Monday, October 16, 2006

பிளாகிகளின் கூட்டாங்கதை!

ரிச்மண்ட் பிளாகிகளின்(ரமேஷின் பிரயோகம்) கூட்டு முயற்சியில் ஒரு கூட்டாங்கதை உருவாகிறது. மெகா சீரியல் மாதிரி போகும் கவலைக்கிடமான அறிகுறிகள் தோன்றுகின்றன. பார்க்கலாம் எப்படி போகிறதென்று. கூடிய விரைவில் பார்ட்டிகளில் செல்வி, மெட்டிஒலியைவிட கூட்டாங்கதை பற்றி விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

பித்தன், பரதேசி, நீர்வைமகள்,தருமி, ஓம்கார், ஜெயகாந்தன், ஷன், கவிநயா, நடராஜ மூர்த்தி மாமரத்துப்பட்டி, முரளி, ரவி, அஷோக்,தமில் பிளாகர் என்று சபை களைகட்டுகிறது. அனைவரும் அமைதிப்படையிலேயே தங்கிவிடாமல், சற்று கொஞ்சம் பதிவுகளை வீச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற வார இறுதியில் ஒரு பூஜையில் காதில் விழுந்தவை:

"ஜெயகாந்தன் என்ற பெயர்ல யாரு எழுதறது?"
"ஜெயகாந்தன்தான்".

"நிஜமா சொல்லுங்க, நீங்கதானே பித்தன்".
"யோவ், யார பாத்து பித்தன்ற?".
"இல்லண்ணா, ப்ளாக்ல எழுதறது நீங்கதானே?"
"ப்ளாகா? யாரவர்??"

"எனக்கு நிச்சயமா தெரியும், நாகுதான் பரதேசின்னு. சும்மா பாவ்லாகாக நாகு பேர்ல பரதேசி பதிவில் கமெண்ட் வேற எழுதறான். சுத்தமா வேல இல்ல போல இருக்கு".

"பித்தன் முத்துதான்"
"இல்லய்யா, அவர்தான் அஷோக்ன்ற பெயர்ல எழுதராரே"
"அது அஷோக் முத்துய்யா"
"என்னய்யா குழப்பற"

"ஓம்கார்ன்ற பேர்ல எழுதறது யாரு?"
"முதல்ல எழுதட்டும். அப்பறம் கண்டுபிடிக்கலாம்"

"ரவின்ற பேர்ல எழுதறது யாரு?"
"ரவிதான்"
"எந்த ரவின்னு கேட்டன்யா"
"முதல்ல எழுதட்டும். அதயும் அப்பறம் கண்டுபிடிக்கலாம்"

"RTS Blog தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி ஆயிடிச்சி"
"ஏன்?"
"படிக்கறவங்கள விட அதுல எழுதறவங்கதான் ஜாஸ்தி"


அதுக்குமேல தாங்க முடியவில்லை. உட்டேஞ்சவாரி! உலகத்து அனைத்து மூலைகளிலும் படிக்கப்படுவது நமது பதிவுகள். சான்று? இதோ!

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!