தேவர் மகன் மெட்டில் முயற்சிக்கவும் - http://www.youtube.com/watch?v=wNR4W05fsas
வானந் தொட்டுப் போனான், மானமுள்ள ஜாப்ஸ்
தேம்புதய்யா பாவம், gadget குல பூமி
ஆப்பிளுக்கு வேறு CEO -தான் யாரு, ஐ-போனுக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே, ஆண்டிராயிட் சனந்தான்
தத்தளிச்சு, வாடுதய்யா IT இனந்தான்.
Saturday, January 14, 2012
Friday, January 13, 2012
அண்டிப் பிழைக்கும் அற்பர்கள்
அண்டிப் பிழைக்கும் அற்பர்கள்
இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களை இதை விட கௌரவமாக அழைக்க வார்த்தைகளைத் தேட வேண்டி இருந்தது. இந்திய அணி இந்தியாவுக்கு வெளியே சரியாக விளையாடாது என்பது புளித்துப் போன ஒரு சொல். ரிப் வான் விங்கிள் இருபது வருடத்திற்கு முன்பு தூங்கி இப்போது எழுந்திருந்தால், விவேக் பாணியில் "அடப் பாவி, இன்னுமாடா இப்படி" என்ற அதிர்ச்சியில் மண்டையைப் போட்டிருப்பார். அசாருதீன் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார், நான் எவ்வளவோ பரவாயில்லை என்று.
30/33/39/38/37/23/30/27/33/23/24 . என்ன தோணுகிறது? இதுதான் இந்த அணியின் வயது விபரம். சராசரி வயது 30 - க்கு மேலே. இன்னும் இரண்டு வருடம் போனால், நாற்பது வயது நிறைந்த இருவர் விளையாடும் அணியைப் பார்த்த அதிர்ஷ்டம் நமக்கு உண்டு. 19 - ஆம் நூற்றாண்டுக்குப் பின் கிழவர்கள் ஆடிய அணி என்ற பெருமையை நாம் அடையலாம்.
முதியவர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனம் இல்லை, நாளைய ஆட்டத்தை விட, அடுத்த மாதம் கிடைக்கும் IPL சில்லறைகளுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாயாக அலையும் இளைய தலைமுறை. இவர்கள் வரும் விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டு பிஸ்கட் முதல் கார் வரை வாங்கிப் பெருமை அடையும் ஏமாளி ரசிகர்கள்.
இந்த அணியின் வீ(?)ரர்களை சற்று அலசுவோம். இணைய தளத்தில் உலவிய சில பட்டப் பெயர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.
சேவாக். இவர் ஒரு "செத்த"வாக். சராசரி விதிகளின் படி இதன் முன்பு இவர் இந்தத் தொடரில் சதம் அடித்திருக்க வேண்டும். இவர் அடிப்பார் அடிப்பார் என்று இலவு காத்த கிளியைப் போல ரசிகர்கள் காத்திருந்ததுதான் மிச்சம். இவர் அடிக்கும் முன், நாம் அமெரிக்கப் பொருளாதார நிலைமையை சீர்படுத்தி விடலாம்.
கம்பீர். இவர் ஒரு சொம்பீர். IPL ஏலத்தில் அதிகமாகப் பணம் வாங்கியதில் இருந்த கம்பீரம் எங்கே போனது?
திராவிட் - இந்தியப் பெருஞ்சுவர் இன்று விரிசல் விழுந்து இன்றோ நாளையோ என்று இருக்கிறது. ஸ்வரம் இருக்கும்போதே பாட்டை நிறுத்து என்ற பழமொழியை நமக்கு நினைவுக்குக் கொண்டு வருபவர். முன்பு ஒரு நாள் போட்டிகளில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் பட்டவர். டெஸ்ட் பந்தயங்களிலும் நம்மை அந்த நிலைமைக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயல்கிறார்.
டெண்டுல்கர் - பழைய பெருங்காய டப்பா. இன்னும் வாசனை உள்ளது. இருபது வருடங்களுக்குப் பின்பும் இவர்தான் நம் அணியின் முன்னணி வீரர் என்பது இவரது பெருமையா? அல்லது நம் அணியின் சிறுமையா? அந்த நூறாவது சதத்தை எடுத்துத் தொலைக்கட்டும் என்று அவரது பரம ரசிகர்களே புலம்பும் அளவுக்கு விரக்தியின் உச்சக் கட்டத்தில் தள்ளி இருக்கிறார்.
லக்ஷ்மணன் - இவர் ஒரு வெத்து வேட்டு. அணியில் இருந்து விரட்டுவதற்கு சற்று முன் ஒரு ஐம்பதோ , நூறோ அடித்து மீண்டும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார். ஓவரின் முதல் பந்தில் ஒற்றை ரன் எடுத்து விட்டு வால் வீரர்களை எதிரணியின் வேகப் பந்து வீச்சாளரின் மீதி ஐந்து பந்துகளை நேரிட வைத்து நாட்-அவுட் அல்ப சுகம் காணுபவர். பத்து வருடத்திற்கு முன் எடுத்த 281 - ல் இன்னும் குளிர் காய்பவர். ஆலையில்லா நம் ஊருக்கு இவர் ஒரு இலுப்பைப் பூ.
விராட் கோழி (?) - ஒரு நாள் போட்டி ஜாலி, இல்லா விட்டால் இவர் இவர் கோழி பிடிக்கத்தான் லாயக்கு. இவர்தான் இந்தியாவின் எதிர்காலம் என்றால் நம் நாட்டின் இளைய தலைமுறையின் திறமையை எடை போட்டு விடலாம்.
தோனி - உலகக் கோப்பையை எடுத்து விட்டார், இனி 28 வருடங்கள் கவலை இல்லை. 2013 முதல் டெஸ்ட் விளையாட மாட்டேன் என்று சொல்லி, இன்றைய பிரச்சனைக்கு ஒரு முன் ஜாமீன் வாங்கி விட்டார். குடிக்கும் ஒரு காலன் பால் ஒரு நாள் போதிக்கும், IPL - க்கும் சரியாகி விட்டது, இன்னும் கொஞ்சம் குடித்தால் டெஸ்ட் நன்றாக விளையாடலாம்.
பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? குறை சொல்லும் அளவுக்கு இவர்கள் எதிர் பார்ப்பு எதுவும் கொடுப்பதில்லை.
இன்னும் இரண்டு வாரம்தான். டெஸ்ட் முடிந்து விடும், ஏழெட்டு ஒரு நாள் போட்டி உள்ளது, எப்படியாவது ஒப்பேத்தி ஒன்றிரண்டு பந்தயம் ஜெயித்து விடலாம், டெண்டுகர் சதம் அடித்து விட்டு பாரத ரத்னா வாங்கலாம், நம் அணியினர் நடந்தவை போகட்டும், இனி நடக்கப் போவது நல்லதாக இருக்கட்டும் என்று கீதையை நாடலாம். இளித்த வாய் ரசிகர்கள் ஏர்டெல் சிம்கார்டு வாங்கிப் பெருமிதம் அடையலாம்.
வாழ்க கிரிக்கெட், வளர்க நம் அணியினர் வளமுடன்

பொங்கல் வாழ்த்து - 2012
ஏர் பூட்டிய எருது
நிலம் பிளக்கும் உழவன்
எம்குலப் பெண்களின் வருகை
விண் அதிரும் குலவை
வெண் மேகம் நீந்தும்
நீர் ததும்பும் நிலம்
சடசடத்துக் கதை பேசும்
காற்றில் ஆடும் நாற்று(கள்)
முப்பொழுதும் நீர் பிடிக்க
தப்பாது வளரும் பயிர்
நீண்டு வளர்ந்து பின்
தலை வணங்கும் நெல்மணி(கள்) !
***
ஞாயிற்றின் வரவிற்கு,
மாக்கோலத் தரையினிலே
மஞ்சள் தண்டுடுத்தி
வைத்திட்ட மண்பானை
கற்கண்டுத் தேனோடு
வெல்லம் கலந்திடவே
நீரூறும் நம்நாவில்
பச்சரிசிப் பால்பொங்கல்
உண்டு மகிழ்ந்திடுவோம்
உழவனை வாழ்த்திடுவோம்
வையகம் தழைத்திட
உழவினைப் போற்றிடுவோம் !!
***
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!
படம்: நன்றி இணையம்
Saturday, December 24, 2011
சதுரங்கப் போட்டி
Happy holidays to everyone.
Richmond Tamil Sangam is excited to announce the RTS Chess tournament to be conducted in Jan 2012.
There are 3 categories
Kids under 10 years
Kids 10-15 years
Adults and Kids 15+ years
The participation fee is $5 for RTS members and $10 for non-members. Please forward this to any one interested.
Participation deadline is Jan 08, 2012. Actual schedule will be communicated after the deadline along with the groupings/draws.
For enrolling, please use the following link.
https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dHdHUUFlYnJWbUVVejcxMDhwOHFxeUE6MQ
If you have any questions, please contact the Sports Director Maran (nnanmara AT gmail DOT com)

Wednesday, December 21, 2011
பின்னூட்டங்களில் இருக்கும் நகைச்சுவை - பகுதி 2.
சமீபத்தில் பாமகவின் அன்புமணி பேசிய கூட்டத்தில் பேசிய
இளைஞர்
அணிச்
செயலாளர்
அறிவுச்செல்வன் ''சமீபத்தில்
வெளிவந்த
'ஏழாம்
அறிவு’
திரைப்படத்தில்,
போதி
தர்மனைப்
பற்றி
காட்டி
இருக்கிறார்கள்.
சீனாவுக்குப்
போய்
தற்காப்புக்
கலை
மற்றும்
மருத்துவம்
கற்றுத்
தந்த
குருவான
அவர்,
நமது
தமிழ்நாட்டின்
பல்லவ
வம்சத்தைச்
சேர்ந்தவர்
என்பதைச்
சொல்லி
இருக்கிறார்கள்.
அதற்கு
மேல்
உள்ள
வரலாற்றை
நான்
சொல்கிறேன்.
அந்த
பல்லவ
வம்சம்
என்பது
நமது
வன்னியர்
சமூகம்தான்.
அதிலும்
அந்த
போதி
தர்மனின்
வம்சம்
என்பது
நமது
அய்யாவின்
வம்சம்தான்.
அந்த
போதி
தர்மரின்
மரபணு
நமது
சின்ன
அய்யாவிடம்தான்
இருக்கிறது''
என்று
பேச,
'பின்னிட்டாருய்யா’
என்று
கூட்டத்தினர்
கைத்தட்டி
ஆர்ப்பரித்தனர்.
இனி நான் ரசித்த பின்னூட்டங்கள்:
போதி
தருமனுக்கு
பொறந்த
போக்கத்த
பயலுகளா
நீங்க..
இவர்
உடம்புல
இருக்கற
டி.என்.ஏவை தூண்டி விடுவோம். சின்னய்யாவை படத்துல வர்ற மாதிரி பாட்டில்ல ஊறப் போடுங்கய்யா.
இந்த
போதி
தர்மரின்
ஜீன்ஸ்
நமது
சின்ன
அய்யாவிடம்தான்
இருக்கிறது
-அவ்ளோ
பழைய
ஜீன்ஸா,இவ்ளோ நாளா கிழியாமலா இருக்கு.அப்படியே என்ன பிரான்ட் ஜீன்ஸ்னும் சொல்லிடுங்க.
போதி
தர்மன்
- பல்லவர்கள்
தெலுங்கர்கள்
ஆயிற்றே.
பின்
வன்னியர்கள்
தெலுங்கர்களா
?. பேசாமல்
இவர்களை
ஆந்திராவிர்க்கு
நாடு
கடத்தினால்
தமிழகம்
சுபிஷ்க்கும்.
சீன
அரசியலுக்கு
தலைமை
ஏற்க
வாரிசை
கூப்பிடுகிறார்கள்
.அனுப்பிவிடுவோம்.
சரிப்பா. அதுக்காக சிக்ஸ் பேக் எல்லாம் கேக்கப்படாது. அப்புறம் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கப்பா நோக்க்க்கிறப்போறார்.
அய்யா.....நீங்க உண்மையுலேயே Mentalலா இல்லை........Mental
மாதிரி
நடிக்குறீங்களா
"போதி தர்மனின் வாரிசுதான் அன்புமணி!" - இந்த விசயம் போதி தர்மனுக்கு தெரியுமா?
அந்த
பல்லவ
வம்சம்
என்பது
நமது
வன்னியர்
சமூகம்தான்.
அதிலும்
அந்த
போதி
தர்மனின்
வம்சம்
என்பது
நமது
அய்யாவின்
வம்சம்தான்
>>>
ஆமா,
அய்யாதான்
மகேந்திரவர்மர்,
புள்ளைதான்
நரசிம்மவர்மர்.
எல்லாருமா
சேர்ந்து
தமிழ்நாட்டின்
மற்ற
இடங்களை
நோக்கி
படையெடுத்து
மிச்சம்
இருக்கிற
மரங்களையும்
வெட்டிச்
சாய்ச்சிருங்க!
மொதல்ல
இருக்கிற
ஒன்னு
ரெண்டு
அறிவை
ஒழுங்க
உபயோகப்படுத்துங்கையா! அதுக்குள்ள ஏழாவது அறிவுக்கு போயிட்டாக!
ஐயா அன்புமணி நீங்க டோங்லி வாரிசுனு ஊருல பேச்சு
இந்த
வன்னிய
போதி
(பேதி)
தருமர்
எத்தனை
பேருக்கு
வைத்தியம்
பார்த்திருக்கிறார்? எம் பி பி எஸ் பரிட்சையில் ஐந்து வருடங்கள் வருட வாரியாக வாங்கிய மார்க்குகள் என்னென்ன? அதற்கு முன்னால் புகு முக வகுப்பு (பி யூ ஸி)யில் வாங்கிய மதிப்பெண்கள் என்ன ? தெரிந்தால் யாரவது சொல்லுங்களேன் இந்தப் பேதி தருமரின் மறு பக்கத்தை!
சரி.
இது
போதி
தருமனுக்கு
தெரியுமா?
இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
இந்த
விசயம்
சீனாகாரனுக்கு
தெரியுமா?
போதி
தர்மனின்
வாரிசை
சீனாவுக்கு
அனுப்பிவிடுவோமா?
அந்த
போதி
தர்மரின்
மரபணு
நமது
சின்ன
அய்யாவிடம்தான்
இருக்கிறது
அப்படியா, இவரையும் இவரது அப்பாவையும் சீனாவில் விட்டு விட்டால் ரொம்ப நல்ல இருக்கும்.
அய்யோ...
இவுங்க
அடங்கவே
மாட்டாங்களா??
போதி
தர்மனின்
வாரிசுதான்
அன்புமணி
........ அப்போ
இவரும்
சீனாவுக்கு
போயிடுவாரா?
முரளி இராமச்சந்திரன்
Subscribe to:
Posts (Atom)