Friday, October 27, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 4

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என்னுடைய கிறுக்கல்களை http://pkirukkalgal.blogspot.com என்கிற ப்ளாக்கில் படித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் (அதாங்க comments) தரவும்.

எனது நாலாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2006/10/4.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Monday, October 23, 2006

யார் தலை(வர்)?


தொண்டர்களென்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும். தலைவர் சிலைக்கு மாலை போடலாம். ஆனால் தலைவர் தலையே தெரியாமல் மாலை போட்ட தொண்டர்களின் அபிமானத்தை என்ன சொல்வது?

Saturday, October 21, 2006

கூட்டாங்'ஸ்

அது என்ன கூட்டாங்ஸ்? இந்த வலைப்பதிவில் எழுதும் அன்பர்களின்(சுருக்கமாக பிளாகிகள்) கூட்டு முயற்சியான ஒரு கூட்டாங்கதை, ஒரு கூட்டாங்கவிதை - சேர்த்து சுத்தத் தமிழில் கூட்டாங்ஸ். ஆனால் கூட்டாங்கவிதை இந்த முறை ஒருவர் படைப்புத்தான். கூட்டாங்கதைதான் உண்மையில் கூட்டாங்கதை. நான் எங்கேயோ ஆரம்பித்ததை அனைவரும் கடத்திச் சென்று கடைசியில் தமிழீழத்தில் விட்டு விட்டார்கள்! நீங்களும் படித்துப் பார்த்து கொஞ்சம் திட்டினால் எங்களுக்கெல்லாம் சற்று உற்சாகமாக இருக்கும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Friday, October 20, 2006

தீபாவளி

போராடி கிடைத்த போனஸ்
பளபளக்கும் பட்டாடை
பலவிதத்தில் பணியாரம்
படபடக்கும் பட்டாசு
பழங்கதையில் புதுப்படம்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் பாமரனின் தீபாவளி

மினுமினுக்கும் மோதிரம்
கைகனக்கும் கடிகாரம்
ஜொலி ஜொலிக்கும் வேட்டி
பளபளக்கும் மோட்டார்பைக்
பல்லுடைக்கும் மைசூர்பாக்
படபடக்கும் மைத்துனன்
பரபரக்கும் மாமியார்
பல்லிளிக்கும் மாமனார்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் புது மாப்பிள்ளையின் தலை தீபாவளி


சிடுசிடுக்கும் மாப்பிள்ளை
சரிக்கட்டும் செல்லப்பெண்
சிக்கல் தீர்க்கும் மனைவி
சிரித்துக்குலுங்கும் பேத்திகள்
சிலுமிஷம் செய்யும் பேரன்கள்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை

வாசலில் நின்று பயமுறுத்தும் மளிகைக்கடைக்காரர்
வழியில் மடக்கி வாதாடும் தையல்காரர்
விட்டு விட்டு தலையை சொரியும் தபால்காரர்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை
தபாலில் வந்து மதிமயக்கும் மாஸ்டர் கார்ட் பில்
தவராமல் வந்து விழி பிதுக்கும் விசா கார்ட் பில்
இது தான் தீபாவளி என்பதோ?
இது பாமரனின் தீபாவளியல்ல
இது புது மாப்பிள்ளையின் தலை தீபாவளியுமல்ல
இது தலைவரின் தீபாவளி
ஆம் குடும்பத்தலைவரின் தீபாவளி!


உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
ப்ளாகிகளே! மேலும் மேலும் ப்ளாகுக!

Tuesday, October 17, 2006

வலையில் சுட்டவை

தமிழ்நாட்டு அரசியல் YouTubeல் இணையம் சிரிக்கிறது (சந்தியெல்லாம் இந்த இன்டெர்நெட் உலகில் ரொம்ப சிறுசுங்க)



அரசியல் கிடக்கட்டும். இரண்டரை வயது வாண்டு தபலாவில் என்னமாய் கலக்குகிறான் பாருங்க!

படித்ததில் பிடித்தவை

"அரண்மனை தையல்கரரிடம் மன்னர் ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்திருக்கராமே?"
"ஆமாம், முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே மாதிரி தெரியும்படி சட்டை தைக்கச் சொல்லியிருக்கார். போரில் புறமுதுகிட்டு ஓடும்போது மானக்கேடா இல்லாம இருக்கத்தான்!"


நன்றி: ஆனந்த விகடன்

Monday, October 16, 2006

கணவன் மனைவி ஜோக்

மனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
கணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்
மனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
கணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க

தருமி
கடைகளிள் பொருள்கள் வாங்கும் போது நமக்கு கொடுக்கும் பைகளிள் உள்ள படங்கள் சில













































பிளாகிகளின் கூட்டாங்கதை!

ரிச்மண்ட் பிளாகிகளின்(ரமேஷின் பிரயோகம்) கூட்டு முயற்சியில் ஒரு கூட்டாங்கதை உருவாகிறது. மெகா சீரியல் மாதிரி போகும் கவலைக்கிடமான அறிகுறிகள் தோன்றுகின்றன. பார்க்கலாம் எப்படி போகிறதென்று. கூடிய விரைவில் பார்ட்டிகளில் செல்வி, மெட்டிஒலியைவிட கூட்டாங்கதை பற்றி விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

பித்தன், பரதேசி, நீர்வைமகள்,தருமி, ஓம்கார், ஜெயகாந்தன், ஷன், கவிநயா, நடராஜ மூர்த்தி மாமரத்துப்பட்டி, முரளி, ரவி, அஷோக்,தமில் பிளாகர் என்று சபை களைகட்டுகிறது. அனைவரும் அமைதிப்படையிலேயே தங்கிவிடாமல், சற்று கொஞ்சம் பதிவுகளை வீச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற வார இறுதியில் ஒரு பூஜையில் காதில் விழுந்தவை:

"ஜெயகாந்தன் என்ற பெயர்ல யாரு எழுதறது?"
"ஜெயகாந்தன்தான்".

"நிஜமா சொல்லுங்க, நீங்கதானே பித்தன்".
"யோவ், யார பாத்து பித்தன்ற?".
"இல்லண்ணா, ப்ளாக்ல எழுதறது நீங்கதானே?"
"ப்ளாகா? யாரவர்??"

"எனக்கு நிச்சயமா தெரியும், நாகுதான் பரதேசின்னு. சும்மா பாவ்லாகாக நாகு பேர்ல பரதேசி பதிவில் கமெண்ட் வேற எழுதறான். சுத்தமா வேல இல்ல போல இருக்கு".

"பித்தன் முத்துதான்"
"இல்லய்யா, அவர்தான் அஷோக்ன்ற பெயர்ல எழுதராரே"
"அது அஷோக் முத்துய்யா"
"என்னய்யா குழப்பற"

"ஓம்கார்ன்ற பேர்ல எழுதறது யாரு?"
"முதல்ல எழுதட்டும். அப்பறம் கண்டுபிடிக்கலாம்"

"ரவின்ற பேர்ல எழுதறது யாரு?"
"ரவிதான்"
"எந்த ரவின்னு கேட்டன்யா"
"முதல்ல எழுதட்டும். அதயும் அப்பறம் கண்டுபிடிக்கலாம்"

"RTS Blog தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி ஆயிடிச்சி"
"ஏன்?"
"படிக்கறவங்கள விட அதுல எழுதறவங்கதான் ஜாஸ்தி"


அதுக்குமேல தாங்க முடியவில்லை. உட்டேஞ்சவாரி! உலகத்து அனைத்து மூலைகளிலும் படிக்கப்படுவது நமது பதிவுகள். சான்று? இதோ!

அமேயாவின் ரங்க பிரவேசம்!


சாரதா, பாபு ஜம்மி தம்பதியினரின் மகளான அமேயா ஜம்மி நவம்பர் 5ம் தேதி மதியம் 3.30 மணிக்கு காட்வின் பள்ளியில் ரங்க பிரவேசம் செய்கிறாள். குச்சிபுடி நாட்டிய ரசிகர்கள் அனைவரையும் ஜம்மி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறார்கள்.