Saturday, September 09, 2006

ஆயிரம் ஆண்டுகளில்....

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றால், உலகில் என்ன மாற்றங்கள் இருக்கும் என்று ஒருவர் கேட்கிறார்(இங்கே கிளிக்கவும்)


எனது பட்டியல்

1. தமிழர்கள் ஆங்கிலத்தை மறந்திருப்பார்கள்.
2. இந்தியாவில் சாதி அடிப்படை அரசியல் மாறாதிருக்கும்.
3. அமெரிக்கா அல் கய்டாவின் தலைவரை தேடிக்கொண்டிருக்கும்.
4. இந்தியா ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கப் பதக்கம் வாங்கும்.
5. சென்னை கார்ப்பரேஷன் ரோட்டில் சாக்கடை சரி செய்ய பள்ளம் தோண்டி தவறாக ஒரு வயரை வெட்டினால், அமெரிக்க பங்கு சந்தை ஸ்தம்பிக்கும்.
6. ராத்திரி உணவுக்கு பீட்ஸா வேண்டுமென்று நினைத்தாலே போதும். வீட்டு கம்ப்யூட்டர் வீட்டுக்கே வரவழைத்துவிடும். பெங்களூரில் அடுத்த வருடம் டிரையல்.
7. பாலஸ்தீனப் பிரச்னை தீராது.
8. தமிழ்நாடு தென்னமெரிக்க உளுந்து மற்றும் புளி கார்ட்டெல் மிரட்டலுக்கு நடுங்கும்.
9. சில மனிதர்கள் செயற்கையாக ஆயிரம் ஆண்டு வாழ வைக்கப் படுவார்கள்(மற்ற யாருக்கும் COBOL தெரியாததால்)
10. Y3K ஒரு பிரச்னையாக இருக்காது
11. இந்தியத் திரைப் படங்களில் கம்ப்யூட்டர் மௌஸ் அமுக்கி சண்டை போடுவார்கள்.
12. பத்து ஆண்டுகளுக்கு முன்னால், கூகுள் கம்பெனி குரங்குத் தொல்லையால் திவாலாகி இருக்கும்.
13. இதை இன்னும் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது(அதாங்க - Get a life!)

Friday, September 08, 2006

சீவக சிந்தாமணி (ஒலி வடிவில்)

எல்லாரும் இப்படி குந்துங்க! பாஸ்டன் பாலாவோட அம்மா சீவக சிந்தாமணி கத சொல்றாங்களாம், கேப்போம்!

குந்தியாச்சா? சின்னப் பசங்கல்லாம் ஜோரா ஒருதர கை தட்டுங்க!

சரி - இனிமே சத்தம் போடாமே, குறுக்க குறுக்க பேசாமே, ஊங்கொட்டாமெ இங்கே கிளிக்கவும்!
அத கேட்டுட்டு அப்பறமா இங்கே கிளிக்கவும்!

To listen to Seevaga Chinthamani, click here! And then here!!

Thursday, September 07, 2006

Save Nirali!

An appeal from the parents of Nirali Naik (http://www.savenirali.com)

Our 18-month old daughter Nirali Naik has been diagnosed with a rare type of Acute Lymphoblast Leukemia and needs a marrow transplant to be treated.

She needs a bone marrow donation from a Indian/South Asian donor. Since Indians are a minority race in USA, in the national marrow registry, there aren't as many Indians registered and as a result, the possibility of a match is much less for patients of Indian origin. There's no organized marrow registry in India either that we can look for a match in.

Nirali is going through chemotherapy treatment right now but this type of ALL has a great chance of relapse if not treated with a bone marrow transplant.

We urge you please pray for Nirali and register for bone marrow donation to see if you can save her life. Bone marrow donation has no long term side effect at all. The test for marrow match is very simple - just a blood draw or even simpler - an oral swab!. And it is absolutely FREE for minority races.

Apart from the medical information posted on this website, you can also refer to National Marrow donor program website http://www.marrow.org This website has very good information on the donors program, how the test is conducted and all other questions one may have about marrow donation.

Please consider saving a child’s life. There is no bigger gift you can give to anyone.

Nirali's parents - Rucha and Jignesh

For more details, please visit this site. Please register today in the National Marrow Donor Program and give the gift of life!

Tuesday, September 05, 2006

தலைப்புச்செய்திகள்

ஒரு பிரபலமான நாளிதழிலிருந்து திரட்டிய சில உண்மையான விசித்திரமான செய்தித்தலைப்புகள்:
1. சந்தனம் கடத்தியவருக்கு காப்பு

2. வாழவந்தாள்புரம் - மாமனாரை வெட்டிய மருமகள் கைது
3. கள்ளக்குறிச்சி - வீடு புகுந்து பொருட்கள் சூறை. சகோதரர்கள் 4 பேர் கைது
4. காந்தி சிலையருகே மது குடித்த ஆசாமிகளுக்கு தண்டனை -
விடிய விடிய காந்தி சிலையைச்சுற்ற வேண்டும்
5. மனைவி தாய் வீட்டிற்குப்போனதால் கணவன் தீக்குளித்து சாவு
6. விஷம் குடித்த வாலிபர் ரயிலில் அடிபட்டு சாவு
7. வி.ஏ.ஓக்கு 'கும்மாங்குத்து' - 4 வாலிபர்கள் கைது
8. ஸ“ட் கிடைக்காத சிட்டிங் எம் எல் ஏக்கள்
9. மனைவியைத்தாக்கிய கணவருக்கு 'தர்ம அடி'
10. குடிபோதையில் ரகளை - போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீசியதாக 7 வக்கீல்கள் கைது.
ஒரு கட்சி வக்கீல் தப்பியோட்டம்

சின்னமோ சின்னம்

அமெரிக்காவில் தேர்தல்களில் யானையையும் கழுதையையும் பார்த்தவர்களுக்கு நமது இந்தியாவில் உள்ள கட்சிகளின் சின்னங்கள் தலை சுற்றலைத்தான் தரும். நடந்து முடிந்த 2006ம் ஆண்டு தமிழகத்தேர்தலில் ஈரோட்டில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் சின்னங்கள் பல புன்னகைக்குரியவை. ஈரோட்டில் 11 தொகுதிகளில் போட்டியிட்ட 122 வேட்பாளர்கள்களில் சிலர் பயன்படுத்திய சின்னங்கள்:
கிரிக்கட் பாட்
கேரட்
ஷட்டில்காக்
காஸ் சிலிண்டர்
தேங்காய்
ஹார்மோனியம்
மிட்டாய்
மெழுகுவர்த்தி
ரயில் இஞ்சின்
ரம்பம்
ரொட்டி
செங்கல்
பலூன்
கோடரி
மாம்பழம்
வாழைப்பழம்
டார்ச்லைட்
கட்டில்
தொப்பி

Sunday, September 03, 2006

செப்டம்பர் மாத லொள்ளு மொழி(கள்)

இக்கரைக்கு அக்கரை பச்சை
அக்கரைக்கு இக்கரை பிச்சை

Saturday, September 02, 2006

ஆசை

கடுமையான குளிர் காலத்தில் வெயிலைக் காண ஆசை
ஜோவென்று கொட்டும் மழையில் சுட சுட வடை தின்ன ஆசை
சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் மரத்தை தேடி ஓட ஆசை
குவிந்து இருக்கும் பனியில் குழந்தைபோல் உருண்டோட ஆசை
வண்ண வண்ண இலைகளைக் கண்டு காவியம் பாட ஆசை
இலையில்லா மரத்தைப்போல் துறவியாய் நிற்க ஆசை
பூத்துக் குலுங்கும் மலர்களைப்போல் மகிழ்ச்சியாய் இருக்க ஆசை
இயற்கையுடன் என்றும் இணைந்து இருக்க ஆசை!!!

Friday, September 01, 2006

வைரக்கற்கள்

மரக்கிளையில் இருக்கும் பனி உருகி
சிறு துளியாய் நிற்கும் பொழுதில்
சூரிய கதிரொளி அதன்மேல் பட்டு
விலை மதிக்க முடியாத
வைரக்கற்களாய் இயற்கையை அலங்கரிக்கின்றது
பளபள என மின்னும்
மாணிக்கம் மரகதம்
வைடூரியம் கோமேதகம்
நீலம் என்று கற்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது

பட்டாம்பூச்சி

வண்ண வண்ண பட்டாம்பூச்சி
நம்மை வியக்க வைக்கும் பட்டாம்பூச்சி
மலரிலும் மென்மையானது பட்டாம்பூச்சி
மனிதனை மகிழ வைக்கும் பட்டாம்பூச்சி
காய்களையும் கனிகளையும் காய்க்க உதவும் பட்டாம்பூச்சி
கவலையை பறக்கடிக்கும் பட்டாம்பூச்சி
காவியம் பாடவைக்கும் பட்டாம்பூச்சி
அபூர்வமான படைப்பில் ஒன்று பட்டாம்பூச்சி!

அன்புக்கு ஒரு கவிதை

நிஜமாய் தோன்றி, நினைவாய் மாறி
கனவாகி, கற்பனையாகி
கவிதையாய்
எனக்குள் நிறைந்து இருக்கின்றாய்!!!