1.    ஆலும் வேலும் பல்லுக்குறுதி
        மாலும் ஸேலும் பெண்ணுக்குறுதி
2.    கண்டதும் காதல் கட்டியதும் மோதல்
3.    பார்த்தால் பசி தீரும் பசித்தால் பார் தேறுமா?
4.    கடலோரக்கவிதைகள் காற்றில் பறந்ததால் கடலீரக்கவிதைகள்
5.    அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா
        வேறென்ன பாக்கியா?
        போறாங்க ஹாப்பியா
6.    தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்ததனால் தானோ தமிழை சிலர் கடித்துக்  குதறுகிறார்கள்?
7.    தாவணிக்கனவுகள் வளர்ந்ததால் புடவைக்கனவுகள் ஆயின
8.    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
        நல்ல பாட்டுக்கு ஓ போடு
9.    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்
        நல்ல சூட்டுக்கு ஒரு டை போதும்
10.    சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கலாம்
        ஆனால் பெரிய மீனைப்போட்டு சின்ன மீனைப்பிடிக்க முடியாது
11.    குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப்போச்சு
        அரசியல்வாதி பேச்சு தேர்தல் முடிஞ்சாப்போச்சு
12.    கண்ணைக்கட்டி காட்டில் விடலாம்
        ஆனால் காட்டைக்கட்டி கண்ணில் விடமுடியாது
13.    அந்திமழை பொழிகிறது
        தொந்தி வரை நனைகிறது
14.    ஈ மெயில் எழுதி வாழ்வாரே வாழ்வார்
        மற்றெல்லாம் ஸ்டாம்பு ஒட்டியே சாவார்
15.    கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் - முன்பு
        கள் ஆனாலும் கணவன் •புல் ஆனாலும் புருஷன் - பின்பு
16.    “மௌஸ்” அமுக்கி வாழ்வாரே வாழ்வார்
        மற்றெல்லாம் “மவுசு” இல்லாமல் சாவார்
 
 
நல்ல துவக்கம். தமிழரிடம் தமிழில் பேச நல்லதோர் முயற்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.