Tuesday, October 07, 2014

பதிவு எண் ௬



விண்ணை மூடிய மேகம்.
மழை வந்தா வரும்.
வராமலும் போகும்.
வானிலை ஆய்வு மையம் தயார் பண்ண வானிலை அறிக்கை மாதிரி அருமையான weather. சுதர்ஷண  சக்கரம் வலது கையிலும், ஒலிக்கும் பாஞ்சசன்னியம் இடது கையிலும் மாதிரி ஒரு கையில hand bag’ கும் இன்னும் ஒரு கையில shopping bag'கும் தாங்கிய மக்கள். ஸ்ரீமன் நாராயணன் கூட கை வலிச்சா சங்கை கீழ வச்சுடுவார்... ஆனா ஷாப்பிங் bags'யும் பெண்ணின் கரங்களையும் பிறிக்கவே முடியாது'னு சொல்லற மாதிரி, sowcarpet streets' கால் தேய நடந்து கை ரேகை அழிய ஷாப்பிங் செய்யும் அந்த பெண்களின் கூட்டதுல தான் அந்த அம்மாவ பார்த்தேன். Silent Observer. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும் அலட்டலில்லாத மௌனம். எனக்கு curiosity.
நீங்க யாருனு போய் கேட்டேன்.
"நான் இந்த மேல் மாடில இருக்கற கடையோட tailor. இப்பொ எனக்கு break. அதான் கீழ வந்து நின்னுட்டு இருக்கேன். இங்க வந்து நின்னா எதாவது தோனும்...கதையா எழுதி paper' வச்சுக்குவேன்"னு சொன்னார்.
"இன்னைக்கு என்ன எழுதினீங்க?" இது நான்.
ஒரு வெள்ளை paper'இல் ஏதோ கிறுக்கிய எழுத்துக்கள். எடுத்து கொடுத்தார். சின்ன கதை மாதிரி இருந்தது.
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு gatekeeper' ஒரு ஆள் வேலை செஞ்ஜான். எப்போதும் ரொம்ப நிதானமா சந்தோஷமா வாழ்க்கையை நடத்தினான் அவன். ஒரு நாள் அந்த ராஜா அவன் திறந்து மூடும் gate'க்கு பக்கத்துல ஒரு மூட்டையை கொண்டு வைத்தார். அதை வந்து பாத்த அவன், பையை பிரிச்சான். அதுல 99 தங்க காசுகள் இருந்துது. விழுந்து அடிச்சு...உருண்டு புறண்டு...மிச்சம் இருக்கற ஒன்ன தேடினான்...எங்கயும் காணல. எப்படியாவது அந்த ஒரு தங்க காச சேர்க்கனம்'னு இரவு பகல் பாக்காம அலைஞ்சான். சரியா சாப்படல, தூங்கல. அவன் கிட்ட இருந்த 99 காச பத்தி அவன் கவலை படல. இல்லாத ஒன்னு. அத தேடி தேடி சுத்தறான். ஓடிகிட்டே இருக்கான்.
அவ்வளவு தான் எழுதி இருந்துது.
“எனக்கு time ஆச்சு நான் வரேன்னு சொல்லிட்டு அந்த அம்மா கிளம்பிட்டாங்க.
ரொம்ப புதிரா இருந்துது எனக்கு. ஏதோ metaphorical. இதுக்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும்?
தெரிஞ்சா சொல்லுங்க. மீண்டும் சந்திக்கும் வரை, vgr

6 comments:

  1. புதுசா என்ன.... போதும் என்ற மனசே பொன் செய்யும் மருந்து...

    ஒன்னுமே இல்லன்னா நிம்மதியா இருந்துடலாம். முக்கால்வாசி கிடைச்சு, கால்வாசி கிடைக்கலன்னா, மனசு கிடந்து அலையும்...

    நல்ல கதை.

    And welcome back! :-)

    ReplyDelete
  2. ஒரே ஒரு வருஷம்தான் ஒரு தமிழ் வாத்தியார் தமிழ் எண்களை எழுதனும்னு பிடிவாதம் பிடிச்சார். அப்பறம் யாரும் கண்டுக்கவே இல்லை. அதனால் தமிழ் எண்கள் பழகவே இல்லை...

    மற்றவர்களுக்காக...
    தமிழ் எண்கள்

    ReplyDelete
  3. ஹலோ VGR,

    வந்தோரை வரவேற்கும் பண்பாடு தமிழ் பண்பாடு. தங்களின் மறு வருகைக்கு நன்றி.
    நாகு சொன்ன மாதிரி நல்ல கதை தான்.
    அனால் உங்களின் தேடல் தான் கதையில் சொன்ன காவலன் மாதிரி இருந்தது.

    கதையில் ராஜா அவனிடம் இந்த பையில் நூறு காசுகள் உள்ளன என்று சொல்லி இருந்தால் தொலைந்த ஒன்றை அவன் தேடுதலில் ஒரு நியாயம் உண்டு. அல்லது நூறை இலக்காக்கி அவன் மீதம் ஒன்றை தேடினால் அது முயற்சி. அவன் ஒன்றும் இல்லாததை தேட வில்லை.

    ஆனாலும் உங்களின் தேடலோ அவ்வளவு இரைச்சலிலும் இல்லாத ஒரு மௌனத்தை தேடினிர்களே . அது மட்டும் எந்த வகையில் நியாயம். உங்களுக்கும் அந்த காவலனுக்கும் என்ன வித்தியாசம். நீங்களோ இல்லாத மௌனத்தை அந்த கூட்டத்தில் கண்டு பிடித்திர்களே. சபாஷ்.

    இல்லாத ஒன்றை தேடுவது தான் புதிர். இப்பொழுது புரிகிறதா உங்களின் புதிர் .
    எழுதின காகிதத்தை கொடுத்தீர்களா?

    எனக்கு புரிந்த வரை அவர்களின் கதை,
    இந்த உலகம் எதற்கு அலைகிறது? எதை தேடி என்ற தேடல் தான். அந்த தையல்கார அம்மாவும் தெரியாத ஒன்றைத் தான் தேடி இருக்கிறார்.

    நாகு தமிழ் எண்களுக்கு நன்றி. தமிழில் எண் ணை எழுதி உங்களின் வழக்கத்தை மாற்றிய புது முயற்சிக்கு நன்றி. அது போல தமிழ் கலக்காமல் எழுதி இருக்கலாமோ என்று இல்லாத ஒன்றை என் மனம் தேடுகிறது.


    வேதாந்தி

    ReplyDelete
  4. அன்புள்ள vgr,

    கிடைத்த 99 காசுகள வச்சுக்காம தொலைஞ்ச காசைத் தேடும் அறிவாளிகள் தான் நம்ம நாட்ல அ தி க ம்.

    ரங்கமணி -
    சென்னை தமிழ்நாடு

    ReplyDelete
  5. குளிர்காயத்தான் சுள்ளி பொருக்க ஆரம்பித்தோம்
    ஆனால் சுள்ளி பொருக்குவதிலேயே நம் நேரம் செலவானது!
    - அப்துல் ரஹ்மான்

    ReplyDelete
  6. நன்றி நாகு Sir. இந்த பதிவால் ஏதொ ஒரு ப்ரயோஜனம் இருந்ததில் மகிழ்ச்சி.

    நன்றி வேதாந்தி. நிச்சயம் ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்ச்சிக்கலாம்.

    மிக சரி ரங்கமணி Sir. நன்றி.

    வாசு அவர்களே. மிக சரி. நிறைய நேரங்களில் செய்யற விஷயங்களின் purpose மறக்கப்படறது தான் இப்போதைய நடைமுறை.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!