Saturday, March 31, 2012

அயோக்கியப் பெண்மணியின் தொடரும் பித்தலாட்டங்கள்

அயோக்கியப் பெண்மணியின் தொடரும் பித்தலாட்டங்கள்

கரண்ட் கட், பால், பஸ் கட்டண உயர்வு, இடைத் தேர்தல் வருகை. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து இருந்து பைத்தியக்கார மக்களை எப்படி திசை திருப்புவது? எளிது. உடன் பிறவா சகோதரியைக் கட்சியில் இருந்து துரத்துவது.

இது முதல் முறை கூட அல்ல, முன்பே இது போல இந்த அம்மையார் இது போல நாடகங்களை நடத்தி மாங்கா மடையர்களான மக்களை உற்சாகப் படுத்தி இருக்கிறார். பத்திரிகைகளுக்கும், தொல்லைக் காட்சிகளுக்கும் ஏக போக கொண்டாட்டம். நடராசன், திவாகரன் ஆகியோர் எப்போது கைது செய்யப்படுவர் என்று தொடர்ந்த ப்ளாஷ் செய்திகள்.

இடைத் தேர்தல் முன்பு வரை கூடங்குளம் மின் நிலைய எதிர்ப்புக் கும்பல் செய்த போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, இடைத் தேர்தலில் வெற்றி வந்தவுடன் , மின் நிலையம் திறக்கப் படும் என்ற அறிவிப்பு, உதய குமாரைக் கைது செய்ய போலிஸ் படை குவிப்பு, இப்போது மின் கட்டண உயர்வு என்ற ஒரு பழைய மூன்றாந்தர வழக்கம்.

பொதுத் தேர்தலையும் பஞ்சாயத்து தேர்தலையும் இரண்டு மாத இடைவெளியில் வைக்க அனுமதிக்கும் இந்தக் கிறுக்குத் தனமான அரசியல் சட்டங்கள் இருக்கும் வரை, ஐந்து வருட ஆட்சியில் இவர்களது அயோக்கியத் தனங்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ ஒரு வழியும் இல்லை. இடைத் தேர்தல்கள் கேலிக் கூத்தாகி, சில கோடிகள் போய், ஆயிரக்கணக்கான கோடிகளை இறைத்து, அங்குள்ள மக்களை தற்காலிக VIP களாக்கி விடும் கோமாளித் தனம் தொடர்கிறது. தொகுதி நன்றாக வேண்டுமா? உங்கள் MLA சாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அங்கு பாலாரும், தேனாறும் ஓடும்.

இந்தத் தரங்கெட்ட பெண்மணியின் ஆட்சி இன்னும் நான்கு வருடங்கள் தொடரட்டும். ஐந்தாவது வருடம், மீண்டும் சலுகைகள், நாடகங்கள் அரங்கேறும்.

6 comments:

  1. Troll Alert! Troll Alert!!

    சென்னைல எங்க அம்மாவும் இதேதான் சொல்றாங்க. மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் எல்லோரும் சுபிட்சமாக (கலைஞர் கொடுத்த)டீவியில் ரசித்து மகிழ்ந்து இருந்த வேளையில் இந்த பிரம்ம ராட்சசியிடம் பதவியை கொட்டுத்து அல்லாடுகிறோம்னு...

    என்ன பண்றது. விதி.

    தலைப்பை பாத்துட்டு நீங்க யாரைச் சொல்றீங்கன்னு கொஞ்சம் யோசிச்சேன். எனக்குத் தெரிஞ்சவரை மாயாவதி ஒன்னும் சொல்லாம கம்னு இருக்காங்க. திஹார் மீண்ட தியாகப் பிழம்பும் ஒன்னும் சொல்லல, இலங்கைல பண்டார நாயகேவும் இல்ல, அவ பொண்ணும் பதவில இல்ல - அதான் கொஞ்சம் குழப்பம் :-)
    அயோக்கியத்தனங்கள் - கொஞ்சம் ஓவர்.
    அகங்காரம், மமதை போன்றதெல்லாம் பொருந்தும்.

    ஊழல், அடாவடி, அயோக்கியத்தனங்கள் - இவை குறித்து மன்மோகன், சிதம்பரம், கருணாநிதி, மோடி, சந்திரபாபு, மாயாவதி, ஜெயலலிதா, கருணாகரன், யாதவர்கள் இவர்களைக் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?

    உலக நாயகன் வரிகள்தான் பதில்: முதல்ல அவன நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்தறேன்.

    //தரங்கெட்ட பெண்மணி//
    கவி இந்திரனின் இறவா வரிகளில்: ஒய் திஸ் கொலவெறிடி?


    நீங்க யாரயோ சீண்டிப்பாக்க இந்தப் பதிவப் போட்டதா பட்சி சொல்லுது.. :-)

    ReplyDelete
  2. பொங்கி எழுந்திருச்சிட்டீங்க.

    உங்க பதிவு ரொம்ப சூடா இருக்கு, நாகு சொன்ன மாதிரி "அயோக்கியத்தனங்கள் - கொஞ்சம் ஓவர்.". சோ சொன்ன மாதிரி இந்தம்மாவ பி.எம். ஆக்கினா என்ன ஆகும்னு காட்டிடடாங்க.

    இது நடக்கும்னு எல்லோரும் எதிர் பார்த்தது தான். என்ன இந்த இடை தேர்தல் மட்டும் இல்லன்னா கொஞ்சம் முன்னேயே நடந்திருக்கும். அடுத்து வரும் சூடான கமெண்டுக்கு எதிர் பார்க்கும் - ஜெ.

    ReplyDelete
  3. Sathya, how come you woke up to Jaya-biting suddenly? No question about the opinion. you are dead right as always. however, along the sameline, you should post a few lines about MuKa and his "thadiyargal" as well. That'd really add more potency to your words and opinions about "ammayaar". Otherwise, you'd be sadly mistaken as another ardent DMK fan foulmouthing jaya.

    ReplyDelete
  4. சத்யா,
    உங்களுக்கு கொஞ்சம் அதிகம் தான் (தைரியம்). ஊரில இல்லேன்னா என்னவெல்லாம் எழுதலாமா.
    மக்களுக்கு தெரியாத அம்மாவை நீங்கள் சொன்னாலும், தமிழக முதல்வர் அம்மா தான். நான்கு வருடங்கள் இல்லை. அடுத்த
    முறையும் அவர்கள் தான். குடும்ப வாரிசு இல்லாத ஒரே கட்சி, இப்போதைக்கு அது தான். மற்ற கட்சிகள், கேப்டன் கட்சி உள்பட குடும்ப
    அரசியல் தான். தி.மு.க. நான்கு ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்குமா என்பதே மர்மமாக இருக்கிறது. அவர்களின் வாரிசுகளே அம்மா கட்சிக்கு தாவினாலும்
    சந்தேக படமுடியாது.
    அயோக்கியம் இல்லை இது சாணக்கியம்.
    மற்ற அரசியல் வாதிகள் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது.

    வேதாந்தி

    ReplyDelete
  5. வேதாந்தி,

    யார் ஊர்ல இல்லை, நீங்களா, இல்லை கிறுக்கரவரா? இல்லை நாகுவா?

    சத்யா,
    என்னது இது சின்னபுள்ளத் தனமாயில்லை இருக்குது. ஒரு பட்டி மன்ற சமாசாரத்தை இப்டி சப்புன்னு பதிவுல போட்டு முடிச்சிட்டீங்க.

    முரளி

    ReplyDelete
  6. neenga ippadi tharanketta thanamaa ezhudhuveengannu naan ethir paarkka villai

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!