Sunday, April 01, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 9

பித்தனின் ஒன்பதாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/03/9.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Saturday, March 31, 2007

உள்ளிவாயன் பெருங்காயடப்பா

சமீபத்தில் ஐகாரஸ் பிரகாஷின் வலைப்பதிவில் ஒரு கவிதையைப் பார்த்துவிட்டு அவர் எழுதியது என்று நினைத்து ஒரு பின்னூட்டம் விட்டேன். அந்த கவிதையை ஒரு ரிச்மண்ட்காரர் எழுதியிருக்கிறார். அவர் பெயர் உள்ளிவாயன் பெருங்காயடப்பா வாம்.

கூகுளாண்டவரிடம் முறையிட்டாலும்
சரியான விடை கிடைக்கவில்லை.

இன்னொரு வலைப்பதிவில் மூக்குசுந்தர் என்பவர் இப்படி எழுதியிருந்தார்:
(உள்ளிவாயன் பெருங்காயடப்பா என்கிற ஒட்டக்கூத்தராயன் என்கிற ரங்கபாஷ்யம் என்கிற சுவாரசியமான முகமூடியைப் போட்டுக்கொண்ட ***************னின் லீலை.

மனிதர் மர்ம மனிதராயிருக்கிறார். யாருக்காவது அவரது விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நான் சற்று நிம்மதியாகத் தூங்குவேன் :-)


திருவாளர் உள்ளிவாயர்கூட எழுதலாம். அவரது ரகசியத்தை காப்பாற்றுவேன்.

Wednesday, March 28, 2007

புச்சு கண்ணா புச்சு

நபர் 1: நல்லா பாட கத்துக்கிட்ட சிஷ்யனுக்கு குரு/பாகவதர்
சொல்லிக்கொடுக்கிற கடைசி பாட்டு என்ன தெரியுமா?
நபர் 2: தெரியாதே! என்ன பாட்டு?
நபர் 1: "பாட்டும் நானே பாவமும் நானே பாடா உன்னை
நான் பாட வைத்தேனே"

ரசிகர் 1: இந்த கலை நிகழ்ச்சி என்னங்க புதுமையா இருக்கு?
ரசிகர் 2: எப்படி சொல்றீங்க?
ரசிகர் 1: முதலில் வந்தவங்க "பார்த்தால் பசி தீரும்" அப்படீன்னு
பாடினாங்க.
பிறகு வந்தவரு "ஓடி ஓடி உழைக்கணும்" அப்படீன்னு பாடினாரு
கடைசியா வந்தவங்க "நலந்தானா நலந்தானா" அப்படீன்னு
பாடினாங்க
ரசிகர் 2: ஓ அதுவா? இந்த ப்ரோக்ராமை ஸ்பான்ஸர் பண்றவங்க
லோக்கல் ஹாஸ்பிடல், டாக்டர்கள் தான். அதான் இப்படி.

சபா செகரட்ரி: பாகவதர் இனிமே சன்மானம் வேண்டாம்னுட்டாரு
சபா ப்ரெஸிடெண்ட்: ஓ ரொம்ப நல்லது. பகவதர் நல்ல இதயம் படைத்தவர்.
சபா செகரட்ரி: அதான் இல்லை. அவருக்கு ரொம்ப கெட்ட இதயம்
சபா ப்ரெஸிடெண்ட்: என்ன சொல்றீங்க?
சபா செகரட்ரி: தேங்காய் மூடி கச்சேரி பண்ணி பண்ணி ஒத்துக்கலையாம்.
ஹை கொலெஸ்ட்ராலாம்.

பேர் என்னடா பேர் பேர்?

எல்லோரும் படித்த படிப்பிற்கேற்ற வேலை பார்ப்பவர்கள் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. எனக்கு தெரிந்தவர் ஒருவர் கஷ்டப்பட்டு டாக்டர் படிப்பு படித்து டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் IAS தேர்வு எழுதி பாஸ் பண்ணி கலெக்டராக இருக்கிறார். Charted Accountancy, Company Secretary எல்லாம் படித்து பாஸ் பண்ணிவிட்டு மலேஷியாவில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதிக்கொண்டிருக்கிறார் என் மற்றொரு நண்பர். நான் என்ன படித்துவிட்டு இப்படி ப்ளாகியாகி குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? என் கதை பெரிய கதை. கூடிய விரைவில் என் சுயசரித்திரத்தை எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.
இப்படி இவர்களைப்பற்றி சிந்தித்துக்கோண்டிருந்தேன். அப்போது ஒருவரின் பெயருக்கேற்ற வேலை என்னவாக இருக்கலாம் என்று யோசித்த போது உதித்த சில பெயர்களை கீழே அடுக்கியுள்ளேன்.
(குறிப்பு: உங்கள் பெயர் இந்தப்பட்டியலில் இருந்து உங்கள் மனம் நோகும்படி இருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். இது ஒரு கற்பனையே)

பெயருக்கேற்ற வேலை
பலராமன் - பளு தூக்குபவர் (Weight Lifter)
சிங்காரம் - Hair Stylist
சாரதி - Driver
பார்த்தசாரதி - ரொம்ப தெரிந்த driver
குகன் - Ship captain
சம்மந்தம் - கல்யாண தரகர்
வளர்மதி - டீச்சர்
சிவப்பிரகாசம்/ஞானபிரகாசம் - லைட்பாய்
மார்க்கண்டேயன் - Life Insurance Agent
கார்மேகம்/நீலமேகம் - Weatherman (Meteorologist)
சாமிகண்ணு - Eye Doctor
அப்பு - Painter
தாண்டவராயன் - Long Jump/High Jump athlete
பாரி - Loan Officer
தச்சு(தட்சிணாமூர்த்தி) - Carpenter
வாதிராஜ் - Lawyer
பஞ்சவர்ணம் - Artist
பவுன்ராஜ் - Goldsmith
பன்னீர் - Perfume shop owner

பெயருக்கு பொருந்தாத வேலை
சர்கஸ் கலைஞர் - ஆடியபாதம்
பைனான்சியர் - பிச்சை
Fireman - பஞ்சு
Carpet shop owner - கரிகாலன்
Olympic runner - நடராஜன்
Public speaker/Orator - சாந்தகுமார்

(குறிப்பு: இதற்கு மேலும் யோசித்து என் மண்டை காய்ந்து விட்டது - உங்களால் முடிந்தால் பட்டியலை நீட்டவும்)

Monday, March 26, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 7

ஸ்பைவேரில் இத்தனை வகைகளா?

ஸ்பைவேர்-நம் செயல்கள் அத்துணையையும் நாம் அறியாமல் ஒற்றறியும் மென்பொருள் .

ஆட்வேர்- நாம் கணினியை இயக்கும் போதெல்லாம் விளம்பரங்களை காட்டி எரிச்சலடைய வைப்பது .

ஸ்னூப்வேர்- வேறு ஒருவருக்காக கணிணயில் நாம் செய்யும் செயல்கள் அத்துணையும் பதிவு செய்து பிறகு அவருக்குத் தெரிவிக்கும்.

பிரௌசர் கடத்தி( ஹைஜாக்கர்) -நாம் ஏதேனும் ஒரு வலைத் தளத்தை நோக்கச் சுட்டினால் வேறு எங்காவது நம்மை அழைத்துச் செல்லும் .

கீலாக்கர்- நம் தட்டச்சினை அப்படியே பிறருக்குத் தெரிவிப்பது.

டையலர் - தானாகவே டையல் செய்து இணையத்தைத் தொடர்பு கொண்டு வேறுசில கொடிய நிரலிகள் நம் கணினியை தாக்க வழி ஏற்படுத்திக் கொடுப்பது .

பெரும்பாலும் ஆபாச வலைத் தளங்களைப் பார்ப்பவர்கள் கணினியானது ஸ்பைவேர் தொந்தரவுக்கு அடிக்கடி இலக்காகிறது .


ஸ்பைவேர் தாக்குதலின் அறிகுறிகள்


கணிணியின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும்.

பிரௌசரில் சில டூல்பார்கள் புதிதாக தென்படும். அவற்றை ஒழிக்கவும் முடியாது.

புதிது புதிதாக பாப்பப் விளம்பரங்கள் தோன்றும்.

நமது பிரௌசரின் செட்டிங்குகள் தானாக மாறியிருக்கும். நமது பிரௌசரின் முதல்பக்கம் மாறியிருக்கும்.

ஏதாவதொன்றை தேடுபொறியில் தேடினீர்களேயானால் வேறு முடிவுகள் வரும் .

இணைய தொடர்பு விடுபடும்.

மென்பொருள்கள் தவறாக இயங்க ஆரம்பிக்கும்.

கணிணியும் இயங்க மறுக்கும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

மரத்திலேறிய தலைவர்கள்

இந்தப் படத்திலுள்ள மரத்தில் ஒளிந்திருக்கும் தலைவர்களை கண்டுபிடியுங்கள்.



எத்தனை தலைவர்கள் உங்களுக்கு தெரிகிறார்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Sunday, March 25, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 9

ஹேக்கர்ஸ் :

நாயகன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "நீங்கள் நல்லவரா? கெட்டவரா?" என்று, அதைப்போல ஹேக்கர்ஸ் நல்லவரா? கெட்டவரா ? என்று வாதிடுவோர் கணினி உலகில் உண்டு. பொதுவாக ஹேக்கர்ஸ் என்றாலே கணிணி அல்லது கணிணிகள் நெட்வொர்க்கில் பாதுகாப்பு வளையத்தை உடைத்து , அத்துமீறி நுழைந்து ஏதாவது செய்ய நினைப்பவரையே குறிக்கும். ஆனால் பாதுகாப்பு வளையத்தை சோதனை செய்வதற்காக தாக்குபவர்களை ஹேக்கர்ஸ் எனவும் , தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களை கிராக்கர்ஸ் எனவும் கூறலாம். இனி இதில் வரும் ஹேக்கர்ஸ் எனும் சொல் தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களையே குறிக்கும்.

ஹேக்கர்ஸ் பொதுவாக நல்ல அறிவு உடைய சட்டத்தை மதிக்காத நபராகவே இருப்பர், சிலர் அரசின் மேலுள்ள கோபத்திலும் ஹேக்கர்ஸ் ஆக மாறுவதுண்டு . இவர்கள் தங்களுக்குள் இணைய குழுக்களை அமைத்துக் கொண்டு தங்கள் வழிமுறைகளை பரிமாறிக் கொண்டு நல்ல வலுப் பெற்று விடுகின்றனர். நல்ல திறமுடைய ஹேக்கர்ஸ் வழிமுறைகளையும், கருவிகளையும் வடிக்க, தொடக்க நிலையிலுள்ளோர் அதன் மூலம் அனுபவம் பெறுகின்றனர் .

ஹேக்கர்ஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் :

சம்மந்தமே இல்லாத நபரின் கணிணி காரணமே இல்லாமல் தாக்கி தகவல்கள் பாதிக்கப் படும்.

சில அரசு இயந்திரங்களின் வலைப்பின்னல் இது மாதிரி தாக்குதல்களுக்கு ஆளாகும். காரணம் என்று பார்த்தால் தாக்கியவரின் சமூகத்திற்கு எதிரான கோபம் இவ்வாறு திசை மாறியிருக்கும் .

மற்றவரின் அறிவுசார் தகவல்களைத் திருடவும் இவ்வாறு நுழைபவர்கள் முயல்வது உண்டு.

லாபநோக்கில் தாக்கும் ஹேக்கர்ஸ் நம் கணிணியில் டிரோஜன் குதிரையையோ, வைரஸையோ நம் கணிணியில் நிறுவி , நம் கணிணியை அடிமைக்கணிணி(ஜோம்பி)யாக மாற்ற வாய்ப்பு உண்டு .

அடையாளத் திருட்டு: நம் கணிணியில் உள்ள நமது தகவல்கள் திருடப்பட்டு, நமது வங்கி கணக்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

வருங்காலத்தில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு ஹேக்கிங்கை உபயோகப் படுத்தக் கூடும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Wednesday, March 21, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 8

ஸ்பைவேர் தாக்குதலை தவிர்க்கும் முறைகள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச ஆண்ட்டி ஸ்பைவேர் நிரலிகளில் ஏதேனும் இரண்டினை தரவிறக்கம் செய்து உபயோகப் படுத்தலாம் .

Microsoft AntiSpyware - http://www.microsoft.com/spyware/

Spybot Search & Destroy http://www.safer-networking.org

Ad-Aware SE Personal Edition http://www.lavasoft.de


பிரௌசரின் செட்டிங்கை உயர்த்துதல்;

இன்டர்னெட் எக்ஸ்புளோரர் இயக்குங்கள்.

அதில் டூல்ஸ் மெனுவைத் தேர்ந்து, இன்டர்னெட் ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.

அதில் செக்யூர்ட்டியைத் தேர்ந்தெடுங்கள்.

வெப் கன்டென்ட் சோன் தெரிவு செய்து, பாதுகாப்பின் அளவை கூட்டுங்கள்.

விண்டோஸ் அப்டேட்டுகளை அவ்வப்போது தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்.

ஸ்பைவேர் மாதிரிகளை(Signature) வலிமைப் படுத்துங்கள்.


வலைத்தளத்தில் உலாவ யோசனைகள்


நம்பிக்கை இல்லாத தளத்தில் இருந்து மென்பொருள்களை தரவிறக்கம் செய்யவேண்டாம் .

வலைதளத்தில் உள்ள சட்ட விதிகளைப் படித்து பின் தரவிறக்கம் செய்யவும்

பாப்பப் விண்டோ ஏதேனும் நீங்கள் எதிர்பார்க்காமல் வந்தால் உள்ளே உள்ள பொத்தான்களை தட்டவேண்டாம் . மேலே உள்ள பெருக்கல் குறியையே தட்டவேண்டும்.

தாக்குதல் இருப்பதை அறிந்தால் செய்யவேண்டியது:


அந்த மென்பொருளில் உள்ள நீக்கும் வழிமுறையையே உபயோகப்படுத்துங்கள் .

அப்பொழுதும் அது நீங்கவில்லை என்றால் கணிணியை சேப் மோடில் ஆன் செய்து (முன்னரே சொல்லியிருக்கிறேன்) நீக்கவேண்டும் .

விண்டோஸில் ரிஸ்டோர் என்னும் உதவியுடன் பழைய நாளிற்கு ரிஸ்டோர் செய்து பின் நீக்கலாம்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Monday, March 19, 2007

95வது செர்ரி மலர் விழா, வாசிங்டன் டி.சி.

நீங்கள் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு நம் ரிச்மண்ட் மாதிரி காரோட்டும்தொலைவில் இருந்தால், செர்ரி மலரும் நாட்களை கண்டிப்பாகப் பார்த்தே தீரவேண்டும். செர்ரி ப்ளாஸ்ஸம் என்று அழைக்கப்படும் விழாவைப் பற்றி விரிவாக இங்கே படிக்கலாம். ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.

புகைப்படத்திலும் திரைப்படத்திலும் பிடிக்கமுடியாத அழகு இந்த செர்ரி ப்ளாஸ்ஸம். ஒரு இலை கூட இல்லாத மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை பார்க்க கண்கோடி வேண்டும். ஒரு எச்சரிக்கை. காரோட்டும் தொலைவில் என்றதால் காரோட்டிக் கொண்டு போய்விட்டு வாகனப் போக்குவரத்து நெரிசலில் மாட்டி எங்களைத் திட்டவேண்டாம். ஏதாவது மெட்ரோ ஸ்டேஷனில் காரை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயிலில் போவது உத்தமம்.

Saturday, March 17, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 8

பித்தனின் எட்டாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/03/8.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com