Sunday, September 04, 2016

இன்னும் ஒரு சசிகலா - தாங்குமா தமிழ்நாடு?




 சென்ற சில நாட்களாக தமிழ்நாட்டில் ஒரு சசிகலா பெயர்  பத்திரிகைகளில் அடிக்கடி பேசப்படுகிறது. அவரும் ஒரு அரசியல் புள்ளிதான். சென்ற இரண்டு ஆண்டு காலத்தில் மள மளவென்று வேகமாக வளர்ந்தவர் இவர். சசிகலா என்ற பெயர் மேல் போயஸ்கார்டன் எஜமானிக்கு உள்ள மோகமோ என்னவோ இவரை திடீரென்று மேலே மேலே ஏற்றிக்கொண்டே சென்றது. ஆனால் வீழ்ச்சியும் அதே வேகத்தில் இருந்ததுதான் பரிதாபம்.
 
 இரண்டு திராவிடக் கட்சிகளின் கலாச்சாரச் சீர்குலைவையும் ஒழுக்கக்கேட்டையும் அறிந்தவர்களுக்கு இது புதிய சமாச்சாரம் அல்ல.
 செய்தியின் தொடக்கத்துக்குப் போவோம்.  சென்ற மாதக் கடையியில் எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பரப்புச் செய்தி -
அண்ணா திமுக வைச் சேர்ந்த பெண் ராஜயசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா என்பவர் டெல்லி விமான நிலையத்தில் பலர் முன்னிலையில் தி மு ராஜ்யசபா உறுப்பினரான திருச்சி சிவா என்பவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார் நான்கு முறை அறைந்ததாக சசிகலாவே சொன்ன செய்தி ஆனால் திருச்சி சிவா அவருடைய செய்தியை மறுத்து விட்டு அவர் ஒரு முறைதான் என்னை அறைந்தார். என்று பத்திரிகை நிருபர்களீடம் கூறியிருக்கிறார்.  
 
இப்பொழுது எண்ணிக்கை பிரச்னை அல்ல. ஆக மொத்தம் சம்பவம்  நடந்தது உண்மை. ஏன் அறைந்தார் அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் மிக மிக ரகசியமாக இருக்கிறது. அறைந்த சசிகலா சொல்லும் காரணம், என் தலைவி இதயதெய்வம் புரட்சித்தலைவி 
தமிழகத்தின் காவல்தெய்வம் அம்மா அவர்களைப் பற்றி திருச்சி சிவா கேவலமாகப் பேசியதால் அறைந்தேன் என்கிறார் திருச்சி சிவா எங்கே பேசினார் எப்பொழுது இவரிடம் அப்படிப் பேசினார் என்ற விவரங்களை அவர் கூறவில்லை அறை வாங்கிய திருச்சி சிவா சொல்லும் காரணம் வேறாக இருக்கிறது.

இவர்கள் இருவரும் ஜன்மவிரோதியாக அரசியலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்.  அவர்களுக்கு இடையில் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. தொடர்பு இருப்பதை இரு கட்சித் தலைமையும் ஏற்பதில்லை. உறவினர்களாக உள்ள இருவேறு கட்சித் தொண்டர்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வது உட்பட எல்லா தொடர்பும் கண்காணிக்கப்படுகிறது என்ற உண்மை பலருக்கு அதிர்ச்சியூட்டும் ஆனால் இதுதான் உண்மை. டெல்லியிலிருந்து வெளியாகும் எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மற்ற முக்கிய மொழி தினசரிகளிலும் வெளியானதால் இந்த செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.   

சில மாதங்களுக்கு முன் சசிகலா டெல்லியிலிருந்து தொலைபேசியில் தூத்துக்குடியில் உள்ள தன் நண்பர்களுடன் பேசிய பேச்சு பல வீடியோக்களில் ஒளி பரப்பட்டது.  அதில் அவர் தான் மது அருந்தியிருப்பதாகவும் அதனால் இப்போது அதிகம் பேசமுடியாது என்றும் பேசியதாக ஒளீபரப்பானது.. அவர் பேசிய  முறையும் அதை உறுதி செய்வதாகவே இருந்தது.

 திரும்பவும் சில நாட்களுக்குப் பிறகு சசிகலா புஷ்பா திருச்சி சிவாவுடன் அந்தரங்கத்தில் நெருக்கமாக இருப்பது போன்று ஒரு சில போட்டோக்கள் வெளீயாகின. மேலும் வேறு சிலருடன் அவர் அந்தரங்கத்தில் நெருக்கமாக இருப்பதாகவும் போட்டோக்கள் வெளியாகின. விமான நிலைய சம்பவம் இதோடு தொடர்பு கொண்டதாகவும் பேசப்படுகிறது.

 விமான நிலைய சம்பவத்தை தொடர்ந்து மறுநாள் ராஜ்யசபாவில் நடந்ததுதான் இங்கே மிக முக்கியம். சசிகலா புஷ்பா திடீரென்று சபையில் எழுந்திருந்து தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சென்னையில் போயஸ் கார்டனில் தான் சிறை வைக்கப்பட்டதாகவும் தன்னை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அதற்காக சென்னையிலிருந்து டெல்லிக்கு சிறை வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டதாகவும் கூக்குரலிட்டார்.  அவர் எதையும் பேசமுடியாமல் அவருடைய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே ஆட்சேபம் செய்து இடைமறித்தார்கள். சபாநாயகர் கடுமையான முயற்சி செய்து அவர் பேச நேரம் கொடுத்து மன்றத்தை அமைதிப்படுத்தினார். சசிகலா தொடர்ந்து பேசும்போது முதல் அமைச்சர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும் தான் போயஸ் காரட்னில் மேலும் பலரால் தாக்கப்பட்டதாகவும் அவருடைய கட்சியைச் சேர்ந்த தம்பிதுரை (லோக்சபா உதவிசபாநாயகர் )தான் தாக்கப்படும்போது அமைதியாக பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார். அவருடைய பத்து நிமிடப் பேச்சு கூக்குரலாகவும், அழுகையாகவுமே இருந்தது. தன்னுடைய பதவிக்காலத்தில் இப்பொழுதுதான் முதன் முதலாக அவர் பேசியிருப்பதால் அவருடைய இலக்கணம் இல்லாத மோசமான ஆங்கிலத்தைப் பற்றி இங்கே குறிப்பிடவேண்டாம். தமிழ்நாட்டில் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லையென்றும் மத்ய அரசாங்கம் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
 
முதல் நாள் டெல்லி விமான நிலையத்தில் இதயதெய்வம் என்று அவரால் பேசப்பட்ட காவல்தெய்வம் அம்மா சசிகலாவை கட்சியிலிருந்து வெளியேற்றி செய்தி வெளியிட்டார்

இந்த சம்பவத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தி.மு. தரப்பிலிருந்து எந்த செய்தியும் இல்லை. அண்ணா தி.மு. ஆட்சியில் தன் கட்சித் தொண்டனுக்கு எறும்பு கடித்தால் கூட ஏழு பக்க அறிக்கை விடும் கலைஞர் வாயே திறக்கவில்லை. இத்தனைக்கும் தாக்கப்பட்டிருப்பது அவருடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்.

சசிகலா ஒரு வகையில் துணிச்சல்காரர்தான். போயஸ் கார்டனுக்குள் புரட்டி எடுக்கப்பட்ட பலர் இன்னும் வாயே திறக்கவில்லை.பி.ஜே.பி கட்சியிலிருந்து திடீரென்று அம்மா கட்சிக்கு மாறி ராஜ்யசபா உறுப்பினரான ஒருவர் பதவிக் காலம் முடிந்த பின்பு கூட வாய் திறக்கவில்லை ஆடிட்டர்கள், வக்கீல்கள் கட்சித் தொண்டர்கள் பல முன்னாள் அமைச்சர்கள் கூட இந்த கதிக்கு ஆளானார்கள் யாரும் இன்றுவரை வாய் திறக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் தன் தலைவரைப் பற்றி பேசியதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு விசுவாசியாக இருந்த சசிகலா திடீரென்று தன் கட்சித் தலைவரிடமிருந்து ஆபத்து இருப்பதாகவும் தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லையென்றும் பாராளுமன்றத்தில் கூக்குரலிடுகின்றார் என்றால் அதன் பின்னணீயில் நிச்சயமாக ஏதோ இருக்க வேண்டும்.

சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாவட்ட்த்தில் உள்ள மணல் கொள்ளை மபியாக்களின் பாதுகாவலாராகவும் அவர்களுக்கான தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கான ஏஜண்டாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் உண்மையில் அவர்களுடைய ஆதரவில்தான் அம்மாவின் துணையைப் பெற்று ராஜ்யசபா உறுப்பினராக முடிந்தது.தூத்துக்குடி நகர மேயராகவும் வலம் வந்தார். வசூல் பணத்தை கமிஷன் போக மீதத் தொகையை சரியாக போயஸ் கார்டனுக்குச் செலுத்துவதில் பல குறைபாடுகள். மாவட்ட அளவில் அதிகாரிகளை மிரட்டி தன் காரியத்தை சாதிப்பதில் அவருக்கு ஏற்கெனவே கெட்ட பெயர்.. கட்சி வட்டாரத்தில் நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொண்டார். பல வருடமாக செயல்படும் கட்சி முன்னணி ஊழியர்களுக்குக் கிடைக்காத ராஜ்யசபா பதவி சசிகலாவுக்குப் போனதை கட்சி வட்டாரத்தில் பலரால் தாங்கிகொள்ள முடியவில்லை. மாவட்ட முக்கிய ஊழியர்கள் சேர்ந்து பறித்த குழியில் ஏற்கெனவே விழுந்துவிட்டார். அதன் எதிரொலிதான் வெளியான வீடியோக் காட்சிகள்.
இப்பொழுது டெல்லியில் உட்கார்ந்து கொண்டு சசிகலா பேசும் அரசியல். அவர் நிருபர்களுக்குக் கொடுக்கும் பேட்டிகள் அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது ஏற்கெனவே முன்ஜாமீனுக்கு மனுக் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் கால் வைத்தால் ,தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் அவர் பேச்சில் தெரிகிறது.
தமிழ்நாட்டில் சசிகலா புஷ்பா மீது பல வழக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல். ;லர் காவல்துறையிடம் புகார் கொடுத்த  செய்தி வந்து கொண்டிருக்கிறது. இரண்டு பெண்கள் கொடுத்திருக்கும் புகார் மிக முக்கியம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாங்கள் இருவரும் சசிகலா வீட்டில் ணிப்பெண்ணாக வேலை  செய்ததாகவும் அப்பொழுது சசிகலா தங்களை பாலியல் தொந்திரவு  செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார்கள்.அதோடு மட்டும் அவர்கள் நிற்கவில்லை. சசிகலாவின் கணவரும். அவருடைய மகனும் தங்களை பாலியல் தொந்திரவு செய்தார்கள் என்று கூறியிருக்கிறார்கள். சசிகலாவின் எழுபது வயதுத் தாயாரும் தங்களை பாலியல் தொந்திரவு செய்ததாக அவர்கள் கூறியிருப்பது புகாரின் உச்சகட்டம்.
 
ஒரு அரசாங்க கண்டிராக்ட் வாங்கித் தருவதாக்கூறி தன்னிடம்   சசிகலா 20 லட்சம் ருபாய் பெற்றுக் கொண்டதாகவும் னால் அவர் சொன்னபடி காண்டிராக்ட் வாங்கித் தரவில்லை என்றும் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார் இப்படியாக பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது
,குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத பல வழக்குகளை காவல்துறை தூசி தட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு கவுன்சிலர் கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு இப்படியாக பல வழக்குகளில் சசிகலாவை தொடர்பு படுத்தி வழக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது எதுவும் இல்லையேல் காவல்துறையிடம் கஞ்சா வழக்குகள் நிறையவே கைவசம் உண்டு…..   

 பல வழக்குகளில் அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்ப்பு கொடுத்த நீதிபதி,க்கு பாடம் போட்டுக் காட்ட அவருடைய அப்பாவி மருமகனையே கஞ்சா வழக்கில் மாட்டிவிட்ட பெருமை அம்மாவின்  அரசாங்கத்துக்கு உண்டு. அலறி அடித்துக் கொண்டு வேறு மாநிலத்து உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற;ல் வாங்கிக் கொண்டு ஓடிப் [போன அவர் ஓய்வு பெற்ற பிறகும் தமிழ்நாட்டுப் பக்கம் வர தயக்கம் காட்டுவதாகக் கேள்வி

கேரளாவைச் சேர்ந்த இரண்டு வியாபாரிகள் லஞ்சம் தர மறுத்ததால் கைது செய்து அவர்கள் மீது கஞ்சா வழக்கு தொடுத்தது மட்டுமல்ல. அவர்களை 230 நாட்கள் சிறையில் வைத்து பழி வாங்கியது அம்மாவின் காவல்துறை. கடைசியில் குற்றம் நிருபிக்கப்படாமல் அவர்கள் விடுதலை ஆனார்கள். 230 நாட்கள் சிறை வைக்கப்பட்டதற்காக நஷ்டஈடு கோரி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார்கள் 12 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க உயர்நீதிமன்றம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கொடுத்திருக்கிறது.

தீர்ப்பின்படி பணத்த வாங்க அவர்கள் உயிரோடு இருப்பார்களா என்று நிச்சயம் சொல்லமுடியாது. பல வழக்குகளீல் தீர்ப்பான  நஷ்டஈட்டுத் தொகை பல வருடங்களாக கொடுக்கப்படாமல் இன்றும் நிலுவையில் இருக்கிறது

இந்த நிலையில் சசிகலாவும் கஞ்சா வழக்கில் மாட்ட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரம் சொல்லுகிறது தர்மதேவதை ஆட்சியில் கிடைத்ததை வாங்கிக்கொண்டு காலத்தை ஓட்டாமல் எதை,எதையோ செய்யப் போய் சசிகலா வசமாக மாட்டிக் கொண்டார் என்று தோன்றுகிறது.

இவர் தொடர்பாக பல மசாலா செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டது.. கிசுகிசு பத்திரிக்கைகளுக்கு நிறைய செய்திகள் காத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் கட்சிகளின் தலைவர்களின் யோக்கியதை சந்தி சிரிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் இதில் யாருக்கும் வெட்கம் இல்லை.
                                     - மு.கோபாலகிருஷ்ணன்










.   .  . .