Thursday, June 16, 2011

தெளிவு 1 - பதில் ( பூணூல் என்றால் என்ன )

அன்புள்ளங்களே,

தங்களின் பொறுமைக்கு தலை வணங்குகிறோம்.
பூணூல் என்றால் என்ன என்று கேள்விக்கு விடை அளிக்கும் தருணம்.

இதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு.

பூ + நூல் என்றும்
பூண் + நூல் என்றும் விளக்கங்களை படித்து உள்ளேன்.

நம் சமயத்தில் நூலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள்.
நூல் ஒரு தகவல் சம்பந்தமானது. நாம் சிறு வயதில் தீப்பெட்டியை நூலில் கட்டி தொலை பேசியாய் விளையாண்டது போல நூலை
எல்லா சடங்குகளிலும் உபயோக படுத்தியுள்ளனர்.
கோயில் விழாக்களில் யாகம் செய்யும் இடத்தில் பார்த்தால் கும்பத்தில் / கலசத்தில் நூல் சுற்றி இருக்கும்.
யாக சாலையின் அக்னி குண்டத்திற்கும், தெய்வ சிலையின் மைய பகுதிக்கும் இணைத்து ஒரு நூலையும் பார்த்து இருப்பீர்கள்.
யாகம் செய்பவர்களின் கைகளில் நூல் காப்பு கட்டப் பட்டிருக்கும்.
நூல் ஆனது தகவல் மற்றும் சக்தி பரிமாற்றத்திற்கும் துணை ஆக உள்ளது என்பது இதன் அபிப்ராயம்.
இது உண்மையா அல்லது பொய்யா என்று மற்றொரு தெளிவில் கண்டு கொள்வோம்.

திருமணத்தில் தாலி கூட நூலினால் ஆனது தான்.
இடுப்பில் அணியும் அரை ஞான கயிறும் நூலினால் ஆனது தான்.

இதனால் என்னவோ நாம் படிக்கும் செய்தி தொகுப்பு புத்தகங்களை "நூல்" என்றே கூறுகிறோம் என தோன்றுகிறது.
நூலை போல தாமரையும் தெய்வ சம்பந்த நிகழ்சிகளில் காணலாம். இது இலக்குமியின் அங்கமாகவும் கருத படுகிறது.
தாமரைத் தண்டின் நார் தான் நூலாக உபயோகத்தில் இருந்தது.
விளக்கில் திரியாகவும் பயன் படுத்தி இருந்தனர்.
எனவே பூ + நூல் என்பது பொருத்தம் என சொல்லி இருந்தனர்.

மற்றொருவரோ பூண் + நூல் = பூணும் நூல் , அதாவது அணியக் கூடிய நூல் என்று சொல்லி இருந்தார்.
அதற்கு பெரிய விளக்கங்கள் எதுவும் கொடுக்க படவில்லை.

வாரியார் அவர்களோ மிக வித்தியாசமாக சொல்லி இருந்தார். இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனவே இதனை நான் பொருத்தமான
பதிலாக கொடுக்கிறேன். மற்றவர்களுக்கு மறுக்கும் உரிமை உள்ளது.

புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது.
புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் "
இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது.
அந்த காலத்தில் வேத வியாசம் பண்ணுபவர்கள் - ஆட்சி புரிபவர்கள் - மேலை நாடு சென்று தொழில் புரிபவர்கள் மட்டுமே
படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே
அந்தணர்கள் - பாடம் சொல்லி தர விரும்பியவர்கள் ,
க்ஷத்ரியர்கள் - அரசாள விரும்பியவர்கள் ,
வைசியர்கள் - வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
மட்டுமே குருகுலம் சென்று படித்தனர்.
அவர்கள் மட்டுமே இதனை அணிந்தனர்.

முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர்.
காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும்,
குடுமபஸ்தான் - இரு புரியும்,
சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தனர்.

இது நான் கேட்ட அறிவு. உங்களின் பகிர்வை தெரிய படுத்துங்கள்.

வேதாந்தி

8 comments:

  1. சென்னையிலிருந்து ரா.நரசிம்மன் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பியது:

    நானும் பூண்+நூல் என்றுதான் நினைத்திருந்தேன். வாரியாரின் விளக்கம் சரியாக இருக்கலாம். ஆனால், ஓரிழை அல்லது ஒரு புரி அணியும் வழக்கம் இருந்ததில்லை. முப்புரியும் சேர்த்து முடிந்த கோர்வை தான் பிரம்மச்சாரி அணிவது. கிருஹஸ்தர்கள் இரண்டு ; ஆனால், காலம் சென்ற பெற்றோருக்குச் சடங்கு செய்யும் கிருஹஸ்தர்கள் மூன்று முப்புரி அணிவதுண்டு. சந்நியாசிகளில் சிலர் பூணூல் அணிவதில்லை. சங்கராச்சாரியார்கள் அணிவதில்லை. வைணவ ஆச்சாரியர்கள் அணிகிறார்கள்.
    ஹோமம் முதலான செய்வதற்கான அருகதை பெறுவதற்காகப் பூணூல் அணிய வேண்டும்.
    சுப காரியங்கள் செய்யும்போது இடது தோளிலிருந்து குறுக்காகவும், அசுபங்கள் போது மாற்றியும், தாம்பத்திய உறவில் ஈடு படும்போது நேராக மாலையாகவும் அணிந்து கொள்ள வேண்டும்.

    ரா. நரசிம்மன்

    ReplyDelete
  2. பூணூலை நன்றாக அலசியிருக்கிறீர்கள். நைலான் பூணுலாக இருக்குமோ, இன்னும் தாங்குகிறது :-)

    ஒரு புரி சின்னப்பசங்களுக்கு விளையாட்டாக போடுவார்கள். அதற்குமேல் பயன்படுத்தியதாக நான் கேட்டதில்லை(கேள்வி ஞானம்தான்).

    எனக்கு என்னவோ பாம்புக்கடி காரணம்தான் பிடித்திருக்கிறது :-)

    ReplyDelete
    Replies
    1. சண்முகன் தீயும் தனியொளி ஒவ்வும் குண்டலியாம் சிவ குகன் தினம் ... முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகு உடைய திருவயிறு ... “வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி” என்பது சம்பந்தர் தேவாரம்.

      Delete
    2. “வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி” என்பது சம்பந்தர் தேவாரம். சண்முகன் தீயும் தனியொளி ஒவ்வும் குண்டலியாம் சிவ குகன் தினம் ... முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகு உடைய திருவயிறு. இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
      திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
      சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
      அற்புதம் நின்ற கற்பகக் களிறே!இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
      திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
      சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
      அற்புதம் நின்ற கற்பகக் களிறே!இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
      திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
      சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
      அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

      Delete
  3. நரசிம்மன் ஐயா மற்றும் நாகு,

    உங்கள் இருவரின் பின்னூட்டத்திற்கு நன்றி.
    நான் சொன்னது போல இந்த தெளிவு கேள்விப் பட்ட ஒன்றே தவிர அதன் உண்மையை என்றும் ஆராய்ந்ததில்லை.
    உங்களின் பின்னூட்டம் இந்த தெளிவிற்கு மேலும் விளக்கம் அளித்து உள்ளது.
    மிக்க நன்றி. நல்ல வேளை பித்தனிடம் இன்னும் நான் அடி வாங்க வில்லை.
    நீங்களும் இந்த தெளிவிற்கான கேள்விகளை கேட்கலாம்.
    நன்றி,

    வேதாந்தி

    ReplyDelete
    Replies
    1. மிக சரி என்பதே என் கருத்து நண்பரே.

      Delete
  4. சிவபாலன்
    நன்றி. இன்று விநாயக சதுர்த்தி. விநாயகரும் அணிந்துள்ளார்.

    ReplyDelete
  5. சிவபாலன்
    நன்றி. இன்று விநாயக சதுர்த்தி. விநாயகரும் அணிந்துள்ளார்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!