Thursday, August 24, 2006

தொலைந்து போன கடிதங்கள்

கரிசனத்துடன் எழுதும் அப்பாவின் கடிதம்
புத்தி சொல்லும் அண்ணனின் வார்த்தைகள்
ஆவலுடன் காத்திருக்கும் மனைவி
எப்போது வருவாய் எனும் மகனின் வினா
குடித்துவிட்டு எழுதும் நண்பனின் உளறல்
அவருக்கே புரியாத மாமனாரின் காக்காய் கிறுக்கல்
ஜிலேபி என்றழைக்கப்படும் கல்லூரித் தோழனின் பிழியல்
கல்லூரித் தோழியின் கிட்டத்தட்ட காதல் வரிகள்
தாத்தாவின் பாசக்குழைவு
பொங்கலுக்கு வந்து குவியும் வாழ்த்துக்கள்
தொலைபேசித் தூரத்தாலும் இணையத்தாலும்
இவை அனைத்தையும் தொலைத்த நாம்.

1 comment:

  1. நாகு அவர்களே! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மேலும், போகும் போக்கைப்பார்த்தால் கடிதம் மட்டுமல்லாமல் பேனாக்களும் துலைந்து விடும். பேனாக்களை இனி பொருட்காட்சி நிலையத்தில் தான் பார்க்க நேரும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!