Monday, October 01, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 3 - இந்திரா நூயி

இந்த எந்திர உலகில், மனிதர்களைக் காண்பதே அரிதாகிக் கொண்டிருக்கிறது. நெருங்கிய பால்ய நண்பர்களே, தொலைபேசியில் அழைத்தாலோ, மின்னஞ்சல் செய்தாலோ, அவர்களின் புலம்பல் தான் வெகுவாக இருக்கிறதே அன்றி நம்பிக்கை வலுப்பதில்லை ;-(

நமது வாழ்வில் ஒரு சிலரைப் பார்க்கையில், அவர்களைப் பற்றி படிக்கையில் ஒரு உற்சாகம் பிறக்கும், நம்பிக்கை வலுக்கும். அப்படி ஒருவரைப் பற்றி சமீபத்தில், நம் தமிழ் சங்கத் தலைவர் நாகு மூலம் அறியப் பெற்றேன்.



நூயி அவர்களின் பெருமையை நம்ம வீட்டு அம்மணியிடம் சொல்லி அசத்தலாம் என்று பார்த்தால், இவரைப் பற்றி எனக்கு முன்பே தெரியுமே என்று சொல்லி நம்மை அசத்தி விட்டார்.

இந்திரா நூயி ! என்னது பேரே வித்தியாசமா இருக்கே என்று எண்ணி கூகுளாரிடம் முறையிட்டால், கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார் இந்தப் பவர்புல் பெண்மணியைப் பற்றி. தொழில்துறை பத்திரிகைகள் அனைத்திலும் இவரைப் பற்றி செய்தி தான் ப்ரதானம். "இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்கத் தொழில்துறை அரசி" என்ற பட்டத்துடன் விவரிக்கிறது Times of India.

என்றாவது நெற்றியில் திருநீறு (ஒரு சிறு கீற்று) அணிந்து வேலைக்குச் செல்வது நம் போன்ற சிலரின் வழக்கம். அதையே சில நண்பர்கள் (வெள்ளைக்காரர்கள் என்று நினைக்காதீர்கள், பக்கா இந்தியர்கள் தான்) இதெல்லாம் ஏன் வைத்து வருகிறீர்கள் ! இவர்களுக்குப் பிடிக்காது தெரியுமா என்று ஜால்ரா அடிப்பார்கள்.

ஆனால் நூயி அவர்கள், 1980ல் Yale பல்கலைக் கழகத்தில் பயிற்சி முடிந்து Boston Consulting Group என்னும் நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்விற்கு, நம் பாரம்பரிய உடை சேலையில் சென்றிருக்கிறார். வேலையும் வாங்கியிருக்கிறார் !

நூயி அவர்களைப் பற்றிய மேலும் சில ப்ரமிப்புக்கள் :

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக பவர்ஃபுல் பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர். 2005ம் ஆண்டு கணக்கெடுப்பில் பதினோறாம் இடத்தில் இருந்தவர்.

2000ல் Chief financial officer பொறுப்பேற்ற பின்பு பெப்சி நிறுவனத்தின் ஆண்டு ரெவின்யூ 72% கூடியிருக்கிறது.

இந்த 2007 மே மாதம் பெப்சி நிறுவனத்தின் சேர்மன் & CEO ஆகியவர்.

நம் நாட்டின் மிகச் சிறந்த விருதுகளின் ஒன்றான பத்மபூசன் விருது பெற்றவர்.

மிக முக்கியமாக நம் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

தற்போது கணவருடனும், இரு மகள்களுடனும் கனெக்டிக்கட்-ல் வசித்து வருகிறார்.

நூயி அவர்களைப் பற்றிய வீடியோ காட்சி:

5 comments:

  1. இந்த பதிவில் Incredible India @60 celebrations (Yale Club - 26 September ) நடத்திய கருத்தரங்கில் அவர் உரையாற்றிய செய்தி வெளிவந்துள்ளது - மிக நல்ல கருத்துகள்!

    ReplyDelete
  2. // அப்படி ஒருவரைப் பற்றி சமீபத்தில், நம் தமிழ் சங்கத் தலைவர் நாகு மூலம் அறியப் பெற்றேன்.//

    இந்த பதிவுமா? நாகு இனிமே தான் என்ன சாப்பிட்டாருன்னு கூட வெளிய சொல்ல மாட்டாருன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. //இந்த பதிவுமா? நாகு இனிமே தான் என்ன சாப்பிட்டாருன்னு கூட வெளிய சொல்ல மாட்டாருன்னு நினைக்கிறேன்.//

    இது அவரோட பிரபலங்கள் தொடர்ல வரட்டும்னுதான் லீக் செய்தேன். அவுட்ஸோர்ஸ் மாதிரின்னு வச்சுக்கங்க!!

    ஆனா இனிமே இந்த மனுசர் கிட்ட வெயில் மழை தவிர வேறு பேச்சே எடுக்கப்போவது கிடையாது :-)

    ReplyDelete
  4. //இது அவரோட பிரபலங்கள் தொடர்ல வரட்டும்னுதான் லீக் செய்தேன். அவுட்ஸோர்ஸ் மாதிரின்னு வச்சுக்கங்க!!//

    நல்ல வேளை மானத்தைக் காப்பாற்றி விட்டீர்கள் நாகு.

    //இந்த பதிவுமா? நாகு இனிமே தான் என்ன சாப்பிட்டாருன்னு கூட வெளிய சொல்ல மாட்டாருன்னு நினைக்கிறேன்.//

    இதுவுமா ? என்றால் புரியவில்லை ஜெய். இந்தப் பதிவில் தானே நாகு சொன்னார் என்று சொல்லியிருக்கிறேன் !

    ReplyDelete
  5. மிக முக்கியமாக நம் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

    இந்திரா நூயி பற்றி அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!