விண்ணை மூடிய மேகம்.
மழை வந்தா வரும்.
வராமலும் போகும்.
வானிலை ஆய்வு மையம் தயார் பண்ண வானிலை அறிக்கை மாதிரி அருமையான weather. சுதர்ஷண
சக்கரம்
வலது கையிலும், ஒலிக்கும் பாஞ்சசன்னியம் இடது கையிலும் மாதிரி ஒரு கையில hand bag’ கும் இன்னும் ஒரு கையில shopping bag'கும் தாங்கிய மக்கள். ஸ்ரீமன் நாராயணன் கூட கை வலிச்சா சங்கை கீழ வச்சுடுவார்...
ஆனா ஷாப்பிங் bags'யும் பெண்ணின் கரங்களையும் பிறிக்கவே முடியாது'னு சொல்லற மாதிரி, sowcarpet streets'ல கால் தேய நடந்து கை ரேகை அழிய ஷாப்பிங் செய்யும் அந்த பெண்களின் கூட்டதுல தான் அந்த அம்மாவ பார்த்தேன். Silent
Observer. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும் அலட்டலில்லாத மௌனம். எனக்கு curiosity.
நீங்க யாருனு போய் கேட்டேன்.
"நான் இந்த மேல் மாடில இருக்கற கடையோட tailor. இப்பொ எனக்கு break. அதான் கீழ வந்து நின்னுட்டு இருக்கேன். இங்க வந்து நின்னா எதாவது தோனும்...கதையா எழுதி paper'ல வச்சுக்குவேன்"னு சொன்னார்.
"இன்னைக்கு என்ன எழுதினீங்க?" இது நான்.
ஒரு வெள்ளை paper'இல் ஏதோ கிறுக்கிய எழுத்துக்கள். எடுத்து கொடுத்தார். சின்ன கதை மாதிரி இருந்தது.
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு
gatekeeper'அ ஒரு ஆள் வேலை செஞ்ஜான். எப்போதும் ரொம்ப நிதானமா சந்தோஷமா வாழ்க்கையை நடத்தினான் அவன். ஒரு நாள் அந்த ராஜா அவன் திறந்து மூடும் gate'க்கு பக்கத்துல ஒரு மூட்டையை கொண்டு வைத்தார். அதை வந்து பாத்த அவன், பையை பிரிச்சான். அதுல 99 தங்க காசுகள் இருந்துது. விழுந்து அடிச்சு...உருண்டு புறண்டு...மிச்சம் இருக்கற ஒன்ன தேடினான்...எங்கயும் காணல. எப்படியாவது அந்த ஒரு தங்க காச சேர்க்கனம்'னு இரவு பகல் பாக்காம அலைஞ்சான். சரியா சாப்படல, தூங்கல. அவன் கிட்ட இருந்த 99 காச பத்தி அவன் கவலை படல. இல்லாத ஒன்னு. அத தேடி தேடி சுத்தறான். ஓடிகிட்டே இருக்கான்.
அவ்வளவு தான் எழுதி இருந்துது.
“எனக்கு time ஆச்சு நான் வரேன்”னு சொல்லிட்டு அந்த அம்மா கிளம்பிட்டாங்க.
ரொம்ப புதிரா இருந்துது எனக்கு. ஏதோ metaphorical. இதுக்கு
என்ன விளக்கம் கொடுக்க முடியும்?
தெரிஞ்சா சொல்லுங்க. மீண்டும் சந்திக்கும் வரை, vgr