Tuesday, October 07, 2014

பதிவு எண் ௬



விண்ணை மூடிய மேகம்.
மழை வந்தா வரும்.
வராமலும் போகும்.
வானிலை ஆய்வு மையம் தயார் பண்ண வானிலை அறிக்கை மாதிரி அருமையான weather. சுதர்ஷண  சக்கரம் வலது கையிலும், ஒலிக்கும் பாஞ்சசன்னியம் இடது கையிலும் மாதிரி ஒரு கையில hand bag’ கும் இன்னும் ஒரு கையில shopping bag'கும் தாங்கிய மக்கள். ஸ்ரீமன் நாராயணன் கூட கை வலிச்சா சங்கை கீழ வச்சுடுவார்... ஆனா ஷாப்பிங் bags'யும் பெண்ணின் கரங்களையும் பிறிக்கவே முடியாது'னு சொல்லற மாதிரி, sowcarpet streets' கால் தேய நடந்து கை ரேகை அழிய ஷாப்பிங் செய்யும் அந்த பெண்களின் கூட்டதுல தான் அந்த அம்மாவ பார்த்தேன். Silent Observer. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும் அலட்டலில்லாத மௌனம். எனக்கு curiosity.
நீங்க யாருனு போய் கேட்டேன்.
"நான் இந்த மேல் மாடில இருக்கற கடையோட tailor. இப்பொ எனக்கு break. அதான் கீழ வந்து நின்னுட்டு இருக்கேன். இங்க வந்து நின்னா எதாவது தோனும்...கதையா எழுதி paper' வச்சுக்குவேன்"னு சொன்னார்.
"இன்னைக்கு என்ன எழுதினீங்க?" இது நான்.
ஒரு வெள்ளை paper'இல் ஏதோ கிறுக்கிய எழுத்துக்கள். எடுத்து கொடுத்தார். சின்ன கதை மாதிரி இருந்தது.
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு gatekeeper' ஒரு ஆள் வேலை செஞ்ஜான். எப்போதும் ரொம்ப நிதானமா சந்தோஷமா வாழ்க்கையை நடத்தினான் அவன். ஒரு நாள் அந்த ராஜா அவன் திறந்து மூடும் gate'க்கு பக்கத்துல ஒரு மூட்டையை கொண்டு வைத்தார். அதை வந்து பாத்த அவன், பையை பிரிச்சான். அதுல 99 தங்க காசுகள் இருந்துது. விழுந்து அடிச்சு...உருண்டு புறண்டு...மிச்சம் இருக்கற ஒன்ன தேடினான்...எங்கயும் காணல. எப்படியாவது அந்த ஒரு தங்க காச சேர்க்கனம்'னு இரவு பகல் பாக்காம அலைஞ்சான். சரியா சாப்படல, தூங்கல. அவன் கிட்ட இருந்த 99 காச பத்தி அவன் கவலை படல. இல்லாத ஒன்னு. அத தேடி தேடி சுத்தறான். ஓடிகிட்டே இருக்கான்.
அவ்வளவு தான் எழுதி இருந்துது.
“எனக்கு time ஆச்சு நான் வரேன்னு சொல்லிட்டு அந்த அம்மா கிளம்பிட்டாங்க.
ரொம்ப புதிரா இருந்துது எனக்கு. ஏதோ metaphorical. இதுக்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும்?
தெரிஞ்சா சொல்லுங்க. மீண்டும் சந்திக்கும் வரை, vgr

பழைய பஞ்சாங்கம்

தமிழ் எண்களை  disguised form'ல வேற மாதிரி எழுதி தலைப்பு தந்திருக்கிறேன்.... But ஏன் பழைய பஞ்சாங்கம்'னு கேக்கிறீங்க இல்லையா...இந்த முறை முன்னொரு காலத்துல என்னோட blog'ல எழுதின ஒரு series... அத இங்க கொஞ்சம் தமிழ் சங்க audience'காக update பண்ணி எழுதி இருக்கேன்... மேலே படிக்கவும்...இது சாம்பு'னு சொல்லப்படற ஒரு அதிபுத்திசாலியோட நேர்காணல்கள்...சாம்புவ ஒருத்தர் பேட்டி காண்கிறார்...Q&A session மாதிரி'னு சொல்லலாம்... ஒருத்தர் சாம்புவ கேள்வி கேக்கறார்...அதுக்கு அவர் என்ன பதில் சொல்றார்ங்கற மாதிரி அமைச்சு எழுதினது...satire'னு கூட வச்சுக்கலாம்..

சாம்புவும் ஒருத்தனும்

ஒரு மாலை இள வெயில் நேரம் கடலோரமா வேர்கடலைய சாப்டுண்டே நடந்துண்ட்ருந்தார் நம்ம சாம்பு. அப்போ அந்த பக்கமா போன ஒரு ஆள் ஒரு நிமிஷம் இவர பாத்து நின்னுட்டு...
(கேள்வி): "உங்களிடம் ஒன்று கேட்கலாமா?"னு சொன்னான்.
நம்ப சாம்புவும் தலை ஆட்டினார்.
முட்டாள்தனமாய் பேசுபவர்கள்...என்ன பேசுகிறோம் என்று புரியாமல் உளறுபவர்கள்..
தனக்கு துளி கூட தெரியாத ஒரு விஷயத்தை பற்றி அபரிவிதமான தன்னம்பிக்கையுடன் வாதாடுபவர்கள்...எவனோ எங்கேயோ சொன்னதை தன் சொந்த கண்டுப்பிடிப்பு போல் காண்பித்து பிதற்றுபவர்கள்...சிரிக்க வைப்பதாக எண்ணி மொக்கை வம்படிப்பவர்கள்...
சுய புகழ்ச்சியே மையப் புள்ளியாகக் கொண்டு சுற்றி சுற்றி பேசுபவர்கள்...
சம்பந்ததாசம்பந்தம் இல்லாமல் வாயடிப்பவர்கள்...
இது போன்றவர்கள் இந்த உலகில் உண்டா? னு சாம்பு கிட்ட அந்த ஒருத்தன் கேட்டான்.
அதுக்கு சாம்பு சொன்னார்.
"அடேய் முட்டாளே...போய் 'என்ன_பெயர்வேன்னா_வைக்கலாம்.blogspot.com' மயும் 'உலகத்தின்_கடைசி_ப்லாக்.wordpress.com' மயும், ‘www.Facebook.com’ மயும் பாருடா...தெரியும்...".

(கேள்வி): Sir, கவிதை எழுதி கொல்லும் மக்களை பற்றி தங்கள் கருத்து என்ன?
சாம்பு : அட! அதை ஏன்யா கேக்கற?...இப்படி தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்..."நானும் எழுதுவேன்"னு ஒரு தலைப்பில எழுதினான்...

காவன்னாவில் கவிதை எழுதச் சொல்லி
கண்மணி நீ கட்டளை இட்டாய்.
கேள்வியாய் ஏன் காவன்னா? என்றால்
கவிதா என் பெயர் என்றாய்.

கண்கள் இரண்டால் நீ பார்த்தால்
கடற்கறை செல்ல ஆவல் பெருகுதடி.
கால் கடுக்க நடந்த பின்னும்
கால் கிலொ கூட குறையலடி
படிச்சப்றம் தான் தெரிஞ்சுது தமிழ் இலக்கணத்துல இந்த மாதிரி கவிதை எழுதுதரவனுக்கு பிடித்தது எதுகையும், மோனையும் மட்டும் தான் போலருக்கு'னு...

(கேள்வி): Sir,வெளி நாட்டு வாழ் இந்தியர்களை பாத்தா உங்களுக்கு என்ன கேக்கத்தோணும்?
சாம்பு : பெட்டி படுக்கய கட்டி வந்த வழியே எப்போ திரும்ப போறீங்கன்னு தான்...
"Declaration of Independence"அ கண்ணுல தண்ணி வச்சுண்டு பாக்கும் இந்த பிறவிகள், அவனோட சுதந்திர தினத்துக்கு "ஜன கன மன" பாட மறந்துடரானாம். சொல்லி நிறைய கவலை படறான் எனக்கு தெரிஞ்ச Vandalur Viswanathan...இப்போ இருக்கறது Wisconsin'ல...
சரி திரும்ப போயேன்டா உன்ன யாரு தடுக்கறானாக்கா.. 'போறத்த பத்தி இல்ல Sir...கொழந்தைகளுக்கு ஒத்து வரல...ஊரோட ஒத்து போற stigma இருக்கு..அதனால நாங்க போக முடியல'னான்.
ஆனா நிஜமென்ன தெரியுமோ...நம்ம ஊருக்கு போய் பணத்த லட்சத்துல செலவு பண்ணி பத்மா சேஷாத்ரி- போடறத்துக்கு பதில்..அந்த பணத்த ஒரு state of art Garden- invest பண்ணினா...வந்து போர guests கணேசனும், செல்வியும் நிறைய பாராடடுவளோன்னோ' அதான்.

(கேள்வி): உலக தலைவர்களெல்லாம் இப்பொ எந்த ப்ரச்சனைய resolve பண்ணறதுல கவனம் செலுத்தனம்? 100 நாட்கள்ல மோடி எத செய்யல…என்ன செஞ்சிருக்கனம்'னு நீங்க நினைக்கிறீங்க?
சாம்பு : What I want them to do is to empower the women in the country, to unleash the power of these women, I mean we talk about being a superpower...

(கேள்வி): Let me be very specific Mr.Sambu.  What should the world leaders do to resolve the current issues?
சாம்பு : I think women are the backbone of any country and women need to be empowered.

(கேள்வி): இது முடியாத தொடர் கதை Sir. கடைசியா உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யாருனு சொன்னீங்கன்ன...
சாம்பு : இத நான் சொல்றதுனாலே உலகில் வன்முறை ஒழியும்-னா சொல்லுங்க... இல்ல ebola'வுக்கு vaccine கிடைக்கும்னா...சொல்லுங்க... சொல்றேன்...

(கேள்வி): ?@$#?!!!!?? ?@$#?!!!!??

மீண்டும் சாம்புவுடன் சந்திக்கிறேன். நன்றி. வண்க்கம்.

-vgr

Monday, October 06, 2014

ஹலோ, அபிதாபியா ? ...

Image credit: Google
ஹலோ, அபிதாபியா ? ...

ஏய் ... லூஸு ... ஆஃப்கானிஸ்தானுக்கு ஃபோன் பன்னிட்டு, அபிதாபியானு கேக்குற ... கட்டத்தொரைக்கிட்ட மாட்டுன கைப்புள்ள கத உனக்கும் ஆகிடும் சாக்றத ... என்றது கரகர குரல் மறுமுனையில்.

தொடைகள் கிடுகிடுக்க, கால்களை ஸ்டெடியாக வைத்துக் கொண்டு, ஆடும் கைகளையும் அடக்கி, ரிஸீவரை கெட்டியாகப் பிடித்தபடி, இரண்டு மூன்று முறை மென்று விழுங்கி ... நா, சாரினா, உங்க அட்ரெஸ் வெரிஃபய் பன்னனும் அதான் ... என்று இழுத்தான் ரங்கன்.

க்ரெடிட் கார்டா ?

இல்லனா

சோப்பு சீப்பு விளம்பரம் .....

நா ...

என்னடா நொன்னா ...

ரங்கன் விளக்கி சொல்கிறான் ... மறுமுனை கரகர குரல், 'அப்டியா ... ஆகட்டும் ... நல்லது ...எங்களுக்கும் டீஸர் போட்டு ஒலகத்த பயமுறுத்த வசதியா இருக்கும்' என்று ஹாஹாகித்து, 'நம்பர் நாலு ....' என்று ஆரம்பித்து பார்த்திபன் ஸ்டைலில் விலாசத்தை சொல்லியது.

நா, ஆஃப்கானிஸ்தான்ல பிள்ளையார் கோயிலா ?

டேய் திரும்பத் திரும்பத் தொல்ல பண்ற நீ... இங்க போன்ல சுட்டேனா அங்க நீ பிஸ் பீஸ் ஆயிடுவா ...

...

ஆமான்னா, மொத்தமா கட்டி கொண்டாந்து உங்க கேம்ப் நட்டநடுல ட்ராப் பன்னிடரேன்னா ...

ஆமான்னா ... ஆமான்னா ... திரும்பிப் பார்க்காம போய்டறேன்னா ....

டொக் என்று மறுமுனையில் போன் துண்டிக்கப்படுகிறது.

'ஆமா, ஒரு ஃபோன் ப்ன்றதுக்கே இந்த ஆட்டம் ஆடறியே, நீ எல்லாம் இந்த டாஸ்க்க எப்படி நிறைவேத்தப் போற' என்றான் ரங்கனிடம் நண்பன் விச்சு.

'இல்லடா ... என்ன ஆனாலும் பரவாயில்ல. இத்த பன்னா நாடு சுபிச்சம் அடையும்.   மக்களும் அவங்கவங்க வேலயப் பாப்பாங்க.  அழுகை குறையும் ... பொய் பித்தலாட்டம், சூது குறையும் ... வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே போகிற திருட்டுக்கள் குறையும் ... அவன் பொண்டாட்டிய இவன் இழுக்காம இருப்பான் ... இவன் பொண்ட்டாட்டிய அவன் இழுக்காம இருப்பான் ... அண்ணனும் தம்பியும் நண்பர்களா இருப்பாங்க ... நாத்தனார் கொழுந்தனார் நல்லவங்களா இருப்பாங்க ... உறவுகள் சிதையாம இருக்கும் ...அலுவலகத்துல காதல் செய்யாம வேல செய்வாங்க ... படிக்கிற வயசுல பிள்ளைங்கலாம் பள்ளிக்குப் போய் படிக்கும் ... சைல்ட் லேபர் குறையும் ...கிராமத்துல வெட்டுக் குத்து கொறஞ்சு நிம்மதியா இருப்பாங்க ... இதிகாசம் என்ற பேர்ல அடிக்கற ஜல்லி கொறயும் ... ஊரு நல்லா இருக்கும் ... வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுனு எல்லாம் நல்லா இருக்கும் ...மொத்தத்துல‌ நல்ல மழை பெய்யும் ...'னு ரங்கன் சொல்லிமுடிக்க, கையில் சோடாவோடு அருகில் இருந்தான் விச்சு.

நல்லாத் தான் இருக்கு, 'ஐ ஏம் வித் யூ, ரங்கா' என்று விச்சு சொல்ல, இருவரும் இருக்கப் பிடித்தனர் கரங்களை, டாஸ்க்கை நிறைவேற்ற‌ ...




Wednesday, September 24, 2014

தயிர்சாதம் (டே!)

எதெதுக்கோ 'டே (நாள்)' வைத்துக் கொண்டாடும் நாம், தயிர்சாதத்திற்கும் ஒரு டே வைத்துக் கொண்டாடவேண்டாமா?!.  இதை தமிழக முதல்வர் கவனதுக்குக் கொண்டு சென்று, ஒரு 'டே'வை உருவாக்கி, அதை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  ஏனெனில் நாம தான் உலகெங்கும் வியாபித்திருக்கிறோமே!  பத்தாததற்கு வெள்ளையப்பர்கள் பங்குக்கும் தயிரை டப்பா டப்பாவாக உள்ளே தள்ள ஆரம்பித்திருக்கிறார்களே!  'யோக'ர்ட்னு பேர் போட்டதுனாலேயோ என்னவோ, இத்த சாப்பிட்டா யோகா பண்ணதுக்கு சமம்னு நெனச்சுட்டார்களோ என்னவோ!

'இட்லி', 'தயிர்சாதம்' என்றால் நம்மில் பலருக்குப் பிடிப்பதில்லை.  அது ஒரு பழங்கால உணவு என்றும், நம் தகுதிக்கு ஏற்றது அல்ல என்றும் நினைப்பவர் உண்டு.
Photo Credit: Google
இந்த எண்ணிக்கை எனது நண்பர்கள் வட்டத்திலேயே அதிகம்.  பல காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம்.  ஆனால், இவர்கள் இதன் அருமை தெரியாதவர்களே!  பள்ளி காலம் முதல் கல்லூரி வரை பிரம்ம முகூர்த்ததில் உலை வைத்து கதிரவன் வருகைக்கு முன்னரே டப்பா டப்பாவாக எங்களுக்கு கட்டுசாதம் கட்டி அனுப்பும் எனது தாயாரின் கைவண்ணத்தில் வாரத்திற்கு மூனு நாளாவது நம்ம ஹீரோ தயிர் சாதம் இருப்பார்.  இது பல வீடுகளில் நான் கண்டதுண்டு.  தாய்மார்களுக்கு சுலபம் என்றாலும், நம் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் உணவும் கூட. என்னைப் போல சோறுகட்டிச் செல்லும் கூட்டத்தில், இதுபோல பலரின் மதிய பிரதான உணவு தயிர்சாதம்.

அப்படி என்னதான் இவற்றில் ஈர்ப்பு எனப் பார்த்தால், இவற்றிற்காக தொட்டுக் கொள்ள வைக்கும் பதார்த்தம் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம்.  இட்லிக்கு ஒரு சாம்பார், அவியல், தேங்காய் சட்னி, மிளகாய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, மல்லிச் சட்னி என அடுக்கிக் கொண்டே போவது போல, தயிர் சாதத்திற்கும், மோர் மிளகாய், உருளைக் கிழங்கு மசாலா பொரியல், வாழைக்காய் பொரியல், தக்காளிப் பருப்புப் பச்சடி, வெண்டைக்காய் பச்சடி, சுண்டைக்காய்ப் பச்சடி, பலவகை வற்றல்கள், இது எதுவுமே இல்லை என்றால் ஒரு விரல்நுனி ஊறுகாய்  என கல்யாணவீட்டு மளிகை சிட்டை கணக்கா அடுக்கலாம்.

Photo Credit: Thulasi teacher
வீடுகளில் செய்வது போக தயிர்சாதத்திற்கென பேர் போன (?!) கோயில் உண்டக்கட்டிகளும், உணவகங்களும், நம் நினைவிற்கு வருபவை.  எங்க ஊரு பெருமாள் கோயில் தயிர்சாதம், அப்படியே நெய் வடியும்.  பொங்கலில் போடுவதற்கு பதில் தயிர்சாதத்தில் ஊற்றியது போல இருக்கும்.  கடுகும், உளுந்தும், வரமிளகாயும் போட்டு தாளித்து, அப்படியே ஒரு கை வில்லல் நம் கையில் போடுவார் பெருமாள் கோயில் அர்ச்சகர்.  அப்படியே வழுக்கிட்டுப் போகும் நம் தொண்டைக்குள்.  பிறகும் உள்ளங்கையில் நெய் வடியும்.  இதுபோக சென்னை போன்ற பெருநகர உயர்தர உணவகங்களில், தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டு பலநூறுகள் செலவழிப்போரும் நிறைய உண்டு.

தேச வரையரையின்றி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு தயிர்சாதம்.  அப்பேர்ப்பட்ட தயிர்சாதத்திற்கு டே போடுறோமோ இல்லியோ, இப்ப ஒரு பதிவு போட்டாச்சு :)