சக ப்ளாகிகள் சதங்கா மற்றும் பரதேசி இருவரும் எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி பல வாரங்கள் (மாதங்கள்னா சொல்லறீங்க? சே சே இருக்காது) ஆன பிறகு நிதானமா இப்படி வந்து பட்டாம்பூச்சிகள் பறக்க விடறத்துக்கு நீங்க என்னை மன்னிக்கணும். இந்த முறை லேட்டா வந்ததுக்கு சோம்பேறித்தனம் காரணம் இல்லைங்க. பட்டாம்பூச்சி பறக்காத இடமே ப்ளாக் உலகில் இல்லைன்னு நினைக்கும் அளவுக்கு எல்லா இடத்துலயும் பட்டாம்பூச்சி பறக்குது. கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு தேடி பார்த்ததில் (கண்ணு லேசா எரியரா மாதிரி இருக்கு) எனக்கு பிடித்த மூவர்.
முதலாவதாக இந்த விருதை நான் அளிக்க விரும்புவது
ஸ்ரீராம் அய்யர் அவர்களுக்கு. அவ்வப்போது எழுதினாலும் மிக அருமையாக எழுதுபவர் இவர். கர்நாடக இசை கீர்த்தனைகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அர்த்தத்தை விளக்குவதில் வல்லவர். இன்னும் நிறைய இது போல் எழுத இவருக்கு இந்த விருது.
அடுத்ததாக இந்த விருதை வாங்க மேடைக்கு வருமாறு அம்பி என்பவரை கூப்பிடுகிறேன். சமீப காலமாக தான் இவர் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்திருக்கேன். இவருடைய இயல்பான நடை எனக்கு மிகவும் பிடித்தது. கொஞ்சம் யதார்த்தம், கொஞ்சம் கிண்டல், நிறைய சிரிப்பு ன்னு கலக்கறார் இவர்.
மூன்றாவதாக இந்த விருதை நான் அளிப்பது நம்மூர் அரவிந்தனுடைய அப்பாகோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு. ரிச்மன்ட் தமிழ் சங்கத்தினுடைய புதிய ப்ளாகர் இவர். முதல் பதிவிலேய கலக்கிய இவரை மேலும் பல பல பதிவுகள் தருமாறு வேண்டி இந்த விருதை அளிக்கிறேன்.
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்
வாழ்த்துகள்!
ReplyDelete//ரிச்மன்ட் தமிழ் சங்கத்தினுடைய புதிய ப்ளாகர்//
அட... சங்கத்துலயே பதிவர் குழுவா? நல்லா இருக்கே.... நானும் பேசாம உங்க ஊர்க்கு வந்திடலாம் போல இருக்கு...
வாழ்த்துகள் அனைவருக்கும்!
ReplyDelete//வழங்கி பல வாரங்கள் (மாதங்கள்னா சொல்லறீங்க? சே சே இருக்காது)//
ReplyDeleteஹா ஹா ...
விருதுகள் பெற்றவர்களுக்கும், தந்தவருக்கும் வாழ்த்துக்கள்.
valthukal meena
ReplyDeleteMeena, thanks for the award :-) - Sorry, I just saw the blog and collected the prize :-) - Thanks!
ReplyDeleteI'll need to add some blog entries to keep my prize, I guess! I'll do that ...
உங்களுக்கு வாழ்த்துக்கள்!! தொடருங்கள்!!
ReplyDelete