Monday, March 26, 2007

மரத்திலேறிய தலைவர்கள்

இந்தப் படத்திலுள்ள மரத்தில் ஒளிந்திருக்கும் தலைவர்களை கண்டுபிடியுங்கள்.



எத்தனை தலைவர்கள் உங்களுக்கு தெரிகிறார்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Sunday, March 25, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 9

ஹேக்கர்ஸ் :

நாயகன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "நீங்கள் நல்லவரா? கெட்டவரா?" என்று, அதைப்போல ஹேக்கர்ஸ் நல்லவரா? கெட்டவரா ? என்று வாதிடுவோர் கணினி உலகில் உண்டு. பொதுவாக ஹேக்கர்ஸ் என்றாலே கணிணி அல்லது கணிணிகள் நெட்வொர்க்கில் பாதுகாப்பு வளையத்தை உடைத்து , அத்துமீறி நுழைந்து ஏதாவது செய்ய நினைப்பவரையே குறிக்கும். ஆனால் பாதுகாப்பு வளையத்தை சோதனை செய்வதற்காக தாக்குபவர்களை ஹேக்கர்ஸ் எனவும் , தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களை கிராக்கர்ஸ் எனவும் கூறலாம். இனி இதில் வரும் ஹேக்கர்ஸ் எனும் சொல் தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களையே குறிக்கும்.

ஹேக்கர்ஸ் பொதுவாக நல்ல அறிவு உடைய சட்டத்தை மதிக்காத நபராகவே இருப்பர், சிலர் அரசின் மேலுள்ள கோபத்திலும் ஹேக்கர்ஸ் ஆக மாறுவதுண்டு . இவர்கள் தங்களுக்குள் இணைய குழுக்களை அமைத்துக் கொண்டு தங்கள் வழிமுறைகளை பரிமாறிக் கொண்டு நல்ல வலுப் பெற்று விடுகின்றனர். நல்ல திறமுடைய ஹேக்கர்ஸ் வழிமுறைகளையும், கருவிகளையும் வடிக்க, தொடக்க நிலையிலுள்ளோர் அதன் மூலம் அனுபவம் பெறுகின்றனர் .

ஹேக்கர்ஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் :

சம்மந்தமே இல்லாத நபரின் கணிணி காரணமே இல்லாமல் தாக்கி தகவல்கள் பாதிக்கப் படும்.

சில அரசு இயந்திரங்களின் வலைப்பின்னல் இது மாதிரி தாக்குதல்களுக்கு ஆளாகும். காரணம் என்று பார்த்தால் தாக்கியவரின் சமூகத்திற்கு எதிரான கோபம் இவ்வாறு திசை மாறியிருக்கும் .

மற்றவரின் அறிவுசார் தகவல்களைத் திருடவும் இவ்வாறு நுழைபவர்கள் முயல்வது உண்டு.

லாபநோக்கில் தாக்கும் ஹேக்கர்ஸ் நம் கணிணியில் டிரோஜன் குதிரையையோ, வைரஸையோ நம் கணிணியில் நிறுவி , நம் கணிணியை அடிமைக்கணிணி(ஜோம்பி)யாக மாற்ற வாய்ப்பு உண்டு .

அடையாளத் திருட்டு: நம் கணிணியில் உள்ள நமது தகவல்கள் திருடப்பட்டு, நமது வங்கி கணக்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

வருங்காலத்தில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு ஹேக்கிங்கை உபயோகப் படுத்தக் கூடும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Wednesday, March 21, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 8

ஸ்பைவேர் தாக்குதலை தவிர்க்கும் முறைகள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச ஆண்ட்டி ஸ்பைவேர் நிரலிகளில் ஏதேனும் இரண்டினை தரவிறக்கம் செய்து உபயோகப் படுத்தலாம் .

Microsoft AntiSpyware - http://www.microsoft.com/spyware/

Spybot Search & Destroy http://www.safer-networking.org

Ad-Aware SE Personal Edition http://www.lavasoft.de


பிரௌசரின் செட்டிங்கை உயர்த்துதல்;

இன்டர்னெட் எக்ஸ்புளோரர் இயக்குங்கள்.

அதில் டூல்ஸ் மெனுவைத் தேர்ந்து, இன்டர்னெட் ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.

அதில் செக்யூர்ட்டியைத் தேர்ந்தெடுங்கள்.

வெப் கன்டென்ட் சோன் தெரிவு செய்து, பாதுகாப்பின் அளவை கூட்டுங்கள்.

விண்டோஸ் அப்டேட்டுகளை அவ்வப்போது தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்.

ஸ்பைவேர் மாதிரிகளை(Signature) வலிமைப் படுத்துங்கள்.


வலைத்தளத்தில் உலாவ யோசனைகள்


நம்பிக்கை இல்லாத தளத்தில் இருந்து மென்பொருள்களை தரவிறக்கம் செய்யவேண்டாம் .

வலைதளத்தில் உள்ள சட்ட விதிகளைப் படித்து பின் தரவிறக்கம் செய்யவும்

பாப்பப் விண்டோ ஏதேனும் நீங்கள் எதிர்பார்க்காமல் வந்தால் உள்ளே உள்ள பொத்தான்களை தட்டவேண்டாம் . மேலே உள்ள பெருக்கல் குறியையே தட்டவேண்டும்.

தாக்குதல் இருப்பதை அறிந்தால் செய்யவேண்டியது:


அந்த மென்பொருளில் உள்ள நீக்கும் வழிமுறையையே உபயோகப்படுத்துங்கள் .

அப்பொழுதும் அது நீங்கவில்லை என்றால் கணிணியை சேப் மோடில் ஆன் செய்து (முன்னரே சொல்லியிருக்கிறேன்) நீக்கவேண்டும் .

விண்டோஸில் ரிஸ்டோர் என்னும் உதவியுடன் பழைய நாளிற்கு ரிஸ்டோர் செய்து பின் நீக்கலாம்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Monday, March 19, 2007

95வது செர்ரி மலர் விழா, வாசிங்டன் டி.சி.

நீங்கள் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு நம் ரிச்மண்ட் மாதிரி காரோட்டும்தொலைவில் இருந்தால், செர்ரி மலரும் நாட்களை கண்டிப்பாகப் பார்த்தே தீரவேண்டும். செர்ரி ப்ளாஸ்ஸம் என்று அழைக்கப்படும் விழாவைப் பற்றி விரிவாக இங்கே படிக்கலாம். ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.

புகைப்படத்திலும் திரைப்படத்திலும் பிடிக்கமுடியாத அழகு இந்த செர்ரி ப்ளாஸ்ஸம். ஒரு இலை கூட இல்லாத மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை பார்க்க கண்கோடி வேண்டும். ஒரு எச்சரிக்கை. காரோட்டும் தொலைவில் என்றதால் காரோட்டிக் கொண்டு போய்விட்டு வாகனப் போக்குவரத்து நெரிசலில் மாட்டி எங்களைத் திட்டவேண்டாம். ஏதாவது மெட்ரோ ஸ்டேஷனில் காரை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயிலில் போவது உத்தமம்.

Saturday, March 17, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 8

பித்தனின் எட்டாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/03/8.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Wednesday, March 14, 2007

திருட்டானியா பிஸ்கோத்து

இப்போது சில காலமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கின்ற ஒரு நூதன திருட்டு "ரயில் பிஸ்கெட் திருட்டு". ரயிலில் பயணம் செய்கின்ற பயணிகளில் ஏமார்ந்தவர்களாக சிலறை குறி வைக்கின்றனர் சில பேர்வழிகள். மயக்கமருந்து கலந்த பிஸ்கெட் கொடுத்து அவர்கள் மயங்கிய பிறகு அவர்கள் பணத்தையும் பொருட்களையும் அபேஸ் செய்யும் பேர்வழிகள் பெருகி வருகின்றனர். நம் ஊர் ரயில் பயணமே அலாதி. எப்போதும் கும்பல், பேச்சு, ஓசைகள், பயணிகள் நடமாட்டம் இப்படி கலகவென்று இருக்கும். யாராவது பேசிக்கொண்டே இருப்பார்கள். சிலர் கதை அடிச்சுக்கிட்டே இருப்பார்கள். இப்படி இருக்கும்போது இந்த பிஸ்கெட் கொள்ளைக்காரர்கள் எப்படித்தான் காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்களோ. அது என்ன மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிப்பது? ஒரு "மயக்க இட்லி", "மயக்க வடை", "மயக்க தோசை", "மயக்க சமோசா" இப்படிப்பட்ட பொருட்களை கொடுக்கமாட்டார்களா? ஒரு வேளை பிஸ்கெட் பாக்கெட் மிகவும் வசதியோ? இதற்காகவே பிரத்யேகமான முறையில் "திருட்டானியா" பிஸ்கெட்களை எப்படித்தான் தயாரிக்கிறார்களோ. இவர்கள் திருடும் போது மற்ற பயணிகள் என்ன செய்வார்களோ? ஒரு வேளை திருடர்கள் கம்பார்ட்மெண்ட் முழுதும் இலவச பிஸ்கெட் சப்ளை செய்து விடுவார்களோ? எல்லா கேஸ்களிலும், ஒரு ஸ்டேஷனில் ஏறி, பிஸ்கெட் கொடுத்து மயக்கி திருடிவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறார்கள். நம்ம லாலுஜி தான் இதை ஒடுக்க ஒரு நல்ல யோசனை செய்யவேண்டும். ரயிலில் இனி யாரும் பிஸ்கெட் திங்கக்கூடாது. ஸ்டேஷனில் பிஸ்கெட் விற்கக்கூடாது என்று சட்டம் போட்டாலும் போடலாம். இல்லை, ஒட்ச கட்ல, அவல், பொரி, புண்ணாக்கு இப்படித்தான் சாப்பிடலாம் என்று ரூல் கொண்டு வந்தாலும்
வரலாம். ஆனால், இந்த "திருட்டானியா" திருட்டு நடந்துக்கிட்டே இருக்கு.

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 6

ஸ்பைவேர்

ஸ்பைவேர் என்பது நாம் அழைக்காமல், தேவையில்லாமல் , மறைவாக, நம்மை பாதிக்கும் வகையில் நம் கணினியை தாக்கி நமது விபரங்களை நாம் அறியாமலே வெளியாருக்குத் தெரிவிக்கக் கூடிய கணினி மென்பொருள்கள் .

ஸ்பைவேரினால் ஏற்படும் பாதிப்புகள்:

நம்மை அறியாமலே நம் கணிணியை வந்தடைந்து, நமது விபரங்களை கேள்விக் குறியாக்கிவிடும்.

நம்மை எரிச்சலடைய வைக்கும் வகையில், விளம்பரங்களை அவ்வப்போது திரையில் இடும்.

நமது கணினியின் நினைவகத்தில் இடத்தை பிடித்துக் கொள்ளும். இதனால் நம் கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்பு உண்டு.

சில ஸ்பைவேர் நிரலிகள் நமது கீஸ்ட்ரோக்களைக் கூட சேகரித்து வெளியாருக்கு அனுப்பி விடும் . இதனால் நம் சங்கேத வார்த்தைகள் (பாஸ்வேர்டு ) அறியப் பட்டுவிடும்.

சில ஸபைவேர் நிரலிகள், ஸ்பாம் செலுத்தும் கணினியாக நம்முடயதை மாற்றி விடும் நிரலிகளை நம் கணினியில் நிறுவும் அபாயமும் உள்ளது.

சில ஸபைவேர் நிரலிகள் நம் பிரௌசரில் செட்டிங்கை மாற்றி நம் பிரௌசர் துவங்கும் போதெல்லாம் வேறு ஏதேனும் வலைப்பக்கத்திற்கு நம்மை கடத்தும் .

சில நம் கணினியில் நன்றாக ஊடுருவி, நீக்குவதற்கு கடினமானதாக மாறிவிடும்.

ஸ்பைவேர் எவ்வாறெல்லாம் நம் கணிணியை வந்தடைகிறது:


சில வலைத்தளங்களை பார்க்கும் போதெல்லாம் தானாக அவற்றிலிருந்து ஸ்பைவேர் நம் கணிணியை வந்தடையும் .

நமக்கு பரிசு இருப்பதாக ஆசைக்காட்டி ஸ்பைவேர் உள்ள சுட்டிகளைத் தட்டத் தூண்டி விடுவார்கள் .

சில பைரேட்டட் மென்பொருள்களில் ஸ்பைவேர் இருக்க வாய்ப்புண்டு . சில தரவிறக்க மென்பொருள்களிலும் ஸ்பைவேர் இருக்க வாய்ப்புண்டு. kazaa இதற்கு நல்ல உதாரணம் .

மின்னஞ்சல் இணைப்புகளில் ஸ்பைவேர் இருக்க வாய்ப்பு உண்டு.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

Tuesday, March 13, 2007

கவிதைப் போட்டி

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி! இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில் 'அன்புடன்' குழுமம், தன் இரண்டாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சிறந்த பரிசுகளுடன், கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. விவரங்களுக்கு:

http://priyan4u.blogspot.com/2007/03/2.html

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கவிநயா.

Sunday, March 11, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 7

பித்தனின் ஏழாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/03/7.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Saturday, March 10, 2007

நாமெல்லாம் ஜுஜுபி!

நாமெல்லாம் ஏதோ பெரிய வஸ்தாதுகள் என்று நினைத்துக் கொள்ளலாம். எல்லாம் நம்ப பேட்டையில்தான். ஜில்லா கத்திரிகளின் ஜம்பம் சொந்த ஜில்லாவில்தான். இங்கே பாருங்கள், பூமி என்கிற ஜில்லா கத்திரி, பேட்டை பிஸ்தா!




சொந்த ஜில்லாவில் இருந்து ஒரு வட்டம் வெளியே வந்தவுடனே, பாருங்கள். நிலைமை எப்படி போகிறது என்று?



அதை விட்டு இன்னும் கொஞ்சம் வெளியே வந்து சூரிய ஜோதியில் கலந்த உடனே, பாருங்கள், கடுகாகிவிட்டோம்.


இன்னோரு பெரிய வஸ்தாது அருகில் போய் பார்த்தால், துக்குளியோண்டு, துக்குளியோண்டு என்பார்களே - அதாகிவிட்டோம்.



அதைவிட ஒரு பெரிய பாஷா இருக்கிறார். அவர் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களிலேயே, பிரகாசத்தில் பதினைந்தாம் இடம் வகிக்கிறாராம். நம்மூரில் இருந்து ஆயிரம் ஒளிவருடங்களுக்கு மேலான தொலைவில் இருக்கிறார். அவர் முன்னே, நாமெல்லாம் ஜுஜுபி! அதனால்தான் கடுகு சிறுத்தாலும், மூர்த்தி சிறிது என்றெல்லாம் பழமொழி சொல்லி பஜனை பாடிக்கொண்டிருக்கிறோம். வேறு ஆள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும்வரை நாம்தான் ராஜா! ஆனால் என்ன ஜுஜுபி ராஜா!!