Tuesday, October 31, 2006

அனைவருக்கும் எதிரொலியின் வணக்கம்

ஐயா வணக்கமுங்க. உங்க ப்ளாக்ல எழுதியிருக்கர படைப்புகள படிச்சேன். நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் (எங்க அண்ணன் தான்) ஒரு லிங்க் அனுப்பி எனக்கு டைம் இருந்தா எழுதச் சொன்னாரு. முதல்ல இதுவரை எழுதியிருக்கரவங்க படைப்புகளப் பார்த்தா, நம்ம கதை கந்தல்ன்னு நினைக்கிறேன். நமக்கு (என்னடா பெரிய பருப்பு மாதிரி நமக்கு நமக்கு-நு எழுதரான்னு திட்டாதீங்க, என்னை நான் மதிக்கலைனா வேற யார் மதிப்பாங்க, அதான்) அவ்வளவா நல்ல தமிழ் வராது, இங்கிலீஷ் கலக்காம தமிழ் பேசவே வராது, இருந்தாலும், அண்ணாத்தே சொல்லிட்டாரேன்னு எழுதறேன். தப்பு இருந்தா சொல்லுங்க (திருத்திக்க மாட்டேன், எங்க அண்ணன் யாருன்னு சொல்றேன் அவனை பெண்டு எடுங்க, என்னை 'கவனிக்கனும்னா' சிங்காரச் (இப்போ கொஞ்சம் சொதச் சொதச்) சென்னைக்கு வாங்க, அது நம்ம பேட்டை யாபகம் வெச்சுக்கங்க).
என்னாடா எதிரொலி-ந்னு பேர் வெச்சிருக்கேன்னு கேட்பீங்கன்னு பாக்கறேன் ஒருத்தரும் கேக்கல, போனாப் போவுதுன்னு இந்த தடவை நானே சொல்லிடறேன். நெக்ஸ்ட் டைம் நீங்கதான் கேக்கனும் ரைட்டா.

முன்பு ஒரு காலத்தில, சென்னைத் தொ(ல்)லைக் காட்சியில் ரொம்ப ஃபேமஸ் ப்ரோக்ராம் எதிரொலி, அதுல T.S. நாராயணஸ்வாமின்னு ஒருத்தர் வருவார் (பேர் குன்ஸாதான் ஞாபகம் இருக்கு தப்பா இருந்தா, இதுக்கெல்லாம் கட்டைய தூக்கிட்டு வராதீங்க, இதெல்லாம் பேசி தீத்துக்க வேண்டியது), அவரால அந்த ப்ரோக்ராம் சக்க போடு போட்டது, அந்த ஞாபகத்தில இந்த பேரை வெச்சுகிட்டேன், (ஒன் கோலி சோடா ப்ளீஸ்).

மொதல்ல இங்க வந்திருக்கிற கதை, கவித எல்லாத்தையும் பிரிச்சு மேஞ்சிடலாம்னு இருக்கேன். ஒரு தபா யாரோ சொல்லி ஒரு பெரியவர் கேட்டு (நாந்தான்) இன்னிக்கு சொல்றது என்னடான்னா, 'A critic need not be a professional', so, இதுக்கும் கழி, கம்பு எடுத்துகிட்டு வராதீங்க, பாவம் அறியாபுள்ள தெரியாம சொல்லிகினான்னு உடுங்க. (ஐ எனக்கும் நல்லா எதுகை மோனைல எழுத வருது, okay okay, இதெல்லாம் நமக்கு ஜகஜமப்பா).

அடுத்து உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் நன்பன் எதிரொலி.

(பி.கு. இப்படி ஒரு தடவை வணக்கம் சொல்லி எழுதிப் பாக்கனும்னு ரொம்ப நாளா ஆசை, எழுதினதுக்கு அப்பரம்தான் தெரியுது சகிக்கலன்னு)

4 comments:

  1. வாங்க எதிரொலி, வாங்க. உங்க ப்ளாக்ல தப்பு எக்கச்சக்கம். உங்க அண்ணாத்த யாருன்னு கொஞ்சம் சொல்றீங்களா? எத எல்லாம் அவுட்ஸோர்ஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லையான்னு விசாரிக்கனும். சரி, நம்பளுக்கு சென்னைல ஒரு பதிவர் இருக்காருன்னு சந்தோஷம்தான். செய்திகளை உடனுக்குடன் குடுங்க. உங்க அண்ணாத்தையை சும்மா உட்டுற்றோம்.

    ReplyDelete
  2. இன்னாடா பேட்டை லாங்குவெஜ்'ல ஒர்த்தரும் எழுதலன்னு பார்த்தேன்..
    மொத ப்ளாக்'ல மேட்டர விட மிரட்டல் தான் கூடுதலா இருக்கு. ப்ளைட்டு புடுச்சு வந்து ஒதைக்கர அளவுக்கு மோசமில்லை.ரிச்மண்ட் காங்.. சாரி.. தமிழ் சங்க ப்ளாக்கிகள் சார்பாக, வருக.. வருக. நாகு - இதிலும் பிழை கண்டுபிடுத்து திருத்தாதீரும்.

    ReplyDelete
  3. நாகு தப்பு எக்கச்சக்கம்ன்னு சொல்லிகினாரு, இன்னா தப்புன்னு சொல்லல, அத்தொட்டு,
    நோ தப்பு, ஆல் ரைட்டு. இன்னா நாகு சார், நம்ப கைல சண்டை வலிச்சுகினே, அப்பால
    கவுன்சுகரேன். ஒன்னும் இல்லை ஜெயகாந்தன் அவர்கள் பேட்டை லாங்குவெஜ்ல கொஞ்சம்
    எழுதினதுமே குஷி ஆயிட்டாரேன்னுதான் மெட்ராஸ் பாஷை ட்ரை பண்ணினேன். என்ன தப்பு,
    நண்பனுக்கு பதிலா நன்பன்-ன்னு எழுதினதா, அப்படி எழுதலைனா அது மெட்ராஸ் பாஷை
    இல்லையே(மிச்ச மிஸ்டீக் அல்லாம் எடுத்தாச்சு நைனா). ஜெயகாந்தன் அவர்களே,
    கொஞ்சம் நூல் விட்டு எப்படி ரியாக்ட் பண்றீங்கன்னு பார்த்தேன், கண்டிப்பா நிறைய
    எழுதறேன், 'விதி வலியது' வேற என்ன சொல்றது.

    நாகு: எங்க அண்ணன் யாருன்னு தெரியாதா, அவரு எவ்ளோ பெரிய ஆளு, வல்லவரு,
    நல்லவரு, நாளும் தெரிஞ்சவரு (மெய்யாலுமே அவருக்கு 1, 2, 3, 4 வரைக்கும் தெரியும்),
    முடிஞ்சா கண்டு பிடிங்க. (அவனை அவரு இவருன்னு கூப்பிட்டு பழக்கமே இல்லையா,
    ரொம்ப குஷ்டமா (சாரி) கஷ்டமா இருக்குது).

    ReplyDelete
  4. இன்னாபா எதிரு தம்பி, சொம்மா வெளயாடி பாக்கலாம்னு பாத்தா....
    அதுசரி, இன்னா பீனிக்ஸ்ல பனி கினி கொட்டுதா, ரொம்ப வெரச்சிகினி சென்னை கின்னைனு பீலா உட்ற? அங்க பேட்டக்கி அஞ்சி ஆட்டோ எப்பயுமே ரெடி. உஜாரா இருந்துகோ. அப்பறம் உங்க அண்ணாத்த அவுட்ஸோர்ஸ் ஆறுமுகத்தாண்டியும் சொல்லி வை.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!