நண்பர் ஒருவரிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள ஒரு சிறுவன் சேர்ந்தான். ஒரு வருடம் கழித்து அந்தச் சிறுவனின் தந்தையும் சங்கீதம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு நண்பரிடம் கேட்டிருக்கிறார். அந்த உரையாடலை கீழே தருகிறேன்.
நிஜமாவே உங்களுக்கு கத்துக்க ஆசையா?
ஆமாம்.
சரி வாங்க. பேசிட்டு, நீங்க எப்படி பாடுறீங்கன்னு பாத்துட்டு டிசைட் பண்ணலாம்.
தந்தை வந்து பேசுகிறார். பாடிக் காட்டுகிறார். நண்பரும் தந்தைக்கு கற்றுத் தருவதாக சொல்லி விட்டபின் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்க இதுக்கு முன்னாடி பாட்டு கத்துக்கிட்டிங்களா?
இல்லைங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன் தான். இன்ட்ரெஸ்ட் இருக்கு, அவ்வளவுதான். கொஞ்சம் முறையா கத்துக்கலாமுன்னு ஆசை அதனால்தான்...
சந்தோஷம். எப்படி உங்களுக்கு பாட்டு கத்துக்கனும்னு ஆசை வந்தது? உங்க குடும்பத்துல யாராவது பாடுவாங்களா?
எங்க வீட்டுல யாரும் பாட மாட்டாங்க. ஆன எங்க தாத்தா ஒரு பாடகர். அவர் நிறைய சங்கீதம் பாடியிருக்கார். கச்சேரி எல்லாம் பண்ணியிருக்கிறார். சினிமாவுல கூட பாடியிருக்கார்.
அப்படின்னா நான் கேள்விப் பட்டிருக்கலாம். உங்க தாத்தா பேரு?
டி. எம். சௌந்தர ராஜன்....
நண்பர் மயங்கி விழுகிறார்.
ReplyDeleteயப்பா..
சாதாரண அவையடகமல்ல. இது பயங்கர அடக்கம்.
ஆமா, அவரு ரிச்மாண்ட்லயா இருக்காரு?
ஆமாம். அனானி அண்ணே.
ReplyDeleteநான் மட்டும் டி.எம்.எஸ்ஸோட ஒன்னு விட்ட சித்தப்பா பேரனோட பக்கத்து வீட்டுக்காரனா மட்டும் இருந்திருந்தாகூட ஊர்ல இருக்கற எல்லா பாட்டு வாத்தியாரையும் கூப்பிட்டு பாடச் சொல்லிப் பாத்து அப்பறம் செலக்ட் பண்ணியிருப்பேன். இந்த புள்ள தலகீழா பண்ணுயிருக்கு...
நான் அவராக இருந்து, என்னை முன் தேர்வுக்கு கூப்பிட்டிருந்தால், நான் யாரு தெரியுமில்ல, வசனத்தை அவிழ்த்து விட்டிருப்பேன். சும்மா சொல்ல கூடாது. மேன் மக்கள் மேன் மக்களே. சும்மாவா சொல்லி இருக்காங்க. நிரை குடம் தெளும்பாது என்று?
ReplyDelete