Sunday, December 07, 2014

மழலை மொழிகள்


சில சமயம் குழந்தைகளின் பதில் எதிர் பார்க்காததும் சாமர்த்தியமானதும் ஆக இருக்கும்.
எல்லா குழந்தைகளுமே  அறிவு ஜீவி ஆக இருப்பது உண்மை. ஆனால் நாம் தான் உணருவது இல்லை.
முக்கியமாக நம்முடைய உணர்வின் வெளிப்பாட்டை தெரிந்து தான் அதனை மேற்கொண்டு தொடரலாமா இல்லையா என்று பரீட்சிக்கிறார்கள்.  நாம்தான் அவர்களின் அளவு கோல். அவர்களின் வளர்ச்சி நம் கையில் தான் உள்ளது. எத்தனையோ பெற்றோர்கள் அதனை புரிந்து குழந்தைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த குழந்தைகள் நன்றாக இருப்பதையும் கண் கூடாக பார்த்து உள்ளேன்.

என் நண்பரின் குழந்தை என்னிடம் மிக அன்புடன் பழகும். ஏனென்றால் நான் நிறைய கதை சொல்லுவேன். ஒரு சமயம் அவர் வீட்டிற்கு சென்ற சமயம், காக்காவும் வடையும்  கதையை கூறினேன். கதை முடிந்ததும் என்ன தெரிந்து கொண்டாய்  என்று  கேட்டது தான் தாமதம். பொய் புகழ்ச்சி , திருடுதல்  பற்றி ஏதாவது சொல்லும் என்று பார்த்தால் அது சொன்ன பதில் என்னை மௌனமாக்கியது.
குழந்தை சொன்ன பதில் " சாப்பிடும் போது பேசக் கூடாது"  என்பது தான்.
உடனே அதன் அம்மாவை பார்த்தேன். அவர்களும் என்னைப் போலவே திகைத்து நின்றார்கள்.

அடுத்த சமயம் அதே குழந்தையிடம்  "கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது என்று கேட்டேன்". அதற்க்கு அதன் பதில் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் யூகியுங்கள்.

வேதாந்தி

3 comments:

  1. நீங்கள் சொல்வது போல குழந்தைகள் புத்திசாலிகள்தான். நாம்தான் புரிந்து கொள்வதில்லை.

    குழந்தை என்ன சொல்லியது - நீ ஏன் கடல் நீரை குடிக்கிறாய் என்று கேட்டதா? :-)

    ReplyDelete
  2. நாகு,

    நீங்கள் சாமர்த்தியசாலி. அந்த குழந்தை அந்த மாதிரி விதண்டம் பேசவில்லை.
    அழுத பிள்ளை பால் குடிப்பது போல இருந்தது அதன் பதில்.

    உங்களின் பதிவு ஒரு பழைய படத்தின் நகைச்சுவையை நினைவூட்டியது.
    இரு சிறுவர்கள் விரல் சூப்பிக் கொண்டு இருப்பார்கள். தந்தையின் மேலதிகாரி விரலை எடுத்தவுடன்
    சிறுவர்கள் இருவரும் ஒன்று சேர "எங்கப்பன் மவனே சிங்கம்டா" குரல் கொடுப்பார்கள்.
    மேலதிகாரி யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றி பார்த்து விட்டு, மீண்டும் விரலை எடுத்து வாயில் வைத்து விடுவார்.

    வேதாந்தி.

    ReplyDelete
  3. குழந்தை என்னதான் சொல்லியது?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!