Wednesday, September 10, 2008
வர்ஜினியா செஸ் சாம்பியன் ஆதித்யா
வர்ஜினியா மாநிலத்தின் 2008ம் ஆண்டின் செஸ் சாம்பியன் ஒரு தமிழ் பையன்! லலிதா, பாலசுப்பிரமணியன் தம்பதியினரின் மகன் ஆதித்யா செப்டம்பர் 1ம் தேதி முடிவடைந்த செஸ் போட்டியில் வெற்றி வாகை சூடியிருக்கிறான். கூடவே சிறந்த இளைய செஸ் வீரருக்கான ரிச்சர்ட் டெலான் நினைவுக் கோப்பையையும் வென்றிருக்கிறான்.
இன்ஸ்ப்ரூக்கில் இருக்கும் ஹில்டன் கார்டன் இன்'னில் நடந்த இந்தப் போட்டியின் முழு விவரங்களுக்கு இங்கே செல்லவும்.
இசைக் குடும்பத்தை சேர்ந்த ஆதித்யா கர்னாடக இசையிலும் கெட்டிக்காரன். ஆதித்யா வீணை வாசிப்பதை ரிச்மண்ட் இசை நிகழ்ச்சிகளில் நீங்கள் கேட்டிருக்கலாம்.
ஆதித்யாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உறுப்பினர்களின் பொதுநல திட்டங்கள்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோர்களின் கவனத்திற்கு. membersproject.com ல், உறுப்பினர்களின் பொதுசேவைத் திட்டங்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதில் சிறந்த 25 திட்டங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நீங்கள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உபயோகிப்பவராய் இருந்தால், இந்த தளத்தில் போய் உங்களுக்கு பிடித்த திட்டத்திற்கு ஓட்டளிக்கலாம். முதலில் வரும் திட்டத்திற்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஒன்றரை மில்லியன் டாலர்கள் அளிக்கவிருக்கிறது. நீங்கள் பலமுறை ஓட்டளிக்கலாம். ஆனால் கடைசி ஓட்டுதான் செல்லும். நான் ASHA விற்கும் Kids For Sightற்கும் இடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு பிடித்த திட்டத்தை பின்னூட்டமிட்டு என்னை இன்னும் கொஞ்சம் குழப்பவும்.
முழு பட்டியல்:
முழு பட்டியல்:
Wednesday, September 03, 2008
கூகுள் குரோம்!
கூகுள் யாரும் எதிர்பார்க்காதபோது ஒரு உலாவியை வெளியிட்டு உள்ளது. கூகுள் குரோம்! ஏன் இன்னொரு உலாவி என்று சிலர் கேட்கலாம். அதற்கான காரணங்களை இங்கே விளக்குகிறார்கள் அவர்களே.
நான் அதை நிறுவிப் பார்த்ததில் தெரிந்தவை:
1. வலைப் பக்கங்கள் வேகமாக லோட் ஆகின்றன
2. முகவரிகள் அடிக்கும்போது - கூகுள் சஜஸ்ட் பாணியில் சாய்ஸ்கள் வருகின்றன.
3. எகலப்பை மூலமாக தமிழில் தட்டச்ச முடியவில்லை. இந்த பதிவை வெட்டி ஒட்டுகிறேன் :-( ஏதாவது வழி இருந்தால் சொல்லவும்.
4. ஒவ்வொரு tab-ம் தனித்தனி processகள். ஒரு tab தொங்கினால் உலாவியே தொங்காது.
குரோமின் மற்ற சிறப்பம்சங்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.
கூகுள் குரோமை சேர்த்து என் கணினியில் நான்கு உலாவிகள். ஐஈ, நெருப்பு நரி(எனக்குப் பிடித்தது), ஆபரா மற்றவை. என் சக ஊழியன் குரோம் தெரியுமா என்று கேட்டால் போகோ தான் உலகின் தலைசிறந்த உலாவி என்கிறான்! போச்சுடா. இன்னொன்னா?
Tuesday, September 02, 2008
எம் ஐ டி!
அமெரிக்காவின் பிட்ஸ்,பிலானி என (இனிமேல்) அழைக்கப்படும் எம்.ஐ.டி போயிருந்தேன் மகனின் தயவால்! மகன் ஒரு போட்டியில் கலந்து கொண்டான். எம்.ஐ.டி, எம்.ஐ.டி என்று புல்லரித்துப் போய் இருந்தேன். என் மகன் நீயே போய் சுற்றிப்பார் என்று கழட்டிக் கொண்டான். நான் இப்போதிருந்தே அவனைப் படுத்தப்போகிறேன் என்று - "சின்னவன்தான் இந்த இடத்திற்கு எல்லாம் சரி இல்லையாப்பா" என்று எம்.ஐ.டி கனவிலிருந்து முன்னெச்சரிக்கையாக ஜகா வேறு வாங்கி விட்டான். காவ்யா விஸ்வநாதன் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.
Monday, September 01, 2008
சென்னை
சென்னை விஜயத்தின்போது எடுத்த படங்களில் இரண்டு...
கூகுள் மட்டும்தான் அவர்களுடைய விஷயங்களை பீடா டெஸ்ட் என்ற பெயரில் வெள்ளோட்டம் விடமுடியுமா என்ன? நாங்கள் செய்ய முடியாதா என்கிறார் இவர்.
இவர் கடன் கொடுக்க மாட்டாராம். ஆனால் நம்மை எப்படியாவது கடனாளியாக்க மட்டும் தயார்!
கூகுள் மட்டும்தான் அவர்களுடைய விஷயங்களை பீடா டெஸ்ட் என்ற பெயரில் வெள்ளோட்டம் விடமுடியுமா என்ன? நாங்கள் செய்ய முடியாதா என்கிறார் இவர்.
இவர் கடன் கொடுக்க மாட்டாராம். ஆனால் நம்மை எப்படியாவது கடனாளியாக்க மட்டும் தயார்!
Subscribe to:
Posts (Atom)