Monday, October 27, 2014

செந்தமிழ் நாடெனும் போதினிலே.....

செய்தி: நடிகருக்கு சிலை




(Image Courtesy: http://tamil.filmibeat.com/news/fans-unveil-vijay-statue-chrompet-031464.html) 

தமிழனுக்கு சிலை என்ற வார்த்தயை சொன்னாலோ கேட்டாலோ அஞ்சாறு சாமி, நாலஞ்சி பொண்ணுங்க, ரெண்டு மூணு உம்மணாம் மூஞ்சி, ஒண்ணு ரெண்டு நல்லவங்க, ஞாபகத்துக்கு வரணும், வரும். 

இருங்க இருங்க அது போனவாரம், இப்போ நல்லா சிரிப்பு வருது, சிரிச்சி முடிஞ்சதும் வயசானதால வயிறு எரியுது. 

இருவத்தி ஒண்ணாம் நூற்றாண்டில் தமிழகத்தில் கலை பண்பாடு மற்றும் பொதுஅறிவு சிகரம் தொட்டுள்ளது. முப்பது வருசம் முந்தி சினிமா போஸ்டரை உத்துப் பார்த்தாலே (நம்ம மொழி படம் தான்யா!) வீட்ல உரிச்சிருவாங்க எங்களை. 

நீங்கள்ளாம் எங்கப்பா வளந்தீங்க தமிழ்நாட்டிலேதான? இல்ல எங்க அப்பா மட்டும் தான் அப்புடியா? 

சே, விவரம் தெரியாமலே வளந்துருக்கேன், இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இருவது வருசத்துக்கு முன்னாடியே தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பி விட்டிருப்பேன், என்னோட எளமை தான் வீணாபோச்சு, நம்ம பயலுக வீணாயிறக்கூடாது. கைல கால விழுந்தாவது பயலுகளுக்கு நல்ல புத்தி சொல்லி, படம் பாக்க அனுப்பி வைக்கணும். 

நாட்டுக்கு இன்னும் நெறைய சிலைகள் தேவை, 
இனிமேலும் தாமதிச்சா இனத்துக்கே அவமானம்!


3 comments:

  1. கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுங்க அண்ணே !

    ReplyDelete
  2. அதானே. குஷ்பு போன்ற நடிகைகளுக்கு கோயில் கட்டுவது, சிலை வைப்பது போன்ற கலாச்சாரத்திலிருந்து பிறழ்ந்து நடிகர்களுக்கு சிலை வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அதுவும் விஜய்க்கு..

    இன்னும் சிலுக்குக்கே சிலை வைக்கலை. வந்துட்டாங்க சிலை வைக்க...

    ReplyDelete
  3. வாசு,

    உங்கள் பதற்றம் எங்களுக்கு புரிகிறது. இந்த காலத்து பசங்க ரொம்பவே விவரமானவங்க.
    இதுவும் ஒரு பணம் பண்ணும் உத்தி தவிர, விஜய் மேல் பக்தி கிடையாது.


    இருந்தாலும் உங்களின் கோபத்தில் ஒரு நியாயம் உண்டு.
    சிலை வைக்கும் கலாச்சாரம் ஒரு சமுதாயக் கேடு.

    நடிகர், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் சுயநல வாதிகள்.
    அதனை தேசிய நலன் அக்கறை என்று பாரத ரத்னா விருதுக்கு போட்டி இடும் போது
    என்ன சொல்வது என்று புரிய வில்லை.


    வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!