Wednesday, December 21, 2011

பின்னூட்டங்களில் இருக்கும் நகைச்சுவை - பகுதி 2.


சமீபத்தில் பாமகவின் அன்புமணி பேசிய கூட்டத்தில் பேசிய இளைஞர் அணிச் செயலாளர் அறிவுச்செல்வன் ''சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவுதிரைப்படத்தில், போதி தர்மனைப் பற்றி காட்டி இருக்கிறார்கள். சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலை மற்றும் மருத்துவம் கற்றுத் தந்த குருவான அவர், நமது தமிழ்நாட்டின் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு மேல் உள்ள வரலாற்றை நான் சொல்கிறேன். அந்த பல்லவ வம்சம் என்பது நமது வன்னியர் சமூகம்தான். அதிலும் அந்த போதி தர்மனின் வம்சம் என்பது நமது அய்யாவின் வம்சம்தான். அந்த போதி தர்மரின் மரபணு நமது சின்ன அய்யாவிடம்தான் இருக்கிறது'' என்று பேச, 'பின்னிட்டாருய்யாஎன்று கூட்டத்தினர் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
 அன்புமணி தனது பேச்சில்  ''அரசியல் என்றாலே அடிதடி, சாக் கடை என்ற மன ஓட்டத்துக்குத்தான் மக்கள் வருகிறார்கள். அப்படி இல்லாத ஒரு அரசியலைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பா..-வின் புதிய அரசியல். அரசியல் நாகரிகமானது; அரசியல் சுகாதாரமானது; அரசியல் பாதுகாப்பானது என்ற நிலைமையை உருவாக்கப் பாடுபடவேண்டும். அப்படிக் கொண்டுவந்தால்தான், திராவிடக் கட்சிகளால் சீரழிந்துகிடக்கும் தமிழ்நாட்டை மீட்க முடியும். அதற்காக நாம் அயராது பாடுபட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இனி நான் ரசித்த பின்னூட்டங்கள்: 

போதி தருமனுக்கு பொறந்த போக்கத்த பயலுகளா நீங்க..

இவர் உடம்புல இருக்கற டி.என்.ஏவை தூண்டி விடுவோம். சின்னய்யாவை படத்துல வர்ற மாதிரி பாட்டில்ல ஊறப் போடுங்கய்யா.

இந்த போதி தர்மரின் ஜீன்ஸ் நமது சின்ன அய்யாவிடம்தான் இருக்கிறது -அவ்ளோ பழைய ஜீன்ஸா,இவ்ளோ நாளா கிழியாமலா இருக்கு.அப்படியே என்ன பிரான்ட் ஜீன்ஸ்னும் சொல்லிடுங்க.

போதி தர்மன் - பல்லவர்கள் தெலுங்கர்கள் ஆயிற்றே. பின் வன்னியர்கள் தெலுங்கர்களா ?. பேசாமல் இவர்களை ஆந்திராவிர்க்கு நாடு கடத்தினால் தமிழகம் சுபிஷ்க்கும்.

சீன அரசியலுக்கு தலைமை ஏற்க வாரிசை கூப்பிடுகிறார்கள் .அனுப்பிவிடுவோம்.

சரிப்பா. அதுக்காக சிக்ஸ் பேக் எல்லாம் கேக்கப்படாது. அப்புறம் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கப்பா நோக்க்க்கிறப்போறார்.

அய்யா.....நீங்க உண்மையுலேயே Mentalலா இல்லை........Mental மாதிரி நடிக்குறீங்களா

"போதி தர்மனின் வாரிசுதான் அன்புமணி!" - இந்த விசயம் போதி தர்மனுக்கு தெரியுமா?

அந்த பல்லவ வம்சம் என்பது நமது வன்னியர் சமூகம்தான். அதிலும் அந்த போதி தர்மனின் வம்சம் என்பது நமது அய்யாவின் வம்சம்தான் >>>
ஆமா, அய்யாதான் மகேந்திரவர்மர், புள்ளைதான் நரசிம்மவர்மர். எல்லாருமா சேர்ந்து தமிழ்நாட்டின் மற்ற இடங்களை நோக்கி படையெடுத்து மிச்சம் இருக்கிற மரங்களையும் வெட்டிச் சாய்ச்சிருங்க!

மொதல்ல இருக்கிற ஒன்னு ரெண்டு அறிவை ஒழுங்க உபயோகப்படுத்துங்கையா!  அதுக்குள்ள ஏழாவது அறிவுக்கு போயிட்டாக!

ஐயா அன்புமணி நீங்க டோங்லி வாரிசுனு ஊருல பேச்சு

இந்த வன்னிய போதி (பேதி) தருமர் எத்தனை பேருக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்? எம் பி பி எஸ் பரிட்சையில் ஐந்து வருடங்கள் வருட வாரியாக வாங்கிய மார்க்குகள் என்னென்ன? அதற்கு முன்னால் புகு முக வகுப்பு (பி யூ ஸி)யில் வாங்கிய மதிப்பெண்கள் என்ன ? தெரிந்தால் யாரவது சொல்லுங்களேன் இந்தப் பேதி தருமரின் மறு பக்கத்தை!

சரி. இது போதி தருமனுக்கு தெரியுமா?

இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

இந்த விசயம் சீனாகாரனுக்கு தெரியுமா?

போதி தர்மனின் வாரிசை சீனாவுக்கு அனுப்பிவிடுவோமா?

அந்த போதி தர்மரின் மரபணு நமது சின்ன அய்யாவிடம்தான் இருக்கிறது  அப்படியா, இவரையும் இவரது அப்பாவையும் சீனாவில் விட்டு விட்டால் ரொம்ப நல்ல இருக்கும்.

அய்யோ... இவுங்க அடங்கவே மாட்டாங்களா??

போதி தர்மனின் வாரிசுதான் அன்புமணி ........ அப்போ இவரும் சீனாவுக்கு போயிடுவாரா?

முரளி இராமச்சந்திரன்

3 comments:

நாகு (Nagu) said...

//அந்த பல்லவ வம்சம் என்பது நமது வன்னியர் சமூகம்தான்//
அடா, அடா, அடா.... சும்மா பின்னிப் பெடலெடுக்கறாங்கய்யா...

TCCZURICH said...

Tamil’s Cultural Centre
Postfach 711
8038 Zurich
SwitzerlandWeb: www.tcczurich.org
Email: info@tcczurich.org

10 Dec 2011

அன்புடையீர்,

சூரிச் வாழ் தமிழ் மக்களின் நலனைப் பேணுவதற்கும் தமிழர் சிறார்கள் இடையே தமிழ் கலாச்சார உணர்வு ஊட்டுவதற்கும் 25 வருடங்களுக்கு முன்னர் தமிழர் கலாச்சார மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை மிக சிறப்பாக இயங்கி தமிழ் வளர்க்கும் இவ்வமைப்பின் 25 ஆவது ஆண்டு விழாவை மிக விமரிசையாக முத்தமிழ் விழாவாக வருகின்ற ஆண்டு சித்திரை மாதம் கொண்டாடவுள்ளோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தமிழ்தென்றல் என்ற மலரும் இம்முறை சிறப்பிதழாக பல்சுவை விடையங்களை தாங்கி வரவுள்ளது. இம்மலருக்கு தங்கள் ஆசிச் செய்தியினை வழங்கினால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.

1987 முதல் ஒவ்வொரு வருடமும் சிறார்களுக்கு தமிழ் பேச்சு, வாசிப்பு, பாட்டு மற்றும் கதை சொல்லல் போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்குகிறோம். புலம்பெயர்ந்த தமிழர்களிடையே எழுத்தாற்றலை வளர்க்க தமிழ் தென்றல் என்ற மலரையும் பிரசுரித்து வருகிறோம். இது தவிர தமிழ் வானொலி, தமிழர் ஆலோசனை நிலயம் என்பவற்றையும் சிறப்பாக நடத்திவருகிறோம். இன்னும் பல ஆண்டுகளுக்கு சிறப்பாக எங்கள் சேவையை செய்ய எங்களை வாழ்த்துங்கள்.

தமிழை வளர்ப்போம் நல்வழி நடப்போம்

நன்றி

தலைவர். (தமிழர் கலாச்சார மன்றம்)

Anonymous said...

Office la satham potu sirika mudiyama romba kashtapaten pa..

romba thaan comedy panreenga....