால் ரொம்ப நல்ல இருக்கும்.

அய்யோ... இவுங்க அடங்கவே மாட்டாங்களா??

போதி தர்மனின் வாரிசுதான் அன்புமணி ........ அப்போ இவரும் சீனாவுக்கு போயிடுவாரா?

முரளி இராமச்சந்திரன்

Sunday, December 18, 2011

தமிழ்சங்கத்தின் விவாதக் குழுமம்


இந்தத் தலைப்பு சரியா! சரியில்லையா! ன்னு தமிழ் நல்லா தெரிஞ்ச நாகு, மெய்யப்பன், சீனிவாசன், வெங்கட் செட்டியார், சத்யா, நடராஜ மூர்த்தி மற்றும், மு.கோ போன்ற தமிழ் அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.  

சொல்ல வந்த விஷயம் (விடயம் நு எழுதனுமோ!) இதுதான்.  தமிழ் சங்கதின் சார்பில் ஒரு குழுமமா சேர்ந்து சில விஷயங்களைப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் கூட்டம் போட்டு பேசினோம். வெறும கூட்டம் போட்டு பேசரதோட, பல நல்ல புத்தகங்களை கடனா வாங்கிட்டு போய் படிச்சுட்டு அடுத்த கூட்டம் நடக்கும் போது கொண்டு வந்து தரலாம்.  உங்க கிட்ட இருக்கர புத்தகங்களையும் இப்படி கொண்டு வந்து கொடுத்து நம்ப மக்களுக்கு படிக்கர ஆர்வத்தையும், படிக்கர விழிப்புணர்வையையும் கொண்டு வரலாம்.
 

சீனிவாசனின் தொடக்க உரைக்கு அப்புறம் தமிழ் சங்கத்தின் இந்த கூட்டங்கள் நல்லா போகுமா போகாதான்னு தெரிஞ்சுக்க நம்ம வெங்கட் செட்டியார் ‘சந்தேகம்’ ங்கர தலைப்பில் பேசினார்.  வெறும பேசினார்ன்னு சொல்லக் கூடாது, சந்தேகமே இல்லாம, நம்ம எல்லோருக்கும் சந்தேகம்ன்னா என்னன்னு கண்டிப்பா சந்தேகம் வர்ர மாதிரி பேசினார்.  இப்படி பட்டைய கிளப்பி வெங்கட் பேசினதும், சத்யா மாறிவரும் பல மாறுதல்களைப் பற்றிப் பேசி நாம இழந்தை பல விஷங்களைப் சொல்லி நம்மை மறுபடி நம்முடைய பால்ய காலத்துக்கு கொண்டு சென்றார்.  கடைசியா நான் ‘அரசியல்’ ங்கர தலைப்பில பொதுவா அரசியல்ன்னா என்ன, நம்மோட தினசரி வாழ்க்கையில அரசியல் எப்படி இயங்குதுன்னு பேச ஆரம்பிச்சு, 45 நிமிஷம் எல்லோரும் விவாதிச்சதுக்கு அப்புறம் வெறும அரசியல்ன்னா என்னங்கரதுல வந்து நின்னதோட கூட்டம் முடிவுக்கு வந்தது.  தமிழ்த்தாய் வாழ்த்தோட துவங்கிய கூட்டம் தேசிய கீதத்துடன் நிறைவுக்கு வந்தது. 

கடந்த சனிக்கிழமை (12.17.2011) சங்கத்தின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.  இந்த முறை க்ரெடிட் மதிப்பீட்டு எண் என்பது என்ன அதை எதற்காக பார்க்கிறார்கள் என்பது பற்றி நண்பர் ராஜ்குமார் விவரமாகச் சொன்னார்.  இதுபோல பல அரிய பெரிய விஷங்கள் இவரிடம் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்தான். 

இவரை அடுத்து நண்பர் மெய்யப்பன் (தமிழ் சங்கத்தின் தமிழ் ஆசிரியர்) தமிழுக்கு யார் எதிரி என்று காரசாரமாக பேச வந்தவர் முதல் எதிரிகளாக நாகு, நான் மற்றும் சீனிவாசனை உதாரணமாகக் காட்டினார்.  இவர் சொல்ல வந்த கருத்து தமிழ் நசிந்து வருகிறது, நல்ல எழுத்தாளர்கள் பலர் இருந்தும், படைக்கவும், படைப்புகளைப் பதிப்பிக்கவும் ஆர்வம் இல்லாம இருக்காங்க, தமிழ் நாட்டு கோவில்கள்ள இங்கு தமிழிலும் அர்சனை செய்யப் படுங்கர போர்டை பார்த்தா வெக்கமா இருக்கு, தமிழ் கொஞ்சம் கொஞ்சமா நசிஞ்சு போயிட்டே இருக்குன்னு விலாவரியா பேசினார், இது பல நிஜ தமிழ் ஆர்வலர்களுக்கும்,  நம்ம பலருக்கும்  காலம் காலமாக இருக்கும் ஒரு ஆதங்கம்தான்.  ஆனா அதை இவர் சொன்ன விதம், இவருடைய கவலை, தமிழக அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுபோல் போலியாக இல்லாமல் ஹிருதயத்திலிருந்து வந்த ஒரு கவலைங்கரதை விளக்க வேண்டிய அவசியமில்லை.  இவர் பேச்சை குறுக்கிட்டு என்னை மாதிரி எல்லோரும் பேசினாலும், பேச்சு தங்கு தடையில்லாமல் நல்லா இருந்தது.   

ரஜனியோட டிசம்பர் 12 பிறந்த நாளை கொண்டாடர தமிழக மக்கள், தேசிய கவி பாரதியோட டிசம்பர் 11 பிறந்த நாளை கண்டுக்காம இருக்காங்களேன்னு ரொம்ப வருத்தப் பட்டார் மெய்யப்பன்.  ரஜனி பிறந்த நாள் ஒரு கமர்ஷியல் விஷயம், பாரதி  பிறந்த நாள் நம்மை போல பலருக்கு உணர்வு பூர்வமாண ஒன்னு, இதை பத்தி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லைங்கரது என்னோட கருத்து.  இதைத் தவிர அதிகமா பேசப் பட்ட விஷயம் ப்ளாக்ங்கர விஷயம் வந்ததும், ஒரு சென்சார்ஷிப் இல்லாமல் யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் எழுதலாம்ங்கரது.  நாகுவோட கவலை ஒற்றெழுத்து எப்படி எழுதரதுன்னு கூட ப்ளாகுல எழுதர நிறைய பேருக்குத் தெரியலை, ரவியுடைய கவலை, இப்படி தப்பு தப்பா பலர் எழுதரதுனால கூட பல படிச்சவங்க எழுதரதுல ஆர்வம் காட்டாம இருக்கலாம்.  எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.  தமிழை தப்பு தப்பா எழுதினா தப்பு இல்லை.  தப்பான கருத்தை சரின்னு எழுதினாதான் தப்பு.  (ஹீம் நாடகம், கதைன்னு எழுதும் போது எனக்கு இப்படி ஒரு ஃப்ளோ வரதே இல்லை)

ஒரு சின்ன சிற்றுண்டி இடைவெளி (அதாங்க ஸ்நேக்ஸ் ப்ரேக்) க்கு பிறகு மு.கோபாலகிருஷ்ணன், பேசினார்.  இவர் பேசியதை சுருக்கமா சொல்லனும்னா கூட ஒரு பெரிய கதை மாதிரி சொல்லனும்.  பல விஷயங்களை பளிச்ன்னு சொன்னார்.  மெய்யப்பன் கருத்துகள் பலதை ஆதரிச்சும் சிலதை எதிர்த்தும் பேசினார்.  அந்தக்கால அரசியலில் காமராஜர், முத்துராமலிங்க தேவர் ரெண்டு பேருக்கும் நடுவில இருந்த பல விஷங்களைச் சொன்னார்.  பெரியாரைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு, அவருடைய பல நல்ல எண்ணங்களை பத்தி சொல்லிட்டு அந்தப் பேச்சு அரசியலை நோக்கி போறதை தெரிஞ்சுகிட்டு அதை தவிர்த்துட்டு பேசினார்.  இவர் பேச்சு நல்ல பல கருத்துக்களோட இருந்தது.

எனக்கு இப்படிப் பட்ட கூட்டங்கள் பிடிக்கும், ஏன்னா அடுத்தவங்க கருத்து என்னன்னு தெரிய வரும் அது மட்டும் இல்லாமல், கருத்துப் பகிர்வுங்கரது அருமையான ஒரு விஷயம்.  பேசப் பேச பல விஷயங்களைப் பத்தி ஒரு தெளிவு வரும்.  ஆனா இப்படிப் பட்ட நல்ல கூட்டங்கள் தொடர்ந்து நடக்கரதுக்கு நம்மல மாதிரி பலருடைய ஒத்துழைப்பு அதி முக்கியம்.  பேச தயாரில்லையா,  வேண்டாம், ஆனா, வந்து பங்கெடுத்துக்கலாமே.  அதை செஞ்சா 10-15 இருக்கர இந்தக் கூட்டம், 40-50 ஏன் 100 பேர் கலந்துக்கர கூட்டமா மாறும். 

இன்னிக்கு நம்ம எல்லோருக்கும் இருக்கர ஒரு கவலை, நம்ம நாட்டின் அரசியல் நிலைமை மாறாதா, யார் எதைச் செஞ்சா இது மாறும், அன்னா ஹசாரே காப்பாத்துவாரா, மோடி காப்பாத்துவாரா, எப்படி நாம இதுல பங்கெடுத்துக்கரதுன்னு தினம் தினம் யோசிக்கரோம், அதே யோசனையோட, மாசம் ஒரு தடவை இப்படி கூட்டங்களுக்கு வந்தால், ஊர் கூடி யோசிச்சா ஒரு வழி பிறக்காமலா போகும்.

முரளி இராமச்சந்திரன்

படம் பாரு கடி கேளு - 51



கனபாடிகள்: ம்... மாப்பிள்ளை ரொம்ப பிஸியாம். கல்யாணம் கூட "Flying visit" ல வந்து அதுவும் இந்தியாவில் தான் பண்ணிப்பேன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம். அதுக்காக முகூர்த்ததை "ரன்வே" யில் செய்யறது கொஞ்சம் ஓவரா இல்லே?

Friday, December 09, 2011

இந்தியா வந்தியா?

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம். அதே நேரத்தில் இந்தியாவை மூன்றாவது உலகம் (Third World) என்று அழைத்து வருபவர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு இந்தியா முன்னேறி விட்டது. கணினி தொழில் நுட்பத்தில் மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் இந்தியா முன்னேறி விட்டது - முன்னேறிக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், மேல் படிப்பிற்காகவும், வேலைக்காகவும், விடுமுறைக்காகவும் வெளிநாட்டவர் (குறிப்பாக அமெரிக்கர்களும் NRI க்களும்) இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். சென்னை, மும்பாய், பெங்களூரு, டில்லி மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் (பட்டி தொட்டிகளிலும்) வேலை வாய்ப்பு தேடி வெளிநாட்டவரும் NRIக்களும் வருவது சாத்தியம்.
இவ்வாறு வருபவர்களுக்கெல்லாம் இந்தியாவில் அவர்கள் தங்கும் சூழ்நிலைக்கேற்ப அன்றாடம் தேவைப்படும் முக்கியமான விஷயங்கள் பல. அதில் அதிமுக்கியமான பலவற்றை தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு அன்பர் விலாவாரியாக தொகுத்து யூட்யூபில் வழங்கியுள்ளார். இவர் விவரிக்கும் சில விஷயங்கள் சிக்கனம் தேடுபவருக்கும் மிக உதவியாக இருக்கும். அதில் சிலவற்றை கீழே கண்டு மகிழுங்கள்.












Saturday, December 03, 2011

பித்தனின் கிறுக்கல்கள் - 46

கனிமொழி ஜாமீன்.

குற்றம் சாட்டப் பட்டது சாட்டப் பட்டதுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. நிரபராதி என்று தீர்ப்பு வரவில்லை, ஆறு மாதம் கோர்ட் கோர்ட்டாக ஏறி இறங்கி போன மாதம் சோனியாவின் காலில் விழுந்து, குட்டிக்கரணம் போட்டு, அழுது, ஒப்பாரி வைத்து ஒரு சப்பை ஜாமீன் வாங்கி விட்டு அதுவும் ‘சோ’ சொன்னது போல் பல குழப்படி செயல்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது. இதற்கு ஒரு பெரிய பில்டப் கிழவனாரால் கொடுக்கப் பட்டு, இதற்கு தியாகம் என்ற பெயர் சூட்டப் பட்டு அள்ளக் கைகள் பேனர் ஒட்டி, கூப்பாடு போட்டு இவைகளுக்கு நடுவில் சென்னை வந்திருக்கிறார்.

அன்னா ஹசாரேவின் அடுத்த உண்ணாவிரதம்

நாடாளுமன்ற குளிர் காலத் தொடரில் அன்னா ஹசாரே அவரும் அவரது குழுவினரும் சொன்ன லோக்பால் மசோதாவை அவர்கள் சொன்ன படி மத்திய அரசு நிறைவேற்றாததால், அதை அவர்கள் சொன்ன படி அரசு நிறைவேற்றும் வரை மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். நல்லது,

தமிழ்ப் படங்கள்

7ம் அறிவு

Hugo

The next 3 Days

Unknown

The Hit List

IP Man 1 & 2:


பதிவை முழுவதும் இங்கே படிக்கலா ம்

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்