Saturday, October 27, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012 - தொடர்ச்சி

வரலாறு காணாத அளவுல மூமூமூமூமூனு பேர் பின்னூட்டம் போட்டு இருக்காங்க.  ஆனா எல்லாமே நல்லா இருக்கு சரி இன்னிக்கு வீட்டுல ஒன்னும் ஆணி புடுங்கர வேலை இல்லை, கொலுவை பத்திரமா எடுத்து வெக்கனும், சாண்டி புயல் வரதுக்கு முன்னாடி, பால் தண்ணி வாங்கி வெக்கனும் அவ்வளவுதான் சரி பதிலை ஒரு பதிவா போட்டுட்டா போச்சு, என்ன சொல்றீங்க.

மொதல்ல நாகு:

நீங்கள் போட்டிருக்கும் படம் ஜூப்பரோ ஜூப்பர். யானை தேய்ந்து கழுதை சைஸுக்கு வந்து விட்டது :-)

நான் இன்னும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் யாருக்கு ஓட்டுப் போட்டு பட்டை நாமம் சாத்திக் கொள்ளலாம் என்று. நீங்கள் சொல்வது போல ரிபப்ளிகனாக இருந்தால், தாலிபான்கள் ரேஞ்சுக்குப் போகும் முர்டாக்குகளை - மன்னிக்கவும் - மூடர்களைக் கண்டுகொள்ளாமல் ஓட்டு போட்டு விடலாம். டெமாக்ரட்டாக இருந்தால் பரப்பி நிரப்பும் சோஷலிஸ கொள்கைகளைக் கண்டு கொள்ளாமல் குத்தி விடலாம். நடுவில் மாட்டிக் கொண்டால்தான் குழப்பமே...

அந்தப் பக்கம் போனால் Atlas Shrugged. இந்தப் பக்கம் போனால் Grapes of Wrath. இவன் தேவையில்லாமல் ஈராக் சண்டை போட்டு செலவழித்தால், அவன் கழகக் கண்மணிகளே வெட்கப்படும் ரேஞ்சுக்கு பேசித் தள்ளுகிறான். கூட திவாலாகும் ஓட்டு வங்கி நிறுவனங்களுக்கு செலவு...

ஓட்டு போட வேண்டும். ஆனால் யாருக்குப் போடுவது? யாரு லெஸ்ஸர் ஈவில்? சுஜாதா சொன்னதுபோல யாரையும் பிடிக்காவிட்டால் யாருக்கு வயது கம்மியோ அவருக்கு போடலாமா? இல்லை யாருக்கு பேங்க் பேலன்ஸ் கம்மியோ, ஜாஸ்தியோ அவருக்கு போடலாம். 

யோசித்து விட்டு ஒரு முடிவுக்கும் வராவிட்டால் வயதுதான்... :-)

ஆமாம் - யானை கீழேவிழுந்தா தின்னாதா? புதுக்கதையா இருக்கே? பணக்கார கொழுத்த யானையோ?நாகு உங்க ஓட்டு  சின்ன வயசுகாரருக்கா?  சரி சரி புரிஞ்சிடுச்சு.  அதே சுஜாதா சொன்ன இன்னொரு அருமையான வழி இதோ:

சுஜாதா:  "எனக்கும் சகுனத்துல நிறைய நம்பிக்கை உண்டு, ஆனா, நிறைய உப கண்டிஷன்ஸ் போட்டுப்பேன்.  வீட்டை விட்டு கிளம்பினா சிங்கிள் குடுமி மாமா வரக்கூடாதுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கா, ஶ்ரீரங்கத்துல அதெல்லாம் தினமும் நடக்கும் அதனால டக்குன்னு ஒரு கிளைக் கண்டிஷன் போட்டுப்பேன்.  அவருக்கு  கைல 6 விரலிருக்கணும்னு, அப்படி ஒருத்தர் ஒருநாள் எதிரே வந்துட்டார், உடனே கண்டிஷன் 2, அவருக்கு மாறு கண் இருக்கனும்னு.  இப்படி கண்டிஷன்ஸ் போட்டு போட்டு என்னோட சகுனத்தடைகளை எல்லாம் அடிச்சு உடைச்சுடுவேன்"

அதுமாதிரி நீங்க நிறைய வெச்சுக்கலாம். ஆனா, நல்ல ஆட்சி தர வேண்டாம்னு தீர்மானம் பண்ணிக்கனும் அவ்வளவுதான்.

யானை காட்டில இருந்தா இப்படித்தான் இருக்கும்னு நானும் நிறைய படிச்சிருக்கேன்.  கீழ விழுந்தா எடுத்து சாப்பிடரது, கை நீட்டி காசு வாங்கிட்டு ஆசீர்வாதம் பண்றது, குனிஞ்சு பாகனை மேல ஏத்திக்கரத்து, ஒத்தைக் கால்ல நின்னு சர்க்கஸ் வேலை பண்றது எல்லாம் ஊர்ல நாட்ல இருக்கர யானைங்கதான்.

இதுக்கு ஒரு சின்ன கதை:  ஒரு சர்க்கஸ்ல யானை எல்லா வேலையையும் செஞ்சுதான், அப்போ முன் வரிசைல இருந்த 4 பசங்க ஒரு இந்தியன், ஒரு ரஷ்யன், ஒரு சீனாக்காரன், ஒரு அமெரிக்கன், அவங்களை கேட்டாங்களாம், இது எப்படி சாத்தியம்னு.  அதுக்கு இந்தியன் சொன்னானாம் யானை விநாயகர் மாதிரி அதனால அது நாம எதைக் கேட்டாலும் செய்யும்னு, சீனாக்காரன் சொன்னானாம், அதை சின்ன வயசுலயே அடிச்சு அடிச்சு சொல்லிக் கொடுத்துட்டாங்க அதனால அது பயத்துல இதை செய்யுதுன்னானாம்.  ரஷ்யன் சொன்னானாம்,  அது சர்க்கஸ் யானையோட குட்டி அதனால அதனோட ரத்தத்துல சர்க்கஸ் வேலை பண்ற ஜீன் இருக்குன்னானாம்.  அமெரிக்கன் பையன் சொன்னானாம், அந்த யானைக்கு தன்னோட பலம் தெரியலை அது தெரிஞ்சுதுன்னா, இப்படி கேவலமான வேலையெல்லாம் செய்யாதுன்னானாம்.

யானை டைனோசர் காலத்துல இருந்து மிஞ்சியிருக்கர ஒரு சில மிருகங்கள்ல ஒன்னு.  எவ்வளவு பெரிசா இருந்தாலும் தாவர பட்சிணி, அருமையா நீச்சல் பண்ணக்கூடிய மிருகம்.  இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

அடுத்து சுப்பு தாத்தா:
இந்த அமெரிக்கன் ப்ர்சிடென்ட் எலக்சனே ஒரு சிக்கல். 
எல்க்டொரல் வோட் அப்படின்னு ஒரு பக்கம் சொல்றாங்க.
அதற்கப்பறம் மக்களுடைய நேரடியாக வோட் எண் ணிக்கையும் சொல்றாங்க.
அதற்கப்புரம் அந்தந்த ஸ்டேட்டுக்கு எத்தனை எலக்டொரல் வோட்டோ
அத்தனையும் யார் வின் பண்ராகளோ அவுகளுக்கு போயிடுமாம். 

இது பற்றி எத்தனையோ வெப் சைட்டுக்கு போனாலும் சொல்ராங்க.
இந்த சிஸ்டத்திலேயே கோளாரு இருக்கு. ஆனா சரி பண்ண அலவ் பண்ண மாட்டாங்க.
ஏன்னா இந்த ஸிஸ்டம் தான் இப்போதைக்கு ரைட் தோணுது அப்படின்னு.

நீங்க இந்த பிரஸிடென்ட் சிஸ்டம் எலக்ஷன் பத்தி கொஞ்சம் விலா வாரியா 
சொல்லுங்களேன். நம்ம இந்தியா கொஞ்சம் பெட்டரா இருக்கோன்னு தோனுது.

சுப்பு தாத்தா. 
American election allows an option 
for the voter to says that I do not want to vote for either, as Indian Election rules allow?அமெரிக்கன் எலெக்‌ஷன் பத்தி விலாவரியா எழுதினா என் விலா எலும்பை எடுத்துடுவாங்க.  ஆனா நான் இங்க இருந்த 14 வருஷங்கள்ல பார்த்த வரைக்கும், இது இந்தியாவோட தேர்தல் முறையை விட எவ்வளவோ மேல்.  அதுக்கு எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.  மொதல்ல யார் அதிபரா வருவார்ங்கரது தேர்தலுக்கு முன்னாடியே எல்லோருக்கும் தெளிவா தெரியும்.  நம்மூர் மாதிரி, சோனியாவா, மன்மோகனா, மோடியா, அத்வானியா இல்லை வேற யாராவதான்னு தெளிவில்லாம இருக்காது.  யாரோட பார்வை எப்படின்னு முழுசா தெரியலைன்னாலும் கொஞ்சமாவது தெரிய வரும்.  4 வருஷம் ஆண்டதுக்கு பிறகும், எப்படி நல்லா உளர முடியும்னு தெரிய வரும், ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே எப்படி வெறும் வாய்ல முழம் போட முடியும்னு தெரியவரும்.  

முக்கியமா, அதிபர் பெரிய ஆளா இருந்தாலும் திரை மறைவுல ரொம்ப பவர்ஃபுல் துணை அதிபர்ன்னு பலர் சொல்லி கேட்டிருக்கேன்.  சும்மா மீன் பிடிக்க போயிட்டு, கூட வந்த நண்பரைகூட மூஞ்சில சுட்டுட்டு ஒரு சின்ன தண்டனைகூட இல்லாம தைரியமா சுத்தலாம்.  அவ்வளவு பவர்.  அதிபரா இருந்தா பெரிய மேசை போட்டுகிட்டு தன் பொண்ணு வயசு இருக்கர பொண்ணுங்க கூட ஜாலியா இருக்கலாம்.  கேட்டா தைரியமா டி.வி முன்னாடி "ஆமா, அப்படித்தான், உங்களால முடிஞ்சத பாத்துக்கங்க"ன்னு சொல்லலாம்.  

இந்தியாவுல இருக்கர ரூல் 49-ஓ (49-O) அமெரிக்காவுல இருக்கரமாதிரி எனக்குத்  தெரியலை.  அது எவ்வளவு தூரம் சரின்னும் தெரியலை.  கண்டிப்பா ஒரு விவாதத்துக்குரிய விஷயம்தான்.  

மறுபடியும் நாகு (அல்லது அவரோட நண்பனோட அப்பா எழுதிய பின்னூட்டம்)


என் நண்பனின் தந்தையிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது:

கதையிலே கழுதை வராமே யானை மட்டும் வந்திருப்பதாலும் தம் நிலையை நடுவில் வைத்துக் கொண்டாற்போல எழுதியிருப்பதாலும் நாசகார ரிபப்லிக்கானுக்கு வாக்குப் போடுவார் போலிருக்கிறது.
என் நிலை இதுதான்.
ஒபாமாவை நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இரான், லிபியா, சிரியா முதலிய இடங்களில் போருக்கு புறப்படுவார்கள். அமெரிக்காவின் ஒரு சதவீத மக்களுக்குத்தான் ஆதாயம்.
உலகின் மற்ற எல்லாருக்கும் நஷ்டம்தான். Neutrality or undecidedness is being perverse.
மொதல்ல அந்த அப்பாவுக்கு அமெரிகாவுல ஓட்டு இருக்கான்னு தெரியலை,  இப்ப சொல்லிடரேன்.  நான் இந்த விஷயத்துல கண்டிப்பா நடுநிலைமைதான்.  ஆனா அதே சமயம், கண்டிப்பா இப்போதைய அதிபருக்கு ஓட்டு போடரதா இல்லை.  ஒபாமா நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள்ன்னு ஒரு நோபல் பரிசு ரேஞ்சுக்கு எதையோ இந்த அப்பா கண்டு பிடிச்சிருக்கார் அது என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்.  தமிழ் ரொம்ப அருமையான மொழி, அவர் 'ஏதும்' ன்னு சொன்னதுனால, அதை கொஞ்சம் கூர்மையா பார்த்தா, அவர் எதுவும் செய்யலைன்னு ஆகுது.  தமிழ்ல ஒரு முறை உண்டு, அதாவது ஒரு விஷயத்தை சொன்னா இன்னொரு விஷயம் புரியும்ன்னு அதுக்கு அருத்தா பத்தின்னு சொல்லுவாங்க.  நான் இப்போ காபி குடிக்கரது இல்லைன்னு சொன்னா இதுக்கு முன்னாடி வரைக்கும் காபி குடிச்சுண்டு இருந்தேன்னு அர்த்தம்.  'ஏதும்' செய்ய விடலைன்னா அவர் எதுவும் செய்யலைன்னு அர்த்தம்.  4 வருஷமா கைல வீடோ பவர் வெச்சுண்டு எதுவ்ம் செய்யாம இவர் இருக்கரதுக்கு திண்ணையை காலி பண்ணிட்டு போகட்டும்.

இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிரா வழக்கமா சொல்ற வீராவேச பேச்சைக்கூட இப்போ நிறுத்திட்டாங்க அதனால தீவிரவாத ப்ரச்சனை இந்தியாவுல நின்னு போச்சா?  2001-ல அமெரிக்காவுல நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியா இவங்க எடுத்த நடவடிக்கைக்கை அப்புறம் அப்படி ஒரு தாக்குதல் நடத்த மத்தவங்க யோசிக்கராங்கன்னா அதை செய்யாம, க்ளிண்டன் அதிபரா இருந்த போது சவுதி அரேபியாவுல அமெரிக்க கான்சுலேட்ல நடந்த தாக்குதல்ல ஒரு மண்ணும் செய்யாம, மான் கொம்பு கராத்தே போட்டுட்டு வந்ததுக்கு (அப்படின்னா என்னன்னு நாகு கிட்ட தனியா கேளுங்க) பதில்தான் 2001ல அமெரிக்காவுல நடந்த தாக்குதல்.  மஹாபாரதத்துல பீஷ்ம நீதின்னு ஒரு கட்டம் வரும் அதுல அவர் தர்மருக்கு சொல்ற உபதேசம், ஒரு ராஜாவா இருக்கரது ரொம்ப கஷ்டம், அவன் அவனோட படையை நல்லா தயார் நிலைல வெச்சுக்கணும், அதே சமயம் 'யாரோடும் பகை கொள்ளலன், எனில் போர் ஒடுங்கும் புகழொடுங்காது'ங்கரார்.  அதுபோல நாம பவர்ஃபுல்ன்னு மந்த நாட்டுக்குத் தெரியனும் அப்பதான் அவங்க நம்ம கிட்ட வம்புக்கு வர மாட்டாங்க.  

கடைசியா, அமெரிக்காவுல 1% மக்களுக்கு மட்டும் நல்லது உலகத்துல எல்லோருக்கும் நஷ்டம்தான்னு எதை சொல்றாருன்னு தெரியலை.  அது எப்படின்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சத (இல்லை எனக்கு மட்டும் தெரியாததை) அவர் சொன்னா நல்லா இருக்கும்.

முரளி இராமச்சந்திரன்.

1 comment:

 1. தாங்க் யூ ஃபார் நாட் ஆன்ஸரிங் மை மைன் ஃக்வெஸ்சின்.
  எனிவே இட் வாஸ் இன்டெரஸ்டிங்.

  நீங்க ஸ்ரீரங்கத்துக்காரர் அப்படின்னு தெரியறது.
  அவர்கள் தான் பதில் சொல்வா, ஆனா பதில்லே , நமக்கு, நாம் என்ன கேட்டோம் அபட்டிங்கற‌தே
  மறந்து போயிடும். அவ்வளவு இன்டெரஸ்டிங்கா பதில் சொல்வதற்கு ட்ரைன் ஆகியிருக்கா.
  நீங்க சொல்ற ரஷ்யன் யானை கேஸ். ஜீன் ஃபாக்டர்.

  விலா வாரியா சொன்னா உங்க விலா எலும்பை எண்ணிடுவா ?
  அப்படின்னு சொல்வதை வச்சுன்டு ஒரு அளவுக்கு யூகிக்க முடிகிறது.

  இந்தியாவிலேயும் பப்ளிக் செக்டார் லே ஒரு சென்ட்ரல் கவர்ன்மென்ட் ரூல் இருக்கு. ஆஃபீசருக்கு மட்டும் தான் அப்ளிகபிள். (மத்தவாளுக்கு ஸி.பி.எம் சொல்றது தான் யஜுர்வேதம் சொல்றதும். ) நோ இன்வால்விங்
  இன் பாலிடிக்ஸ்.

  அமெரிக்கா ஒரு மெசூர்ட் டெமோக்ராடிக் நேஷன் ஆச்சே ?
  ஃப்ரீடம் ஃபுல்லா இருக்காதோ என்னவோ ?
  பெரிய டேபில் போட்டுன்டாலும் அதுக்கும் ஒரு லிமிட் இருக்கோல்லியோ !

  /

  // 4 வருஷம் ஆண்டதுக்கு பிறகும், எப்படி நல்லா உளர முடியும்னு தெரிய வரும்//

  நன்னா புரியறது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!