Thursday, October 18, 2007

ராம்ஜியின் இசை மழலை

இன்று மின்னஞ்சலில் ஒரு திருமண அழைப்பு வந்திருந்தது. அதில் ஆங்கிலத்தில் Issai Mazhalaiயின் கச்சேரி என்றிருந்தது. முதலில் மழை என்று எழுதுவதில் எழுத்துப்பிழை என்று நினைத்தேன். சரி கூகுளாண்டவரிடம் முதலில் கேட்கலாம் என்று பார்த்தால் ஒரே ஆச்சரியம். சிறிய பெரிய குழந்தைகளை வைத்து அபஸ்வரம் ராம்ஜி நடத்தும் இசைக்குழு இது.

யூட்யூபில் தேடினாலும் நிறைய கிடைக்கிறது. சில பாடல்களைப் பார்த்தேன். எனக்கு பிடித்த பிபரே ராமரஸம் பாடலை இந்த குட்டிப்பையன் அனந்தராமன்(நம்ம ஊர்ல இப்படி ஒரு பேரா?) கலக்கிப் போட்டிருக்கிறான் பாருங்கள். என்ன குரல், என்ன திறமை.... அற்புதம். அதுவும் எப்படி அனுபவித்துப் பாடுகிறான்.... பெரிய ஆளாக வருவான் பாருங்கள்.




இசை மழலையைப் பற்றி என் நண்பனிடம் கேட்டேன். இவ்வளவு நாள் எந்த குகையில் இருந்தாயடா என்கிறான். மூன்று வருஷங்களாக ஜெயா டீவியில் வருகிறதாம் இ.ம. பார்க்கலாம் என்னைப் போல் குகைவாசிகள் எத்தனை பேர் என்று....


குகையில் இருந்து வெளியே வந்தால் எவ்வளவோ விஷயங்கள் தெரிகிறது. இங்கே பாருங்கள். மருதமலை மாமணியேன்னு ஒரு சின்ன பையன். சும்மா அதிருதுல்ல...

5 comments:

  1. I think you should watch the latest episodes of Super singer junior. It's really amazing!!

    ReplyDelete
  2. ராம்ஜியோட 'மழலைகள்' அட்டகாசமாப் பாடுறாங்க.

    யதேச்சைய்யா எனக்கும் ஒரு ச்சான்ஸ் கிடைச்சது, கேட்டு அனுபவிக்க.
    இங்கெ
    பாருங்க.

    ReplyDelete
  3. நன்றி நன்றி இப்பொதாவது எங்களொட திறமை எல்லாம் தெரியவந்துச்செ....

    ReplyDelete
  4. வாங்க துளசி - நீங்க ராம்ஜியோட உக்காந்து பேசனது பத்தி முதல்லயே படிச்சிருக்கேன். ஆனா மறந்துடுச்சி. வீடியோவைப் பாக்கலை அப்போது.

    நீர்வைமகளே - எங்க பாக்கலாம் அந்த எபிஸோட் எல்லாம்?

    குழந்தே பவன் - நீங்க எல்லாம் கில்லாடிங்கன்னு தெரியும். இவ்வளவு ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளாக இருப்பீங்கன்னு தெரியாது. ஆமாம் நீ என்ன பாடுவியா, வாசிப்பியா?

    ReplyDelete
  5. நான் நீச்சல் அடிப்பென் visit http://pavanspictures.blogspot.com/2007/11/blog-post.html, நான் இப்ப தான் பெச கத்துட்டுஇருக்கென்....

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!