Friday, October 20, 2006

தீபாவளி

போராடி கிடைத்த போனஸ்
பளபளக்கும் பட்டாடை
பலவிதத்தில் பணியாரம்
படபடக்கும் பட்டாசு
பழங்கதையில் புதுப்படம்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் பாமரனின் தீபாவளி

மினுமினுக்கும் மோதிரம்
கைகனக்கும் கடிகாரம்
ஜொலி ஜொலிக்கும் வேட்டி
பளபளக்கும் மோட்டார்பைக்
பல்லுடைக்கும் மைசூர்பாக்
படபடக்கும் மைத்துனன்
பரபரக்கும் மாமியார்
பல்லிளிக்கும் மாமனார்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் புது மாப்பிள்ளையின் தலை தீபாவளி


சிடுசிடுக்கும் மாப்பிள்ளை
சரிக்கட்டும் செல்லப்பெண்
சிக்கல் தீர்க்கும் மனைவி
சிரித்துக்குலுங்கும் பேத்திகள்
சிலுமிஷம் செய்யும் பேரன்கள்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை

வாசலில் நின்று பயமுறுத்தும் மளிகைக்கடைக்காரர்
வழியில் மடக்கி வாதாடும் தையல்காரர்
விட்டு விட்டு தலையை சொரியும் தபால்காரர்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை
தபாலில் வந்து மதிமயக்கும் மாஸ்டர் கார்ட் பில்
தவராமல் வந்து விழி பிதுக்கும் விசா கார்ட் பில்
இது தான் தீபாவளி என்பதோ?
இது பாமரனின் தீபாவளியல்ல
இது புது மாப்பிள்ளையின் தலை தீபாவளியுமல்ல
இது தலைவரின் தீபாவளி
ஆம் குடும்பத்தலைவரின் தீபாவளி!


உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
ப்ளாகிகளே! மேலும் மேலும் ப்ளாகுக!

1 comment:

  1. தீபாவளி சமயத்தில் ஏன் சார் அந்த தொந்திரவெல்லாம் ஞாபகப்படுத்தரீங்க? பட்சணம்லாம் சாப்பிட்டு தீபாவளி மருந்து சாப்பிடமாதிரி.

    தீபாவளி சமயத்தில் அப்பா போட்ட ததிங்கினத்தோம் எல்லாம் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே....

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!