Tuesday, March 15, 2011

வம்பு

வம்பு

அன்பு என்று சொல்லி
பண்பை சொல்ல அது வம்பாய் மாறி
என் என்பு எங்கு என்று
கேட்கும் அளவுக்கு கம்பு பேசியது என்றால்
அது வம்பா? இல்லை என் தெம்பா?

நண்பா நீ என்னை நம்பு.
நான் தூக்க சொல்ல வில்லை சொம்பு.
வம்பாய் நீயும் மறுக்காமல்
தமிழ் மன்றத்தில் இடு ஒரு வெண்பா.

சிலம்பின் வம்பு காப்பியம்
சினத்தின் வம்பு நெற்றிக்கண்
பழத்தின் வம்பு திருவிளையாடல்
நம்மின் வம்பு நாளைய ....

அது இந்த தமிழ் மன்றம் சொல்லட்டும்
வா நாம் வம்பு பேசலாம். அது பயனுள்ளதாக இருக்கட்டும்.

வேதாந்தி

6 comments:

  1. ஆரம்பத்துல டி.ஆர். மாதிரி இருந்தாலும், கடைசில நல்லா முடிச்சிருக்கீங்க...

    தெய்வம் தந்த வீடு பாட்டு ஞாபகத்துக்கு வருது. தெளிவாகத் தெரிந்தாலே, சித்தாந்தம். அது தெரியாமல் போனாலே, வேதாந்தம்! :-)

    ReplyDelete
  2. வேதாந்தி,
    உங்கள் எழுத்தை ஒரு சின்ன மதிப்பீடு செய்யலாமா?

    அன்புடன்,

    பித்தன்.

    ReplyDelete
  3. பித்தன் பெருமாள் அவர்களே,

    சந்திக்கு வந்த பின் சத்தம் (கூலி) எதற்கு ?

    மதிப்பீடு மட்டும் இல்லாமல், சத்தமே(அறிவுரை) போடலாம்.

    பித்தன் பிதற்றலாம், நான் பதற மாட்டேன். அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    வேதாந்தி

    ReplyDelete
  4. நாகு,

    வேதாந்தம் தெரியாத மாதிரி இருக்கும், ஆனால் எல்லாம் தெரிந்தவை தான்.

    புரியாத மாதிரி இருக்கும், ஆனால் எல்லாம் புரிந்து விடும்.

    குழப்பம் தானே.

    உங்களிடம் இப்படி பேச பேச எனக்கே நான் என்ன பேசுகிறேன் என்று புரிய ஆரம்பிக்கிறது.

    நன்றி

    ReplyDelete
  5. வேதாந்தி,
    உங்கள் பதிவில் நான் கண்டது, உங்களுக்கு பல செய்திகளை, பல நிகழ்வுகளை, பல கருத்துக்களை பதிவு செய்யும் ஆர்வம் அதிகம், உங்களின் வம்பு ஒரு நல்ல கவிதையாகியிருக்கக்கூடியது வார்த்தைகளின் அடுக்குகளால் நழுவி விட்டது.

    ஒரு சில சொற்களைக் குறைத்து, சில விதிகளை கைக் கொண்டால் உங்கள் பதிவுகள் கவிதைப் பதிவுகள் ஆகும் நாள் தூரத்தில் இல்லை.

    அன்புடன்,
    பித்தன்.
    பி.கு. இந்தப் பித்தன் பிதற்றுபவனல்ல, கிறுக்குபவன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!