Friday, November 06, 2009

தமிழ் சங்கத்தில் ஆங்கிலமா? - ஒரு வம்பு --2

ஏ தமிழனே, நம் பாரதி சொன்னது போல " ரௌத்திரம் பழகு" தமிழையும், தமிழை சாடுபவரையும் விட்டு வைக்காதே.

புதுமனை புகும் போது பால் காய்ச்சுவது வழக்கம். அது பொங்கினால் மிக உத்தமம். அது போல செயலர் " தமிழ் தளபதி" ஜெய காந்தன் பொங்கினார், ஆனால் அரிசி உலை கொதி நீர் போல அவர் மறுமொழியில் பொங்கி அடங்கினார். பொங்கியதற்கு நன்றி, ஆனால் அடங்குவது முறை அல்ல.

தமிழ் தலைவர் முரளியும் தன பங்கிற்கு தீபாவளி விழாவினை தமிழில் செய்து காட்டி, பெரியவர்கள் தான் பேசுவது இல்லை, குழந்தைகள் எல்லாம் மிக்க ஆர்வத்துடன் தான் இருக்கிறார்கள் என்று சொல்லி பெற்றோர்களின் பங்கு குறைவு என்று ஒரு நெற்றியடி கொடுத்து உள்ளார். அன்பான பெற்றோர்களே நீங்கள் தான் அவர்க்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

"தமிழ் கோ" முத்துவோ இந்த வம்பு தமிழுக்கோ என்று ஒதுங்கி உள்ளார்.
"தமிழ் பேரரசு " பரதேசியும் குழந்தைகளுக்காக ஆங்கிலம் பேசலாம் என்று ஆமோதித்து இருக்கிறார். அனால் சங்கத்தின் தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகள் பேசிய தமிழ் பெரிவர்களிடம் இல்லையே என்று நிருபித்து விட்டனர்.

மிக்சர் மீனாவோ இதனை இன்முகம் காட்டி வரவேற்று உள்ளார்.
டோண்டு வோ, சங்கங்களில் ஆங்கிலம் பேசுவதற்கு காரணம் பெரியாரும், பார்ப்பனர்களும் என்று மரபு திரிந்து வழ்க்கமான அரசியல்வாதியை காரணம் காட்டி புறமுதுகு காட்டி உள்ளது.

நம் வம்போ அது நல்லதா, கெட்டதாஎன்று ஆராய்வது அல்ல. அதனை எப்படி செயல் படுத்துவது என்று தான். அன்பான தமிழனே, நீ உண்மையான தமிழனாக இருந்தால் உண்மையை உணர்வாயாக. அமெரிக்காவில் அதிகம் பேசும் மொழி எது தெரியுமா? ஆங்கிலம் அல்ல என்பது உண்மை. ஸ்பானிஷ் (மெக்சிகோவின் மொழி) என்பது தான் உண்மை. ஏன் தெரியுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, அவர்களிடம் வேலை வாங்குவதற்கு அமெரிக்கர்கள் ஸ்பானிஷ் கற்று கொள்கிறார்கள். இதே நிலைமை தான் சீன மொழி மற்றும் ஜப்பான் மொழி பேசும் மக்களிடமும் .

உன்னிடம் பணிவு உண்டு, திறமை உண்டு, ஆனால் விட்டு கொடுக்கும் பங்கும் உண்டு. அதனால் தமிழை விட்டு கொடுக்காதே. உன் திறமையை அறிய இந்த உலகம் உன் மொழியை கற்கும என்று இறுமாப்பு கொள். இந்த உலகம் உன் திறமையின் காலடியில். பரங்கியனை பாடாதே. வஞ்சகம் பேசாதே. உன்னால் ஒருவன் மேன்மை அடைகிறான் என்றால் அவன் தமிழன் என்றால் மட்டும் பெருமை கொள்.

நாரதனின் கலகம் இன்னும் ஆரம்பமாக வில்லை.

வேதாந்தி

4 comments:

  1. வேதாந்தியாரே - ஏன் இ.கொ.வெ? :-)

    //தமிழையும், தமிழை சாடுபவரையும் விட்டு வைக்காதே.//
    என்ன சொல்ல வருகிறீர்கள்? தமிழை விட்டு வைக்காதே!!??? ஏற்கனவே தமிழன் தமிங்கிலத்தில் போடும் போடு போதாதா?
    ஜெயகாந்தன், முரளி, முத்து, பரதேசி, டோண்டு என்று ஏன் இப்படி நாலா திசைகளில் அரிவாள் வீசுகிறீர்கள்? என்னை விட்டு வைத்ததற்கு நன்றி :-)

    //அமெரிக்காவில் அதிகம் பேசும் மொழி எது தெரியுமா? ஆங்கிலம் அல்ல என்பது உண்மை. ஸ்பானிஷ் (மெக்சிகோவின் மொழி) என்பது தான் உண்மை.//
    இது என்ன புது உடான்ஸ்? சும்மா வம்புதான் கிளப்புகிறீர்களென்றால், கூடவே புரளியும் கிளப்புகிறீர்களே?

    //பரங்கியனை பாடாதே. வஞ்சகம் பேசாதே. உன்னால் ஒருவன் மேன்மை அடைகிறான் என்றால் அவன் தமிழன் என்றால் மட்டும் பெருமை கொள்.//

    இது எல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை? :-)


    //சங்கத்தின் தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகள் பேசிய தமிழ் பெரிவர்களிடம் இல்லையே என்று நிருபித்து விட்டனர்.//
    சரியாக சொன்னீர்கள். குழந்தைகள் பேசிய தமிழுக்கு ஒரு 'ஓ'. பெரியவர்கள் வெட்கிக் குனியவேண்டும். அந்த கலக்கு கலக்கினார்கள். அங்கிதா, ஹரிணி மற்றும் ஸ்வேதா - அருமையாக விழாவை தமிழில் வழங்கியது மறக்க முடியாது.

    ReplyDelete
  2. //டோண்டு வோ, சங்கங்களில் ஆங்கிலம் பேசுவதற்கு காரணம் பெரியாரும், பார்ப்பனர்களும் என்று மரபு திரிந்து வழ்க்கமான அரசியல்வாதியை காரணம் காட்டி புறமுதுகு காட்டி உள்ளது.//
    நான் எங்கு அவ்வாறு சொன்னேன்? நிரூபிக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. /@/டோண்டு ராகவன் //
    அனேகமாக அவர் உங்க பதிவின் பின்னூட்டகாரர்களை பற்றி சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்..

    @வேதாந்தி: எதுக்கு இம்புட்டு ஆவேசம் அய்யா! நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு. போகிற போக்கில் நீங்களும் தமிழ் பேசாவிட்டால் அ.அ.உ.உ. கட்சி ("அடிக்கு அடி உதைக்கு உதை" - சீமான் போல) ஆரம்பிப்பீர்கள் போல!! எதோ நீங்க ஆரம்பிச்ச கலகத்தால நல்லது நடந்தா சரி..

    விழாவின் இளைய தலைமுறை தொகுப்பாளினிகள் மிக அருமையாக தமிழ் பேசி அனைவரையும் ஆச்சர்ய படுத்தினர். அதிலும் பாரதி பாட்டு, கவிதை, சுத்த தமிழிலில் வார்த்தைகள் எழுதி கொடுத்த ஸ்ரீலதா முத்து பாராட்டுக்குரியவர்!

    நாகு சுட்டிகாட்டியது போல ஸ்பானிஷ் இரண்டாவது மொழியே. (ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Languages_of_the_United_States : Spanish is the second most common language in the country, and is spoken by over 12% of the population. Also from Census: http://bit.ly/2K1Ya2 )

    ReplyDelete
  4. நாகு, இது ஒரு கொலை வெறி அல்ல. மீன் பிடிக்க வலையை வீசி பார்த்தேன். ஒன்னும் சிக்க மாட்டேங்குது. வலையில் கொஞ்சம் எசகு பிசகா பேசினால் சில பேர் ஆதாரத்துடன் அடிக்க வந்து விடுகிறார்கள். .

    ஹலோ டோண்டு ராகவன் சார், நீங்கள் சொன்னதாக நான் சொல்ல வில்லையே. E ஜெயகாந்தன் சொல்லியது போல உங்கள் பின்னூட்டத்தில் அப்படி தான் பேசி கொள்கிறார்கள். உங்களின் தமிழ் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்.

    ஜெயகாந்தன் அடிக்கு அடி எல்லாம் நம்ம பண்ண முடியுமா. உங்கள் ஆதாரத்திற்கு நன்றி. நம்ம தமிழுக்கு ரோஷம் வரட்டுமே என்று தான் அப்படி சொல்லி இருந்தேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!